Monday, January 24, 2011

உலகத்தைத் தெரிந்துகொள்ள



ஒரு சமயம், புத்தரின் பிரதம சீடனான ஆனந்தன் அவரிடம், ""குருவே! நான் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எப்படி?'' என்று கேட்டான்.
அப்போது புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அவர், ""இந்த மரத்தில் ஏறி தழை பறித்து வா!'' என்றார்.
ஆனந்தன் அந்த மரத்தின் மீதேறி, தனது கைகொள்ளும் அளவிற்கு தழைகளைப் பறித்து, புத்தரின் முன்னே வந்து நின்றான்.
""ஆனந்தா! இப்போது உன் கையில் என்ன உள்ளது?'' என்று கேட்டார் புத்தர்.
""தழைகள் குருவே!''
""மரத்தில்?''
""நிறைய தழைகள் குருவே!''
""ஆனந்தா! இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே! அது இதுதான். நான் உனக்கு போதித்தது, உன் கையில் உள்ள தழைகளின் அளவுதான். நான் உனக்கு போதித்தது, மரத்தில் உள்ள தழைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்க இயலாது. ஆகவே, நீயேதான் உன் அனுபவத்தால் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்!'' என்றார் புத்தர்.
சாதாரண இலை தழைகளைக் கொண்டும் போதிக்கக்கூடிய திறமை தன் குருவுக்கு மட்டுமே உண்டு என்பதை நினைத்து மிகப் பெருமிதம் அடைந்தான் ஆனந்தன்.

No comments: