Friday, October 29, 2010

வா....

























காதல் வந்தால் சொல்லி அனுப்பு



படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
பாடலாசிரியர்: வைரமுத்து

Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு

உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

Thursday, October 28, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்






திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் என்று பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்.சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ ஒட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் ஒட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Wednesday, October 27, 2010

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க

* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.

* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல்
கொஞ்சம் மேலே தூக்குங்கள்.

* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.

* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்

* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்

* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.

கவனம்:

* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள்,
வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.


உத்தானபாத ஆசனம்






நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில்
காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும்.

இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்)
தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி
மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும்.

ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.

பலன்கள்:

அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம்
பெற்றுநன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி
நரம்புகளும்தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப்
பின் இவ்வாசனம்செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.

குறிப்பு:

உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2
அம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2
அடி உயரலாம். 2 அம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து
உயரலாம்.

Monday, October 25, 2010

யார் அந்த பெண் தான்....


படம் : பாஸ் (எ) பாஸ்கரன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:
நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஹரிசரண்
வெளியான ஆண்டு : 2010



யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முனனால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிக்கிராளோ

கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தாள்


யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்

அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்

கண்ணாடி வளையலை போலே
கையேடு நானும்பிறக்கவே துடிப்பேன்
கல் தீண்டும் கொலுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால்

யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே


நான் கொஞ்சம் பார்த்தாள் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்

என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தாள் மறைப்பாள்

மெய்யாக பொய்யாக தான் நடிப்பாள்

பெண் நெஞ்சம் புதிர் அதை போல எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்


யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

Friday, October 22, 2010

தெய்வம் இல்லையெனும்போது...


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்:
யுகபாரதி
பாடியவர்கள் :
மது பாலகிருஷ்ணன்
வெளியான ஆண்டு : 2010


தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
இதுவரையில் எதைக்கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
—-
ஒரு நாளினை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்கு பார்ப்பது ஓ….
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே
உனை எதை தந்து மெய்ப்பிப்பது

அழுதிடக்கூடாதென்று அறிவுரை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தர தூக்கம் என்ன ஆண் தாயே

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ
தினம் பேசுவாய் அது என்ன ஆனது… ஓ….
தலை மேல் சுமை இருந்தாலும்
புன்னகை தருமே இதழ் அது எங்குப்போனது

நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்
நடுவினிலே முந்தி சென்றால் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்குவாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?

Thursday, October 21, 2010

அல்லா ஜானே அல்லா ஜானே.....





படம் : உன்னை போல் ஒருவன்
இசை : சுருதி ஹாசன்
பாடலாசிரியர்:
கமல்ஹாசன் , மனுஷ்யபுத்திரன்
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வெளியான ஆண்டு : 2009





அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ
நன்மைகள் தீமைகள் யார் தான் அறிவார்
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே
வேட்டை முடிந்து ரோம்புதல் எங்கே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரிருள் இன்று நிலவினை திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா

வெல்பவர்கள் எல்லாம் போர்களில் இங்கே
விழுந்தவர்கள் எல்லாம் பெயர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவென்றும் இல்லா அறிவின், பாதை

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே