Monday, January 31, 2011

கனவை செயல்படுத்துவது கடினம்


* நீங்கள் செய்யும் ஒரு செயல் ஒருவருக்கு நல்லதாகவும், இன்னொருவருக்கு கெட்டதாகவும் தெரியும். நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ, அதை வைத்துத் தான் அந்தச் செயலின் நன்மை தீமை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இயற்கை ஒரு போதும் எந்த மனிதனிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.


* மனிதர்கள் கனவு காண்பது சுலபம். கனவு காண்பதற்குப் போராட்டம் தேவையில்லை. வலியோ வேதனையோ இல்லை. ஆனால், கனவை நிஜமாக்கிப் பார்க்க எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.


* பணிவு என்பது தலைகுனிவு அல்ல. பணிவினை பலவீனத்தின் அடையாளமாக நீங்கள் கருதலாம். உண்மையில் பணிவு மேன்மையான கவுரவத்தைத் தரும். அதுதான் உங்களின் அசைக்க முடியாத பலமாக மாறிவிடும். நாளடைவில் முன் எப்போதும் இல்லாததை விட சக்தி மிகுந்தவனாக நீங்கள் உணர்வீர்கள்.


* ஒரு கருவி ஒழுங்காக இருந்தால் தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும். உங்கள் மனமும் ஒரு கருவி தான். அது அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால் தான் உங்களால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும். உள்ளத்தில் மகிழ்ச்சியை முழுமையாக உணர்பவர்கள், சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவரவர்களின் திறமைக்கேற்றபடி முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.


* வாழ்க்கையின் அழகு நீங்கள் என்ன செயலைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. செய்யும் செயலில் உங்களை எந்த அளவுக்கு இதயப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது.

No comments: