Saturday, March 26, 2011

Behind the sun



பிரேசில் இயக்குனரான வால்டேர் செலஸ் எனது அபிமான இயக்குனர்களில் ஒருவர். அவருடைய சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற அதி அற்புதமான திரைப்படத்தை பார்த்ததில் இருந்து நான் அவரது ரசிகனாகிவிட்டேன். ( அந்த திரைப்படத்தை பற்றி விரைவில் பதிய இருக்கிறேன்.). அவரது படங்களை தேடித் பார்க்கும் ஆர்வத்தை அந்த திரைப்படம் தான் என்னை வளர்த்துவிட்டது. அவ்வாறு தேடியதில் கிடைத்தது தான் இந்த திரைப்படம். இஸ்பானிய மொழியில் இந்த திரைப்படம் இருந்தாலும் கலைக்கு மொழி இல்லையே!.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ரோடு மற்றும் மின்சாரம் இல்லாத கிராமம் அது. கரும்பை விளைவித்து அதிலிருந்து வெள்ளம் தயாரிக்கும் குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பத்துக்கும் உள்ள நில தகராறு தான் கதையின் மய்யப் பிரச்சினை. பக்கு என்ற சிறுவன் தான் படத்தின் மய்யப் புள்ளி.
பரம்பரை நில தகராறில் இரு குடும்பங்களுக்கும் பெரும் இழப்புகள். தன் அண்ணனை கொல்கையில் அவரது சட்டையில் இருக்கும் ரத்தக்கறை, சூரிய சூட்டில் மஞ்சள் ஆகும்வரை காத்திருந்து, பழி வாங்க புறப்படுகிறான் டோனியோ. தனக்கு வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும் குடும்ப பாரம்பரிய கவுரவத்தை காக்க அவன் அந்த எதிரி குடும்பத்தின் மூத்த மகனை கொன்றே ஆகவேண்டும். அதன்படியே செய்துவிட்டு அந்த குடும்பத்தின் மூத்தவரான கண் தெரியாதவரின் அருகே தன் தந்தையுடன் சென்று ஆறுதல் சொல்லி, இத்துடன் முடித்து கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவரோ அவனது கையில் மரணக் கயிற்றை கட்டி, தன் மகனின் ரத்தம் சூட்டில் மஞ்சளாகும்வரை மட்டுமே அவனுக்கு நேரமிருக்கிறது என்றும், அடுத்த பௌர்நமியில் அவனது உயிர் அவனது உடலில் இருக்காது என்றும் கூறி அவனை அனுப்பி விடுகிறார்.( கொல்வதில் கூட ஒரு ஞாயம்.). அண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறான் சிறுவன் பக்கு. அண்ணன் வந்ததும் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். அவனது அன்னைக்கும் தான். எனினும் அவனது தந்தை டோனயோ அடுத்த பௌர்நமியில் பழி வாங்கப் படுவான் என சொன்னதும், அவர்கள் மகிழ்ச்சி வடிகிறது. வழக்கம் போல அடங்கிப் போகும் அம்மா.


அவர்கள் ஊருக்கு வித்தை காட்ட வரும் கிளாரா மற்றும் சலுச்டிநோவால் அவர்கள் வாழ்கை புரட்டிப் போட படுகிறது. கிளாரா பக்குவிர்க்கு ஒரு புத்தகம் பரிசளிக்க, படிக்க தெரியாத பக்கு அந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்தே கதையை புனைந்து தனக்கு தானே கதை சொல்லிகொள்கிறான். அந்த புத்தகத்தில் இருக்கும் கடல் தேவதையாக கிளாரவை உருவகப்படுத்திக் கொள்கிறான். வெல்லம் விற்க நகரத்திற்கு செல்லும் டோனயோ கிளாரவை கண்டு காதல் கொள்ள, அவர்களது வித்தையை பார்க்க ஆவலாய் உள்ள சிறுவன் பக்குவை இரவு அப்பாவிற்கு தெரியாமல் கூட்டி சென்று காட்டி பக்குவை மகிழ்விக்கிறான். இதன் மூலம் தனது தந்தையின் கௌரவ பறம்பார்யாத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதற்க்கு பக்கு உடந்தையாய் இருக்கிறான். பக்குவிற்கு தனது சகோதரன் டோனயோ மேல் உயிர்.

புத்தகத்தின் படி கடல் தேவதையும் கதாநாயகனும் கடலில் சென்று மகிழ்வாய் வாழ்வதாய் கதை முடிகிறது. பக்கு அந்த கதாநாயகனாய் டோநியோவையும் கடல் தேவதையாய் கிளாராவையும் உருவாக படுத்தி பார்க்கிறான். எனினும் வழமை போல டோனயோ மறு பௌர்ணமிக்குள் கொல்லப்பட்டால் கதை முட்ட்ருபெறாது என உணர்ந்து அடுத்த பௌர்ணமையில் கிளாராவும் டோநியோவும் தனிமையில் லயித்து இருக்க, மழை பொழிய டோநியோவின் உடைகளையும் தொப்பியும் போட்டுக் கொண்டு டோநியோவை கொல்ல வரும் எதிரி குடும்பத்தின் வாரிசுக்குத் தானே டோனியோ என காட்டி கொல்லப்பட்டு இறந்து போகிறான். பக்குவின் தாய் தந்தையர் கதறி அழ,பக்குவின் ஆசைப்படி டோனயோ தன் குடும்பத்தை விட்டு பாரம்பரிய பழிவாங்கலை விட்டுவிட்டு கடற்கரை சென்று கிளாராவிற்காக காத்திருப்பதாக படம் முடிகிறது.


படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல படம் பிடித்திருக்கும் வால்டேர் கார்வலோ வின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியும் அள்ளிக் கொண்டு போகிறது. பதின் வயது சிறுவனாக நடித்திருக்கும் பக்குவின் நடிப்பும் அபாரம்.

ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்து வன்முறைக்கெதிராக இப்படத்தை செதுக்கி இருக்கிறார் வால்டேர் செலஸ்.

2001 இல் வெளியான இப்படம் கோல்டன் க்ளோப் பரிந்துரை உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறது.

Everbodys Fine



தன்னுடைய மகன்/ள் (கள்) வருகைக்காக வீ்ட்டை ஒழுங்குபடுத்தி காத்திருக்கிறார் பிராங்க். நாம் எதிர்பார்த்தது போலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வராமலிருந்து விடுகிறார்கள். 'அட நாதாரிகளா, சரி. நானே உங்களைப் பார்க்க வரேன்' என்று ஆச்சரிய வருகையை அவர்களுக்கு அளிக்க புற்ப்பட்டு விடுகிறார். அவரவர்களின பிரச்சினையில் இவரை எல்லோருமே தவிர்க்க முயல்கின்றனர் என்பது புரிகிறது. ஆயாசத்துடன் திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு எல்லோருமே வந்து சேர விக்ரமன் பட பின்னணி இசையுடன் கிறிஸ்துமஸ் விருந்தை அனைவரும் உண்ண படம் ஜூம் அவுட் கோணத்துடன் நிறைகிறது.

இத்தனை SUBTLE ஆக ராபர்ட டி நீரோ நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தன் மனைவியிடம் மிக இயல்பாக பழகிய மக்கள்ஸ் தன்னிடமிருந்து ஏன் விலகிப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தகப்பனும் நெருடலான வலியாக உணர்கிற சமாச்சாரத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் பயண்த்தில் எதிர் குண்டு பெண் பயணியிடம் வம்படியாக தான் செய்து கொண்டிருடிருந்த பணியை நினைவு கூர்வது சுவாரசியமான காட்சி. சமகாலத்து வயதான தோற்றத்துடன் உள்ள தந்தை, குழந்தைகளுடன் உரையாடும் அந்த விசாரணைக் காட்சியும் நன்று.

வயதான தகப்பனை புனிதப்பசுவாகவும், வாரிசுகளை வில்லர்களாகவும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்காமல், அவரவர்கள் வாழ்க்கைகளை பிரச்சினைகளுடன எதிர்கொண்டிருக்கும் யதார்த்தத்தை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற செய்தியையும் இந்தப்படம் முன்வைக்கிறது
.

Tulpan


TULPAN (2008).கஜகஸ்தான் நாட்டுத் திரைப்படம்.

பாலைவனப் புயல் அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கும் மிக வறண்ட நிலப்பரப்பு. ஆட்களே அபூர்வமாக நடமாடும் உள்ளார்ந்த கிராமப்பகுதியில் ஆட்டு மந்தையை கூலிக்காக மேய்த்துப் பிழைக்கும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தைச் சார்ந்து நிற்கும் ஒரு இளைஞன். திருமணமாகியிருந்தால்தான் அவனுக்கென்று தனியாக ஒர் ஆட்டு மந்தையை தரமுடியும் என்று உரிமையாளர் கூறிவிடுகிறார். அந்தக் கடுமையான நிலப்பரப்பின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரே மணவயதுப் பெண் TULPAN. தான் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ராணுவ சாகசங்களை இளைஞன் கூறி அந்தக் குடும்பத்தை கவர முயன்றாலும், மிகப் பெரிய காதுகளையுடைய அவனை பெண்ணுக்கு பிடிக்காமல் போகிறது.

அந்த மந்தையின் ஆடுகள் பிரசவங்களின் போது மர்மமாக இறந்து போகின்றன. உரிமையாளர் கடிந்து கொள்வதால் மன உளைச்சலில் இருக்கும் குடும்பத்தலைவன், வீட்டின் கூடுதல் சுமையாக இருக்கும் தனது மச்சானை அவ்வப் போது கடிந்து கொள்கிறான். இருவருக்குமிடையில் ஏற்படும் மனக்கச்ப்பின் காரணமாக இளைஞனின் சகோதரியான குடும்பத்தலைவி வருத்தமடைகிறாள். ஒரு உச்ச வாக்குவாதத்தில் இளைஞன் மனமுடைந்து நகரத்தை நோக்கி புறப்படுகிறான்.

தங்கள் வீட்டுப் பெண் மணமாகியிருக்கிற இடத்தில் தங்க நேர்வதைப் போன்ற சங்கடமான விஷயம் வேறு எதுவுமேயில்லை. கணவனைச் சார்ந்திருக்கிற பெண் தன்னுடைய சகோதரனின் சங்கடத்தைக் காணச் சகியாமலும் அதற்காக கணவனிடம் அதிகம் போராட முடியாமலிருக்கும் சூழலும் அதையும் விட கொடுமையானது. கடுமையான பணிக்குப் பிறகு திரும்பியிருக்கும் கணவனை ஆற்றுப்படுத்த மனைவி இயல்பாக உடல்உறவிற்கு ஆயுத்தமாவதும், அந்தச் சமயத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைவதால் இருவரும் விலகுவதும், கூட்டுக்குடித்தனத்தில் வசித்த ஒவ்வொருவரும் இந்தச் சங்கடமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

இந்தப் படத்தின் மிகச்சிறப்பானதாக நான் கருதுவது, அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. ஆட்டுக்குட்டியொன்று பிரசவத்தில் இறந்து போவதும், பின்னர் ஒரு சூழ்நிலையில் இளைஞன் தன்னந்தனியாக ஒரு ஆட்டின் பிரசவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் மிக சாவகாசமாக நேரடி ஒளிபரப்பு போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட காதுகளின் காரணமாக திருமணமாகவில்லையே என்று அந்த இளைஞன் வருத்தமடைவதும் ஆனால் சற்றும் மனம் தளராமல் மணப்பெண்ணை எப்படியாவது கவர முயல்வதும் சுவாரசியமான காட்சிகள். நகரத்தில் செட்டிலாகி விடுவதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இளைஞனின் நண்பன், பெரிய மார்புகள் கொண்ட நடிகைகளின் படங்களின் துணையுடன் அதற்கான கனவில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தின் கவாச்சி தரும் பிரமிப்பை எப்படியாவது சுகிக்க வேண்டும் என்று கனவு காணும் பெரும்பாலான கிராமத்து இளைஞர்களை அவனது பாத்திரம் எதிரொலிக்கிறது.ஒட்டகக் கடியினால் துன்புறும் மருத்துவரின் காட்சிகள் சொற்ப நேரமே என்றாலும் நகைச்சுவையாக இருக்கிறது.

இறுதிக் காட்சி மிக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

இதில் வரும் குழந்தைகள் அதிகப்பிரசங்கத்தனமாக இல்லாமல் அவர்களுக்கேயுரிய பிரத்யேக அப்பாவித்தனங்களுடன் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். 'பசங்க' திரைப்படத்தின ஒரு குறிப்பிடத்தக்க காட்சி (மாத்திரம்) நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டுச் சிறுவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, மிக குறைந்த வயதுடைய அவனின் தம்பி, சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது. இத்திரைப்படத்தில் அது போல் பல காட்சிகளை உணர்ந்தேன். படத்தின் துவக்கத்திலேயே நிகழும் அந்த நீளமான காட்சியமைப்பின் மூலம் ஒளிப்பதிவாளரை நாம் சிலாகிக்கலாம்.

குடும்பத்தலைவியின் பாத்திரத்தை தவிர மற்ற அனைவருமே முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. 2009 அகாதமி விருதுக்காக அந்த நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மிக அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.

Shawshank Redemption



சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்பது படத்தின் உட்கரு. ஆனால் எனக்கு படத்தில் பிடித்தது- ஒரு மனிதன் வாழ்க்கையில் எதை இழந்தாலும், 'நம்பிக்கை' இழக்காமல் இருந்தால் போதும் என்பதே. மற்றும் ஞயாயம் இறுதியில் வென்றே தீரும் என்ற இயற்க்கையின் தீர்ப்பு. மற்றும் விடா முயற்சி.. தன்னம்பிக்கையின் சக்தி.. இன்னும் பல 'மற்றும்'கள்.. இத்தனை விஷயங்களையும் போகிற போக்கில், அலுக்காமல், விளக்காமல் சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள்.


முழுக்க முழுக்க சிறைச்சாலை தான் களம். சிறையின் நுட்பமான அவலங்களை, அப்பட்டமாக நமக்கு காட்டுகிறது படம். முதலில், (கதையின் நாயகன் போலவே) எல்லாவற்றையும் ஒரு வித சந்தேகத்துடன்/வெறுப்புடன் பார்க்கும் நாம், போக போக சிறையின், கைதிகளின் கூட்டாளிகளாகி விடுகிறோம். அவர்களை விறும்ப ஆரம்பிக்கிறோம்.

ஒரு களத்தின் நுணுக்கமான விஷயங்களை ரத்தமும் சதையுமாக சொன்னால் மட்டும் யதார்த்த படம், சிறந்த படமாகி விடாது. அந்த களத்தின் மூலம் சொல்ல வருகிற விஷயம் மற்றும் சொல்லப்படும் விதம்- அதில் தான் உன்னதம் இருக்கிறது. 'ஷாஷங்க்'கில் படத்தை எடுத்திருக்கும் விதம் மற்றும் இதன் மிக மிகச்சிறப்பான வசனங்கள்- இந்த படத்தை மகத்தான ஒன்றாக ஆக்குகிறது. ஒவ்வொரு காட்சியின் நேர்த்தியிலும் தான் படத்தின் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது.

***

கதை சுறுக்கம் (சரி..கொஞ்சம் பெருசு தான்) இங்கே.. (கலரில் உள்ளது திருப்பு முனை காட்சிகள்.. படம் பார்க்காதவர்கள் அதை மட்டும் படிக்க வேண்டாம்)..

படம் ஆரம்பம் ஒரு கோர்ட்டு தீர்ப்பு நாளில்.. கடைசி கட்ட வாதங்கள் 'திறமையாக' நடத்தப்பட்டு.. தனது மனைவி மற்றும் அவளின் காதலனை கொன்றதற்காக நாயகனுக்கு (ஒரு பிரபல வங்கி அதிகாரி.. கொலைகளை தான் செய்ய வில்லை என்று மறுத்தும்..) இரட்டை ஆயுள் வழங்கப்படுகிறது. ஷாஷங்க் என்ற சிறைச்சாலைக்கு அனுப்ப படுகிறார்.

அங்கு இருக்கும் கைதிகள், புதிதாக வருபவர்களை வரவேற்கிறார்கள். அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் ஒரு போட்டி- புதியவர்களில் யார் முதலில் அழப்போகிறார்கள் என்பது. 'ரெட்' என்ற கைதி, நாயகனின் மேல் பந்த்யம் கட்டுகிறார். சிறையில் நுழைந்த புதியவர்களின் தடுமாற்றம்.. மிகுந்த கடவுள் பக்தியுடன் பார்க்க கொஞ்சம் நல்லவர் போல் இருக்கும் வார்டன் அவர்களை வரவேற்கிறார்.. பார்மாலிடீஸ் முடிந்து செல்லில் அடைக்கப்படுகிறார்கள். முதல் இரவில் அவர்களில் ஒருவன் அழுகிறான். கத்துகிறான் (நாயகன் அல்ல). நான் இங்கு இருக்க வேண்டியவன் இல்லை என்று கதறுகிறான். கடுப்பான 'தலைமை காவல் அதிகாரி' அழுதவனை போட்டு உதைத்து, உதைத்து.. உதைத்து .. கொன்றே விடுகிறான்.

அடுத்த நாள் காலையில், நாயகனின் சாதத்தில் புழு இருக்கிறது. ஒரு சக கைதி அதை எனக்கு தருகிறாயா? என்று கேட்டு, தன் வாயருகே கொண்டு போகும் போது, ஒரு கொடுமையான ஜெயில் சூழலை காண தயாராகிறோம். அடுத்த காட்சியிலேயே, அந்த புழுவை, தன் பையில் இருக்கும் ஒரு சிறு பறவைக்கு கொடுக்கும் போது.. அவர்களும் மனிதர்கள் தான் என்று சுலபமாக உணர்ந்து கொள்கிறோம்.

ரெட், சிறையின் அண்ணாச்சி. யாருக்கு எது வேண்டுமோ வெளியில் இருந்து கடத்திக்கொண்டு உள்ளே விற்பவர். நாயகன் அவரிடம் போய், எனக்கு ஒரு சிறு உளி வேண்டும் என்று கேட்கிறார். 'இதை வைத்து ஓட்டை போட்டு தப்பிக்க நினைக்கிறாயா?' என்று கேட்கும் ரெட், அந்த சின்ன உளியை பார்க்கும் போது புரிந்து கொள்கிறார். இது நாயகனின் கற்கள் செதுக்கும் பொழுது போக்கிற்கு என்று உணர்கிறார். மேலும், இதை வைத்து குழி தோண்டி தப்பிப்பதென்றால், 600 வருடங்கள் ஆகும் என்றும் உணர்கிறார்.


சரியான வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நொடி கடந்து விட்டால், திரும்பி பிடிக்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பு, நாயகனுக்கு கிடைக்கிறது- ஒரு நாள், கட்டடத்தின் மேற் கூரையை செப்பனிடுவதற்காக ஆள் எடுக்கிறார் வார்டன். வழக்கம் போல் ரெட் மற்றும் அவர் கூட்டாளிகள் செலக்ட் ஆகிறார்கள். அந்த இடத்தில் காவல் அதிகாரி (ஒருத்தனை அடித்தே கொன்ற அதே 'தலைமை' தான்) தனது வரிப்பிரச்சனையை சொல்லி புலம்புகிறார். இதை கேட்டுக்கொண்டிருக்கும் நாயகன், துனிந்து, முன்னே சென்று நான் இதை சரி செய்ய முடியும் என்று சொல்கிறார். ஆத்திரமடையும் தலைமை, மாடியில் இருந்து அவனை தள்ளி விட வரும் போது, எப்படி இதை சரி செய்ய முடியும் என்று அவசர அவசரமாக சொல்லி, பதிலுக்கு தன் நன்பர்களுக்கு பியர்கள் வேண்டும் என்று கேட்டு, ஒப்புதலும் வாங்கி விடுகிறார். சிறைக்குள் நண்பர்களை பெருவதற்காண நாயகனின் உத்தி இது என்று ரெட் உணர்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து, ரெட்டிடம் ஒரு சினிமா நடிகையின் போஸ்டர் கேட்கிறார் நாயகன். வாங்கி தன் செல்லில் ஒட்டியும் வைத்துக்கொள்கிறார். செல் இன்ஸ்பெக்ஷன் என்று சொல்லி வார்டன் நாயகன் அறைக்கு வந்து, போஸ்டர் முதலியவற்றை பார்த்து.., இருக்கட்டும் பரவாயில்லை என்று சலுகை அளிக்கிறார். அவனுக்கு லைப்ரரியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அளிக்கிறார். ஆனால், சிறை அதிகாரிகளின் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ளத்தான் அங்கு மாற்றப்பட்டதை பின்பு தெரிந்து கொள்கிறார் நாயகன். அனைத்து அதிகாரிகளின் (வார்டன் உட்பட) கணக்குகளையும் கவனிக்கிறார். வருடங்கள் கரைகின்றன.

வார்டன் இந்த சமயத்தில், கைதிகளை வைத்து பல திட்டங்களை வகுக்கிறார். இதன் மூலம் நிறைய பணம் வருகிறது லஞ்சமாக.. கருப்பு பணங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் நாயகனுக்கே வருகிறது. திறம்பட செய்கிறார் ('வெளியில் இருக்கும் வரை உண்மையான ஒருத்தனாக இருந்தேன்.. உள்ளே வந்து திருட்டு தனங்களை செய்கிறேன்'). இல்லாத ஒரு மனிதனை உருவாக்கி, அவன் பெயரில் பணம் போட்டு வைக்கப்படுகிறது. வார்டன் பணக்காரனாக ஆகி வருகிறார். இந்த நிலையில், புதிதாக வருபவர்களில், ஒரு இளம் கைதி, நாயகன்-ரெட் செட்டில் சேர்கிறான். ஒரு நாள், நாயகனின் கதையை கேட்கும் அவன், இதற்கு முன்னால் தான் இருந்த சிறையில் ஒரு சக கைதி சொன்னதை சொல்கிறான். அதாவது நாய்கனின் மனைவி மற்றும் அவள் காதலனை கொன்றது அந்த சக கைதியே என்பது. இந்த இடத்தில் ரெட்டுடன் சேர்ந்து நாமும் அதிர்கிறோம் (இது வரையில் நாயகன் உண்மையிலேயே கொலை செய்தாரா இல்லையா என்பது தெளிவாக தெரியாது). இதை போய் வார்டனிடம் சொல்ல, அவர் நாயகனை தண்டிப்பதுடன், அந்த இளம் கைதியையும் போட்டு த்ள்ளுகிறார்.


தண்டனை முடிந்து வரும் நாயகன் (அதாவது சிறைக்குள்ளேயே கொடுக்கப்படும் கொடூர சப்-தண்டனை), ரெட்டிடம் தன் மனைவி இறந்ததற்க்கு தானும் ஒரு வகையில் காரணம் தான், அவளை மகிழ்ச்சியாக வைக்கவில்லை. அதற்கான தண்டனையாக இதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மேலும், தனக்கு மெஃஸிகோவில், பசிபிக் கடலில் இருக்கும் ஊரில் போய் வாழ்க்கையை கழிப்பது தான் கனவு என்பதை சொல்கிறார். இதை கேட்ட ரெட், வீண் கனவுகளில் கவனம் செலுத்தாதே, இருப்பதை வைத்து சந்தோஷப்படு என்று அறிவுறுத்துகிறார். மிகுந்த வேதனையுடன் நாய்கன், என்றாவது ரெட் வெளியே வந்தால், பஃஸ்டனில் இருக்கும் ஒரு பெரிய மரத்தடியில் இருக்கும் சிறிய பெட்டி ஒன்றை போய் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ரெட் சம்மதிக்கிறார்.


நாயகனின் வருத்ததை புரிந்து கொள்ளும் அவர் கூடடாளிகளிடம், அவன் வித்தியாசமாக நடந்து கொள்வதாக ரெட் சொல்கிறார். அதற்கு ஒரு நண்பர், 'ஐயையோ, அவன் 6 அடி நீளத்துக்கு ஒரு கயிறு வேண்டும் என்று கேட்டான், நானும் கொடுத்தேன்' என்று சொல்கிறான். ரெட் கலவரமாகிறார். வழக்கம் போல், வார்டன் அறையில் அவரின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, தாமதமாக வரும் நாயகனை தனது செல்லில் இருந்து கவலையுடன் பார்க்கிறார் ரெட். இரவு இறுக்கமாக கழிகிறது. அடுத்த நாள். அனைத்து கைதிகளும் வெளியில் வர அழைக்கப்படுகிறார்கள் வழக்கம் போல். நாயகன் வர வில்லை. போய் பார்த்தால்......

நாயகனின் அறை காலியாக இருக்கிறது (20 வருடங்கள் கழித்து முதல்முறையாக). வார்டன் முதற்கொண்டு அனைவரும் வந்து பார்க்கிறார்கள். கத்துகிறார் வார்டன். ஒரு கல்லை எடுத்து அந்த சினிமா நடிகையின் போஸ்டர் மீது எரிகிறார். அது உள்வாங்குகிறது. பிரித்து பார்த்தால், அங்கு ஒரு குழி செல்கிறது... தப்பி விட்டார் நாயகன். எப்படி தப்பிக்கிறார் என்று காட்டப்படுகிறது. இந்த இடங்களில், நமக்கு வரும் உணர்ச்சிகள்.. இதுவல்லவா படம் என்று திகைக்க வைக்கிறது. வந்ததும், வார்டன் மற்றும் தலைமையின் வண்டவாளங்களை லெட்டர் மூலம் ஆதாரத்துடன் போட்டு கொடுக்கிறார். தலைமை கைது.. வார்டன் தற்கொலை..

ரெட் பரோலில் வெளி வந்து, நாயகன் சொன்னபடி அந்த மரத்தடி பெட்டியை பார்க்கிறார். அதில் இருக்கும் பணத்தை வைத்து, நாயகன் இருக்கும் மெஃஸிகோவிற்கு போய் சேர்கிறார். அவர்கள் இருவரும் சந்திப்பதுடன் படம் நிறைவு பெருகிறது.

***

சிறை வாசம் எப்படி கைதிகளை 'பிடித்துவைத்துக்' கொள்கிறது. உள்ளே மிகவும் திறமையான, முக்கியமானவர்கள் எப்படி வெளியில் செல்லாக் காசாகிறார்கள். கைதிகள் எப்படி மனிதர்களாக இருப்பதை மறக்க வைக்கப்படுகிறார்கள் (அந்த இசை ஒலிபரப்பும் காட்சி).. கடவுள் பக்திக்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் சம்பந்தமில்லை (இது எனக்கு எப்போதுமே வியப்பைத்தான் தருகிறது.. கடவுளுக்கு மிகவும் பயப்படும் ஒருவர், எப்படி தீமைகளை செய்கிறார்?) வருடக்கணக்காக உள்ளே இருந்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்.. இன்னும் பல பல உள்ளது படத்தில்... இங்கு கொஞ்சம் தான் சொல்லி இருக்கிறேன்..


உதாரணம் இந்த ஒரு காட்சி- பரோலில் வெளியே வருவதற்கு ஒரு நேர்முகம் நடக்கும், 10 வருடத்திற்கு ஒரு முறை. ரெட் ஒவ்வொரு முறையும் போய், நான் திருந்தி விட்டேன் என்று சொல்லுவார். ஒவ்வொரு முறையும் ரிஜெக்ட் செய்து விடுவார்கள். கடைசி முறை, 40 வருட சோகத்தையும் சேர்த்து வெடிப்பார். ஆனால் விட்டு விடுவார்கள். எப்படி? அவர் பேசியதாலா? இல்லை, எப்போதும் போல் இல்லாமல், இந்த தடவை ஒரு இளம் டீம் நேர்முகத்திற்கு வந்ததாலா (முதல் முறையாக ஒரு பெண்ணும் அதில்)? அதிலும் அந்த டீம் தலைவர், Please sit down என்று கூறுவார்.. இப்படி பல விஷயங்களை யோசிக்க வைத்து விடுகிறார்கள்..

நம்பிக்கை என்பது எப்படி எந்த நிலையிலும் உதவுகிறது. ஏன் எனக்கு மட்டும் இப்படி/இதற்கு மேல் முடியாதுப்பா என்று நம்பிக்கையை இழப்பவர்கள்.. செய்யாத தப்புக்காக இரட்டை ஆயுள் வாங்கியும் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளும் நாயகனின் இந்த கதையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த கதாபாதிரம் எனக்கு ஆதர்சமாக தெரிகிறது.

'சிறைக்குள் இருக்கும் எல்லாரும் கெட்டவங்க இல்லை. வெளியில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியன்கள் இல்லை' என்ற அந்த கருத்து, இன்றைய தேதிக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகிறது

Tuesday, March 22, 2011

விண்டோஸ் 7 கிராஷ்!


விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.
பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும். இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்; சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.

நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.

இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும். எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.
மீட்புப் பணி: விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும்.

இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும். இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.

பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.

விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்கள்......




1939ஆம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண்மீன்களைப் பற்றி ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி நம் சூரியனை விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண்மீன், தன்னுடைய சொந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல், அதனுடைய நியூட்ரான்கள் உள்நோக்கி மேலும் சுருங்குகின்றன.

அப்போது 'ஒருமைத் தன்மை’ (Singularity) என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன.

அதாவது அவை பருமன் (Volume) ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத (Infinite) ஒரு நிறையையும் அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.

இது போன்ற ஒருமைத் தன்மையை அடைந்த நியூட்ரான் விண்மீன்களின் மேற்புற ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருப்பதால், அவற்றின் அருகில் இருக்கும் அல்லது அவற்றிற்கு அருகே வரும் எந்தப் பொருளையும் அவை தன்னுடன் ஈர்த்துக் கொள்கின்றன. ஒளியின் வேகம் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். (உலகில் உள்ள எந்தப் பொருளுமே ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது) ஒளி கூட இது போன்ற ஒருமைத் தன்மையில் தப்ப முடியாது.

ஒளியைக் கூட இவை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது போன்ற பொருட்களை கரும் பள்ளங்கள் (Black Holes) என்று அழைக்கின்றனர்.

விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்களில் விழும் எதுவுமே அதிலிருந்து தப்ப முடிவதில்லை. கரும்பள்ளங்கள் என்பவை விண்மீன்கள் படு அடர்த்தியாக அமைந்திருக்கும் விண் பகுதிகளிலேயே அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது. முக்கியமாக காலக்சிகளின் மையப்பகுதிகள் மற்றும் கோளக் கூட்டங்களின் மையப்பகுதிகள் போன்றவற்றில் விண்மீன்கள் அடர்த்தியாகக் காணப்படுவதால், அங்கே கரும்பள்ளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றன.

பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் பூகம்பம் ஏற்படுமா?

சென்னை: நாளை பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், பூகம்பமோ, சுனாமியோ ஏற்படும் என பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். முழு நிலவை காட்டும் பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் வரும். ஆனால் நாளை வருவது மெகா பவுர்ணமி. ஆம், பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் வழக்கத்தைவிட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார்கள் விஞஞானிகள். 'சூப்பர்மூன்' என்ற இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது.

இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் சந்திரன் வந்துள்ளது. "வானில் அதிசயங்கள் நிகழும்போது, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை மெய்யாக்கும் வகையில், 12ம் தேதி ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை வெடிப்பு உட்பட பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதுபற்றி பயப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடல் சீற்றம் இருக்கும்

சந்திரன் பூமியை நெருங்கி வருவதால், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படுமா என தினமும் பலர் தொலைபேசி மூலம் கேட்பதாக தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "பூகம்பமோ, சுனாமியோ ஏற்படுவதற்கு சூப்பர் மூன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என உறுதியாக கூறுகிறோம். எனவே, வழக்கம்போல இந்த பவுர்ணமியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாக இருக்கும்.

எனினும், வழக்கமாக சந்திரன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அறிந்திராத சாமானிய மக்கள் இந்த வித்தியாசத்தை உணர முடியாது" என இந்த மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார். "சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. கடல் அலைகள் மற்றும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்" என சென்னை வானிலை மைய துணை இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார்.

Friday, March 18, 2011

Schindler's List


அதிஷ்ட கெட்ட சின்டலெர் எந்த வியாபாரம் தொடங்கினாலும் நஷ்டம் தான். சிமன்ட் பாக்ட்ரி தொடங்கினான். இழுத்து மூடப்பட்டது. விற்பனைக்கு வாங்கிய பொருள் விற்கமுடியவில்லை. அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் பயனில்லை. வியாபாரத்தில் தோல்வி அடைந்த சின்டலெர் சரித்திர பக்கங்களில் மறக்க முடியாத முக்கியமான மனிதர்.இரண்டாம் உலக போர் முடிவில் நாசி கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் தூக்கில் தொங்கியும், துப்பாக்கியில் சுட்டும் சிவப்பு படை தண்டனை வழங்கியுள்ளது. ஆனால், நாசி கட்சியை சேர்ந்த சின்டலெரை ஒன்றும் செய்யவில்லை.



இவர் இறந்த போது யூதர்கள் அவர்கள் கௌரவப்படி மரியாதை செழுத்தினர். நாசி கட்சி சேர்ந்த ஒருவனுக்கு யூதர்கள் மரியாதை செலுத்தினார்கள் என்றால் சின்டலெருக்கு மட்டும் தான். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் பக்கம் இருந்து கொண்டு நாசி படைக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆயிரம் யூதர்களுக்கு மேல் தன் சொந்த பணத்தில் காப்பாற்றியவர். இன்றும் யூதர்கள் அவர் சமாதிக்கு சென்று கௌரவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சின்டலெர் வாழ்க்கையை பற்றிய படம் தான்..... Schindler's List.

இரண்டாம் உலக யுத்தம் (1939) தொடக்கத்தில் படம் தொடங்குகிறது. போலாந்து யூதர்களை இடம் மாற்றம் செய்யப்படும் போது சின்டலெர் போர் ஆயூதங்கள் செய்வதற்காக போலாந்து யூதர்களை வேலை செய்ய வைக்க நாசிப்படையினரிடம் கேட்கிறான். நாசி படையில் தலைமை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சம்மதம் வாங்குகிறான். கைதிகளாக வேலை செய்யும் யூதர்கள் போர் ஆயூதம் செய்ய மிகவும் உதவியாக இருப்பதுப் போல் ஆவணங்கள் தயார் செய்கிறான். இதனால், அவன் பாக்ட்ரியில் இருக்கும் யூதர்கள் மரண முகாமுக்கோ, நாசி படையினரால் கொல்லப்படாமல் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால், நாசிப்படையின் எஸ்.எஸ் பிரிவு தலைவனான ஆமான் கோத் சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஒத்துழைப்பு தராதவர்களை கொல்கிறான். யூதர்களை கொன்றாலும், சின்டலெர் தொலிற்சாலையில் வேலை செய்ய ஆடகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தான். அதனால், சின்டலெர் ஒன்று செய்யாதவனாய் நிற்கிறான்.

தன் தொழிற்சாலைக்களில் வேலை செய்பவர்களுக்காக தனியாக முகாம் அமைக்க ஆமான் கோத்துக்கு பணம் கொடுத்து அனுமதி வாங்கிறான். ஆரம்பத்தில் லாபம் சம்பாத்திக்கும் நோக்கம் சின்டலெருக்கு இருந்தாலும் போக போக தன்னால் எத்தனை உயிரை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு பேரையும் காப்பாற்ற நினைக்கிறான்.

தன் மனத்துக்கு வந்த பெயரை எல்லாம் சொல்லி ஒரு பட்டியல் தயார் செய்து அவர்களை தன் மூகாம் வேலைக்காக அழைத்துச் செல்கிறான். குழந்தைகளை அழைத்து செல்லும் போது சிக்கல் ஏற்ப்பட சின்டலெர் அவர்கள் மூகாமின் ஓறத்தின் படிந்து இருக்கும் அழுக்கு தொடைக்க உதவுவார்கள் என்று சொல்லி அவர்களையும் அழைத்து செல்கிறான். யூத பெண்கள் குளிக்க அறைக்கு செல்லும் போது விஷவாய்வு வருமோ என்று அஞ்சியப்படி சென்றவர்கள், தண்ணிர் வருவதை பார்த்து அவர்களின் பயம் தெளிகிறது.

தனக்காக வேலை செய்யும் யூதர்கள் அடிக்கவோ, துன்புறுத்தவோ, கொலை செய்யவோ கூடாது என்று நாசிப்படகளுக்கு கட்டளைப் போடுகிறான். இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு உயிரும் தன் வேலைக்கு முக்கியம் என்று சொல்கிறான்.

1945 ல் இரண்டாம் உலக யுத்தம் முடியும் போது நாசியின் எஸ்.எஸ் படையினர் சின்டலெரிடம் யூதர்களை கொல்ல சொல்லியும் மறுக்கிறான். சிவப்பு படை நெருங்கி வருவததால், சின்டலெர் தன் குடும்பத்தோடு தப்பிக்க நினைக்கிறான். தன்னால் காப்பாற்றப்பட்டு ஒரு விருந்து கொடுக்கும் போது, யூதர்கள் "சின்டலெர் போர் குற்றவாளி இல்லை" என்று எழுதிய கடிதத்தை கொடுக்கின்றனர்.

"ஒவ்வொரு உயிரை நாம் காப்பாற்றும் போது உலகத்தை காப்பாற்றுகிறோம்" வாசகம் பொருந்திய பரிசும் கொடுக்கிறார்கள். மனைவியுடன் சின்டலெர் காரில் ஏறும் போது இன்னும் பல உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று சொன்னப்படி செல்கிறான்.

படம் முடியும் போது, அவனால் காப்பாற்ற சின்டலெர் யூதர்கள் உலகம் முழுக்க 6000 பேர்க்கு மேல் வசிக்கிறார்கள் என்பதை குறிப்பது போல் படம் முடிகிறது.

ஆறு கோடி மேல் இறந்த யூதர்களுக்கு இந்த படத்தை சமர்பணம் செய்துயிருக்கிறார் இயக்குனர் சிடிவன் ஸ்பீல்பெர்க். ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜூராஸிக் பார்க் போன்ற பொழுது போக்கு ஜனரக படங்களை இயக்கிய ஸ்பீல்பெர்க் தன்னால் நல்ல கலைப்படம் கூட எடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஆஸ்கர் சின்டலர் தொடங்கிய எந்த தொழிலும் சரியாக அமையவில்லை.யூத சமூகத்தில் இருந்து வந்த நிதி உதவியில் தொடங்கிய வியாபாரமும் இழுத்து முடப்பட்டன. அவரின் வியாபார நண்பர்களும் அவருடன் நட்பை முறித்துக் கொண்டனர். 1969 முதல் கிழக்கு ஜெர்மனி அளித்த பென்ஷன் தொகையில் தன் காலத்தை கலித்தார். இதய நோய் காரணமாக 1974ல் ஆஸ்கர் சின்டலர் இறந்தார். தான் வாழ்க்கையில் தோற்றாலும் தன்னால் முடிந்த உயிரை காப்பாற்றி அவர் பெயரில் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறார் சின்டலெர்.

இலங்கை இராணுவ முகாமில் சின்டலெர் போன்ற மனிதன் இல்லாமல் எத்தனையோ தமிழர்கள் இறந்திருக்கிறார்கள். கோடிப் பேர்களை கொன்றவன் 'சின்டலெர்' போல் தமிழர்களை காப்பாற்றிய ரட்சகன் என்று பவனிவந்துக் கொண்டுயிருக்கிறார். இன்னும் விடியாதா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஒரு சமூகம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.

பெரிய பெயரில்லாமல் ஒரு சமூகத்தை காப்பாற்றி சாதாரன மனிதனாக

The Kite Runner


வாழும் பூமி நரகமாக விட்ட பிறகு வாழ கிடைத்த பூமியில் தங்களுடன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அசைப்போட்டு பார்ப்பார்கள். அப்போது இனிமையான நினைவுகளிடையே ஏதாவது வலி கண்டிப்பாக ஒலிந்திருக்கும். இனிமையான நினைவு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் வேதனை மனதை ஆட்கொண்டிருக்கும்.
அப்படி பாலியத்தில் வாழ்ந்த பூமி பிரிந்து, மீண்டும் தன் சொந்தத்தை தேடி சென்றவனின் பற்றிய கதை தான் ‘The Kite Runner’

எழுத்தாளாராகிவிட்ட சந்தோஷத்தில் அமீர் வீட்டுக்குள் நுழைய ரஹிம் கான் என்பவரிடம் இருந்து போன் வருகிறது. ரஹிம் கான் என்ற பெயரை கேட்டத்தும் அவனது நினைவலைகள் பாலியத்தை நோக்கி செல்கின்றன.

1978ல் ஆப்கானிஸ்தானில் வாழும் அமீரின் நண்பன் ஹாசன் பட்டம் விட அவனுக்கு உதவியாக அமீர் இருக்கிறான். இருவருக்கும் பெரிய பொழுதுபோக்கே பட்டம் விடுவது தான். அமீர் பணக்கார வீட்டு மகன். அவனின் தந்தை பாபா ஒரு கம்யூனிச எதிர்பாளர். அமீரின் தந்தை பாபாவிடம் வேலை செய்யும் அலியின் மகன் தான் ஹாசன். ஆசிப்பும், அவனது நண்பர்களும் அமீரிடம் வம்பு செய்யும் போது ஹாசன் அவர்களை தன் உண்டிக்கோள்ளால் அடித்துவிடுவதாக மிரட்டுகிறான். ஆசிப் அவர்கள் இருவரையும் நண்பர்களல்ல, முதலாளி, வேலைக்காரன் உறவு என்று சொல்லும் போது அமீருக்கு வேதனையாக இருக்கும். அதே சமயம், அவனின் தந்தை ஹாசனின் புத்திசாலி தனத்தை பாராட்டும் போது பொறாமையும் ஒட்டிக் கொள்ளும்.



அமீர் தனியாக இருக்கும் எழுதும் போது கதையை அவனது தந்தையின் நண்பன் ரஹிம் கான் பாராட்டுவார். அவனது முதல் வாசன் ரஹிம் கான். அதே சமயம், ஹாசன் அமீர் கதைக்கு விமர்சன முன் வைக்கும் போது அமீர் மனதில் நண்பன் ஸ்தானத்தில் ஹாசன் ஒரு படி கீழ் தள்ளப்படுகிறான். இருந்தாலும், இருவரும் தொடர்ந்து நண்பர்களாக விளையாடுகிறார்கள். ஒரு முறை பட்டம் விடும் விழா நடக்கும் போது அமீர் பன்னிரண்டு பட்டங்களுக்கு மேல் அருத்து வெற்றிப்பெறுகிறான். அமீர் அருத்த பட்டத்தை ஹாசன் எடுக்க செல்ல, அமீர் தடுக்கிறான். " உனக்காக ஆயிரம் முறை செய்வேன் " என்று சொல்லி பட்டத்தை எடுக்க செல்கிறான். ஆசிப் குழுக்கள் அவனை சுழ்ந்துக் கொள்ள அவனிடம் பட்டம் கேட்கிறார்கள். ஹாசன் அதை தர மறுக்க அவனை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதையெல்லாம் பயந்தப்படி பார்த்த அமீர் மறைந்துக் கொள்கிறான்.


தனக்கு நடந்த்து என்ன என்று சொல்ல தெரியாத ஹாசன் தன் நண்பர் அமீரிடம் பட்டத்தை தருகிறான். ஹாசன் தனக்காக ஏன் இதை செய்ய வேண்டும் ? ஒரு வேலை ஆசிப் சொல்லுவது போல் தங்களுக்குள் முதலாளி, வேலைக்காரன் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அவனை தன் வீட்டில் இருந்து அனுப்ப, அவன் மீது திருட்டு பழி போடுகிறான் அமீர். ஹாசனும் ஏற்றுக் கொள்கிறான். அமீர் அப்பா பாபா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அலி தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறான். அமீர் குற்றவுணர்வோடு ஹாசனை பார்க்கிறான்.


1979ல் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை உடுருவல் செய்ததால், தன் சொத்துக்களை எல்லாம் ரஹிம் கானிடம் நிர்வாகம் செய்ய ஒப்படைத்து மகனை அழைத்து செல்கிறான். வழியில் சோவியத்தின் சிப்பாய் ஆப்கானின் பெண்ணை புணர்ந்து கொள்ள அழைக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் தைரியமாக எதிர்கிறான். அமீர் மனதில் அவன் அப்பா ஒரு பெரிய ஹீரோவாக உருவாகுகிறார்.


இருவரும், அமெரிக்காவில் தன் வாழ்நாளை கலிக்கிறார்கள். அமீர் படித்து பட்டம் பெறுகிறான். அவன் தந்தை ஹாசனைப் பற்றி நினைவு படுத்தும் போதெல்லாம் அவனின் குற்றவுணர்வு அவனை கொள்ளும். அதை வெளியே காட்டிக் கொள்ளமல் இருப்பான். பாபா தன் நண்பரின் மகள் சொரயாவை திருமணம் செய்து வைத்த சந்தோஷத்தில் இறக்கிறான்.


அமீரின் நினைவலைகள் முடிந்து நீண்ட நாட்கள் பிறகு ரஹிமிடம் பேசுகிறான். முக்கியமான விஷய்த்திற்காக அமீரை பாகிஸ்தான் வரச்சொல்லுகிறான். பாகிஸ்தான் சென்ற அமீர் தன் முதல் புத்தகம் ரஹிம் கானுக்கு சமர்பிப்பதை காட்டுகிறான். அப்போது ஹாசன் அவன் தந்தை பாபாவின் இன்னொரு மகன் என்று கூறுகிறான். மேலும், அமீரின் சொத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஹாசனும், அவனது மனைவியும் இறந்ததை கூறுகிறான். முதலில் கோபப்படும் அமீர் ஹாசனின் உறுக்கமான கடிதம் படித்து அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து நெகிழ்கிறான்.


ரஹிம் ஹாசனின் மகன் சௌரப் காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு அலைத்து செல்ல சொல்கிறான். தாடி, டர்பன் போட்டுக் கொண்டு அமீர் காபுல்லுக்கு செல்கிறான். சோவியத் படைகளை விட தாலிபன் மிகவும் கொடுமையாக பெண்ணை அடித்து கொள்வதும், கால் இழந்த சிறுவர்கள் தன் கட்டை காலை விற்பதும், தூக்கி தொங்கிய உடல் என்று நரகமாகிவிட காபுலை பார்க்கிறான். ஹாசனின் மகன் தன் சிறுவயது எதிரியான ஆசிப் வைத்திருபதை அறிந்து தன் உயிரை பணைய வைத்து சௌரப்பை மீட்கிறான்.



சௌரபை ரஹிம் கான் வீட்டுக்கு அழைத்து வர அவர் இறந்த செய்தியை அறிகிறான். சௌரப் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறான் அமீர். அவர்களோடு நெருங்கி பழக சௌரப் தயங்கும் போது அமீர் பட்டம் வாங்கி வானத்தில் விடுகிறான். ஹாசன் தனக்கு சொல்லி தந்ததை அவன் மகன் சௌரப்புக்கு சொல்லி தருக்கிறான். சௌரப் பட்டத்தை அருக்க, அமீர் எடுத்து செல்ல ஓடும் போது ஹாசன் கூறிய " உனக்காக ஆயிரம் முறை செய்வேன்" ஆமீர் சொல்லுவது போல் படம் முடிகிறது.


கதைகளம் ஆப்கானில் நடப்பது போல் இருந்தாலும் பெரும்பகுதி சீனாவில் உள்ள கஷ்கரில் படமாக்கப்பட்டது.


பதின்ம சிறுவர்கள் ஹாசனை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி எந்த ஆபாசமும் இல்லாமல் இருந்தாலும் பெரும் சர்ச்சை கிளப்பியது.


உலக அரசியல் பார்வையில் தீவிரவாதி நாடு என்று முத்திரை குத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் ரஷ்ய உடுருவல், தாலிபான் ஆக்கிரமிப்பு என்று அழகாய் பார்த்த நாடு தற்காலத்தில் மயாணமாய் காட்டும் போது அமீர் கண்களுக்கு மட்டுமல்ல பார்வையாளனுக்கும் வலியை கொடுக்கிறது.

எத்தனையோ வாழ்ந்து இடிந்த வீடுகளில் பல பாலிய வயது கதைகள் ஒலிந்திருக்கிறது. அமீர் கதாப்பாத்திரம் நினைத்து பார்க்கும் நேரமில்லாமல்

The Color Purple



கலர் பர்ப்பிள் (The Color Purple), 1900ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆஃப்ரிக்க, அமெரிக்கப் பெண்கள் அனுபவித்த வறுமை, இனவெறி, பாலியல் கஷ்டங்களைத் தாண்டி வெற்றிபெரும் ஒரு பெண்ணின் கதை.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரையில், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் (Stephen Spielberg) ‍-க்கு, வேற்று கிரக வாசிகளையும், கொடூரமான விலங்குகளையும் விட்டால் வேறு எதைப் பற்றியும் படமெடுக்கத் தெரியாது எனத்தான் நினைத்திருந்தேன். இந்தத் திரைப்படம், ஸ்பீல்பெர்கின் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இவ்வளவு உணர்வுப் பூர்வமான படத்தை எடுக்க முடிந்த ஸ்பீல்பெர்க் ஏன் இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.

படத்தின் கதாநாயகி செலியாக (Celie) வரும் வூப்பி கோல்டுபெர்க் (Whoopi Goldberg) -இன் அற்புதமான நடிப்பே இதன் முதுகெலும்பு. கணவனுக்கு பயந்து நடுங்கும் போதும், இறுதியில் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி விலகும்போதும், கணவனின் தோழியான‌ ஜாஸ் இசைப்பாடகியுடன் நட்பு கொள்ளுமிடத்திலும், தங்கையை பல நாட்கள் கழித்து காணுமிடத்திலும், என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை பதிவு செய்திருப்பார் இவர். இந்தப் படத்திற்காக இவர் சிறந்த நடிப்புக்கான கோல்டென் க்ளோப் (Golden Globe) விருதினைப் பெற்றார்.

இது போன்ற படங்களில் வில்லன் நடிகரின் நடிப்பு கதை நாயகர்களை விட முக்கியமானது. அதை உணர்ந்து மிகச் சிறப்பாக செய்திருப்பார் செலியின் கணவன் ஆல்பர்ட் ஜான்ச‌னாக வரும் டேனி க்ளோவர் (Danny Glower). கதையின்படி இளம், நடுத்தர, முதுமை என மூன்று நிலைகளிலும் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல், முதலில் செலியின் கணவனின் தோழியாக வீட்டுக்குள் வந்து கொஞ்சம், கொஞ்சமாக செலியின் நெருங்கியத் தோழியாகி, செலியின் திறமைகளை அவளுக்கு எடுத்துச்சொல்லி, அவளும் தனியாக வாழும் தைரியத்தை அளிக்கும் கதாபாத்திரமான ஷக் ஆவ்ரி என்னும் ஜாஸ் பாடகராக வரும் மார்கரெட் ஆவ்ரியும் (Margaret Avery), ஆல்பர்ட் ஜான்சனின் முதல் மகனுக்கு மனைவியாக, மிகவும் தைரியமான பெண்ணாக வந்து, பின்னர் வெள்ளையர்களின் அடக்குமுறையால் அடங்கிப் போய், இறுதியில் அவர்களையே எதிர்க்கும் தைரியம் கொள்ளும் ஷோஃபியா கதாப்பாத்திரத்தில் வரும் ஓபரா வின்ஃப்ரே (Oprah Winfrey), செலியின் தங்கை நெட்டீயாக (Nettie) வரும் பெண் என அனைவரது நடிப்புமே மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்தப் படத்தில்.

வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களிலிருந்து முற்றிலும் மாறி, ஒரு காட்சி கூட கிராஃபிக்ஸோ, இல்லை வேறு தந்திரங்களோ இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும், கதாப்பாத்திரங்களின் நடிப்பையும் நம்பி எடுக்கப் பட்ட படம். இதில் ஸ்பீல்பெர்க் வெற்றிபெற்றிருக்கிறார்.

கலர் பர்ப்பிள் (Color Puple) நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Matchstick Men (2003) - English


matchstick_men_poster

போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி.

இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். ‘பலே கில்லாடி’ என்று நம்மூரில் அழைக்கப்படுபவன் தான் இந்தக் கான் ஆர்டிஸ்ட். ஒரு நபருடன் நெருங்கிப் பழகி, அவர்களது நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு, பின்னர் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு கம்பியை நீட்டுபவனே இந்தக் கான் ஆர்டிஸ்ட். சில வாழும் உதாரணங்களைச் சொல்லப்போனால், நம்ம ஃப்ரான்க் அபக்னாலி (கேட்ச் மி இஃப் யு கேன் நினைவிருக்கிறதா), நம்மூரு போலி சாமியார்கள் போன்ற பலரைச் சொல்லலாம்.

ஓகே. லாஸ் ஏஞ்ஜலீஸில், இப்படிப்பட்ட ஒரு கான் ஆர்டிஸ்ட் – பலே கில்லாடியாக வாழ்ந்து கொண்டிருப்பவனே ராய். ராய் வாலர் (நிகொலஸ் கேஜ்). அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு ஆளாக இருந்தாலும், அவனுக்குப் பல்வேறு விதமான டிஸார்டர்கள் இருக்கின்றன – தூசியைப் பார்த்தாலே அலர்ஜி வரும் மைஸோஃபோபியா, அதிர்ச்சிகளைத் தாங்க முடியாத அகோராஃபோபியா (என்னது அகோரியா !?), நிறையப் பேருக்குத் தெரிந்த அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் இன்னபிற. இத்தோடு கூட, திடீர் திடீரென அதிர்ச்சியடையும் ஒரு மனிதனாக வேறு அவன் இருக்கிறான்.

இப்படி நாளொரு ஃபோபியாவும் பொழுதொரு அதிர்ச்சியும் அடைந்து அவனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில், ஒரு நாள் திடீரென உடல்நலக் குறைவுக்கு உள்ளாகிறான். அப்பொழுது, அவனது நண்பனான ஃப்ராங்க், ஒரு மருத்துவரைப் பரிந்துரைக்கிறான்.

அந்த மருத்துவரான க்ளெய்ன், ராயைப் பரிசோதித்துவிட்டு, அவனது ஸ்ட்ரெஸ் குறைவதற்காக, அவனது பழைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்கிறார். நிறைமாதமாக இருந்த மனைவியை ராய் விவாகரத்து செய்ததை அறிகிறார். அவளுக்கு என்னவாயிற்று என்ற ஆர்வமும் ராய்க்கு இருப்பதை அறியும் க்ளெய்ன், சில நாட்கள் கழித்து, அவளிடம் பேசி, அவளுக்கு ஒரு பதிநான்கு வயது மகள் இருப்பதை அறிகிறார். அவள் பெயர் ஏஞ்சலா.

matchstick men_3 தனக்கு ஒரு மகள் இருப்பதை எண்ணி ஆனந்தமடையும் ராய், க்ளெய்னின் மூலமாக ஏஞ்சலாவைச் சந்திக்கிறான். அவளோ, இவனுக்கு நேர் எதிராக இருக்கிறாள். எப்பொழுது பார்த்தாலும் சந்தோஷமாக, வாழ்க்கையைக் கொண்டாடுபவளாக, ஒரு பட்டாம்பூச்சியைப் போல் பறந்துகொண்டிருக்கிறாள். மகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், தனது தோழன் ஃப்ராங்க் சொல்லும் ஒரு ‘வேட்டையை’ நடத்தச் சம்மதிக்கிறான்.

அந்தப் பணக்காரனின் பெயர் ’சக்’. இவர்கள் இலக்கு: அவனது பெரும் பணம். ஒரு பிஸினஸ்மேன் போல் நடித்து, அவனது பணத்தை ஒரு இடத்துக்குக் கொண்டுவர வைத்து, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை விடப் பெரும் பணம் அளிப்பது போன்ற ஒரு வியாபாரத்தைக் கச்சிதமாக செட் செய்கிறார்கள் இருவரும். சக்கும் இவர்களை நம்பிவிடுகிறான்.

இந்நிலையில், ஒரு நாள் ஏஞ்சலா, ராயின் வீட்டிற்கு வந்து விடுகிறாள். தனது தாயோடு சண்டையிட்டுவிட்டு, அங்கு வந்துவிட்டதாக அழும் அவள், அங்கு சில நாட்கள் தங்கிக்கொள்வதற்கு ராயின் அனுமதி கேட்கிறாள். தனது பல ஃபோபியாக்களால், ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ராய், ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்தாலும், தன்னுடைய மகள் அருகில் இருப்பது அவனுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

matchstick men_1 ஒருநாள், ஏஞ்சலாவுக்கு ராயின் தொழில் தெரிந்துபோய் விடுகிறது. அவனை விட்டுவிட்டுப் போய்விடுவாள் என்று ராய் நினைக்கும் நேரத்தில், தனக்கும் இத்தொழிலைக் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கெஞ்சுகிறாள் ஏஞ்சலா. மகள் மீது வைத்திருக்கும் அன்பினால், ராயும் அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.

திடீரென, தாங்கள் சக்கைச் சந்திப்பதற்கு முடிவு செய்திருந்த நாள், ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளதாக ஃப்ராங்க் வந்து சொல்கிறான். சக்கின் நேரமின்மையால், ஒரு நாள் முன்னதாகவே சந்திப்பு நடக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாத ராய், வேறு வழியில்லாமல், மகளையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறான்.

ப்ளான்படி, ஏஞ்சலா சக்கை திசைதிருப்புகையில், சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஃப்ராங்க்கும் ராயும் ஓடிவிட வேண்டும். அத்தனையும் கச்சிதமாக நடக்கிறது. ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட சக், இவர்களைத் துப்பாக்கியுடன் துரத்துகிறான். ஆனால், அனைவரும் பணத்துடன் தப்பிவிடுகிறார்கள்.

ராய் ஏஞ்சலாவிடம், தன்னை வந்து கொஞ்ச நாட்கள் சந்திக்க வேண்டாம் என்று சொல்கிறான். அவளது பாதுகாப்புக்காக. மகள் இல்லாமல், மறுபடி நோய்வாய்ப்படும் ராய், மருத்துவர் க்ளெய்னிடமே மறுபடி செல்கிறான். அவர் கொடுத்த மருந்து, சாதாரண சர்க்கரை மாத்திரை என்பதைத் தெரிந்து கொள்கிறான். அவன் மனதில்தான் எல்லாமே உள்ளது என்று சொல்லும் க்ளெய்ன், அவன் மனது வைத்தால் எல்லாமே சரியாகி விடும் என்றும் சொல்கிறார். எனவே, மகளுடன் இருந்தாலே எல்லாமே சரியாகிவிடும் என்பதை உணரும் ராய், திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, ஏதாவது வேலை செய்து, ஏஞ்சலாவுடன் வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுக்கிறான். இது, அவனது நண்பனான ஃப்ராங்குக்குப் பிடிப்பதில்லை.

சில நாட்கள் கழித்து ஏஞ்சலாவைச் சந்திக்கும் ராய், திடீரென அங்கு, தன்னிடம் பணத்தை இழந்த சக், ஃப்ராங்க்கை அடித்துப் போட்டு, துப்பாக்கியுடன் நிற்பதைப் பார்த்து விடுகிறான். திடீரென செயல்படும் ஏஞ்சலா, சக்கைச் சுட்டுவிட்டு, ஃப்ராங்கை விடுவித்து, அவனுடன் தப்பித்துவிடுகிறாள். அவர்களுடனே ஓட எத்தனிக்கும் ராயை, குண்டடிபட்ட சக்கின் அடி, மயக்கமுற வைக்கிறது.

matchstick men_2 கண்விழிக்கும் ராய் இருப்பது, மருத்துவர் க்ளெய்னின் மருத்துவமனையில். ராய் விழிப்பதற்காகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள், சக், குண்டடியால் இறந்துவிட்டதையும், ஃப்ராங்க்கையும் ஏஞ்சலாவையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதையும் ராயிடம் சொல்கின்றனர். வருத்தமுறும் ராய், அவர்கள் சென்ற பின், தன்னுடைய வங்கி லாக்கரின் பாஸ்வேர்டைக் க்ளெய்னிடம் கொடுத்து, எப்படியாவது ஏஞ்சலாவிடம் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த பணம் அனைத்தையும் கொடுக்கச் சொல்கிறான். க்ளெய்னும் சம்மதிக்கிறார்.

இதன்பின் என்னவாயிற்று? போலீஸினால் ஏஞ்சலாவைப் பிடிக்க முடிந்ததா? தந்தையும் மகளும் ஒன்று சேர்ந்தார்களா? ராய் பிழைத்துக் கொண்டானா? படத்தில் காணுங்கள். ஆனால் ஒன்று – நீங்கள் சற்றும் எதிர்பாராத க்ளைமேக்ஸ் உங்களை அசர அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தின் இயக்குநர், ரிட்லி ஸ்காட். இவரைப் பற்றி எதுவுமே சொல்லத் தேவையே இல்லை. மிகப்பிரபலமான, அருமையான, ஒரு வெர்ஸடைல் இயக்குநர். பல பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்களைக் கொடுத்தவர்.

நிகொலஸ் கேஜ், மறுபடியும் பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார். ஒரு அப்ஸெஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் பேஷண்டாக, ஒரு கான் ஆர்டிஸ்டாக, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக – இப்படிப் பல தரப்பட்ட வேடங்களைத் திறம்பட செய்திருக்கிறார்.

இப்படம், ‘ப்ளஃப்மாஸ்டர்’ என்ற பெயரில், ஹிந்தியில் சுடப்பட்டது. அபிஷேக்கிற்கு ஒரு நல்ல ப்ரேக்காக அமைந்த இப்படம், அவரது பிந்நாளைய ஹிட்களுக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.

படு விறுவிறுப்பாகச் செல்லும் இப்படம், கட்டாயமாக உங்கள் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- கருந்தேள் கண்ணாயிரம்

8mm (1999) - English

8mm_poster

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக – 20 நிமிடங்கள்) பார்த்தவுடன், சட்டென்று இப்படம் நினைவு வந்தது. எனவே, இதோ ஆரம்பித்தாயிற்று.

வீடியோ என்பது இந்நாட்களில் நமது வாழ்வோடு மிகவும் ஒன்றிவிட்ட ஒரு விஷயம். அதனை நல்லதாகவும் பயன்படுத்தலாம்; கெட்டதாகவும். நேற்று வெளிவந்த வீடியோ ஒரு நல்ல விஷயத்துக்காகப் பயன்பட்டிருக்கிறது. ஒரு பன்னாடையைத் தோலுரித்துக் (அந்த மொள்ளமாறி, நடிகையிடம் ப்ளோஜாப் அனுபவிப்பதை வேறு அந்த வீடியோ பதிவு செய்திருக்கிறது. ப்ளோஜாப் தப்பில்லை; ஆனால் சாமியார் வேடமிட்டு அதைச் செய்தது தவறு) காட்டியிருக்கிறது. ஆனால், ஒரு வீடியோ, ஒரு குரூரமான விஷயத்துக்குப் பயன்பட்டால்?

சில வருடங்கள் முன், இப்படத்தைப் பார்க்க நேர்கையில், அந்த பாதிப்பு அடுத்த இரு நாட்களுக்கு நீடித்தது. மனதை விட்டு அகலவேயில்லை இந்தப் படம். தம்ப்பிங் என்று சொல்வார்களே – அப்படி ஒரு படம்.

டாம் வெல்ஸ் ஒரு துப்பறியும் ஆசாமி. ஒருநாள், அவருக்கு, ஒரு மிகப்பெரிய, வயதான செல்வச் சீமாட்டியிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்தச் சீமாட்டியின் கணவர் சமீபத்தில் இறக்கவே, அந்தக் கணவரின் சேஃப்டி லாக்கரைத் திறந்த போது, ஒரு படச்சுருள் அகப்படுகிறது. அந்தச் சுருளை டாமிடம் அளிக்கும் சீமாட்டி, அதனைப் பார்க்கச் சொல்கிறாள். அவர்களது திரைஅறையில் அதனை ஓடவிடுகிறார் டாம்.

ஒரு இளம் பெண். படுக்கையில் உள்ளாடைகளோடு அமர்ந்திருக்கிறாள். அவள் கண்களில் போதை. குழப்பமான மனநிலையில் இருக்கிறாள். அப்போது, அவளருகே ஒரு தடியன் வருகிறான். முகத்தை மறைத்திருக்கிறான். அவளைப் பலமாக அறைகிறான். ஒரு மேஜையில் இருக்கும் பல இரும்புக் கருவிகளிடையே தேடி, ஒரு கத்தியை எடுக்கிறான். மெல்ல கேமிராவைப் பார்த்துக்கொண்டே நடந்து, அவளருகில் நின்றுகொண்டு, அவளது உடல் மேல் கத்தியை மெதுவாக நகர்த்துகிறான். பின்னர், ஒரு திடீர் வேகத்தில், கத்தியை அவள் உடலெங்கும் குத்தி, அவளை கிழித்துக் கொல்கிறான். இதைப் பார்க்கும் டாமின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

வெளியே வரும் டாமிடம், இந்த வீடியோ உண்மையா அல்லது பொய்யா? உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மை ஆகியனவற்றைக் கண்டுபிடிக்கச் சொல்லி, பணத்தையும் அளிக்கிறாள் அந்த மாது.

வீட்டிற்கு வரும் டாம், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு, துப்பறியத் துவங்குகிறார். அவருக்கு ஒவ்வொன்றாகக் கிடைக்கும் தகவல்கள், ஒரு பெரிய குற்ற சாம்ராஜ்யத்தையே இருளிலிருந்து வெளியே கொணர்கின்றன.

ஸ்னஃப் படங்கள் என்று ஒரு வகை உண்டு. உலக மக்களில் பெரும்பாலானோர் மிதவாதிகள் (அல்லது அப்படி நடிப்பவர்கள்). இவர்களுக்கு, எந்த வகை சந்தோஷமாக இருந்தாலும், அது பொதுவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விஷயமாக இருந்தாலே போதுமானது. ஆனால், வேறுவகையைச் சேர்ந்த சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆர்கஸம் வரவழைக்க, குரூரமான விஷயங்கள் தேவைப்படும். பிணங்களுடன் உறவு கொள்வது (நெக்ரோஃபீலியா), ஒரு உயிரைக் கொல்வது மூலம் சந்தோஷம் அடைவது, ரத்தத்தைப் பார்ப்பதன் மூலம் உச்சபட்ச இன்பம் அடைவது போன்ற சில விஷயங்கள் இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

நீலப்படங்கள் பொதுவில் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னைக் கொண்டிருக்கும். முக்காலே மூன்றரை வீசம் (நன்றி: கல்கி) நீலப்படங்கள் இப்படித்தான். ஆனால், ஸ்னஃப் படங்கள் வேறுவகை. உறவு கொண்டு முடித்த பின், அந்தப் பெண்ணையோ சிறுமியையோ அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்துக் கொல்வது இந்தப் படங்களின் ஸ்பெஷாலிட்டி. இப்பொழுதும் இந்தவகைப் படங்கள் இருக்கின்றன (இதைப்பற்றி ஒருநாள் விகடனில் மதன் எழுதியிருந்தது நினைவு வருகிறது).

இப்படிப்பட்ட ஒரு ஸ்னஃப் படமே டாம் அந்த வீட்டில் பார்த்தது. அது எங்கு உருவானது, அந்தப் பெண் யார் என்பதை டாம் சிறிது சிறிதாகக் கண்டுபிடிக்கிறார்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல அதிர்ச்சிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன. டாம் கண்டுபிடிக்கும் உண்மைகளைப் படத்தில் காணுங்கள். ஒரு அருமையான த்ரில்லர் இது.

டாமாக நம்ம நிகோலஸ் கேஜ். எந்த ரோலைக் கொடுத்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செஇவது இவரது ஸ்பெஷாலிட்டி. இதிலும் மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு அசாதாரண ஹீரோவாக இல்லாமல், சாதாரண மனிதராக இவரைக் காட்டியிருப்பது அருமை.

சமுதாயத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிகழும் ஒரு சிறிய அனாமலியை – ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சியை - எடுத்துக்கொண்டு, அதன் மூலம், இருளில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான உலகத்தையே கண்டுபிடிக்கும் வகையைச் சேர்ந்தது இந்தப் படம்.

இயக்கம்: ஜோயல் ஷூமாக்கர். பல அதிரடிப்படங்களின் இயக்குநர்.

8mm பாருங்கள். உங்கள் மதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது

- கருந்தேள் கண்ணாயிரம்

Before Sunset - English






நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும், மெதுவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்படும் அந்தக் கணங்கள் . . . இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படும் அந்த நிமிடங்கள். . சட்டென்று மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்த அந்த நொடிகள் . . சுருக்கமாய்ச் சொல்லப்போனால், பிஃபோர் சன்ரைஸ் படத்தைப் போல் இருக்கும்.

பத்து வருடங்கள் முன், பிஃபோர் சன்ரைஸ் படத்தில் நடந்த கதையின் தொடர்ச்சியே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், சன்ரைஸ் படத்தைப் பற்றி எழுதாமல், அதன் இரண்டாம் பாகத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம்? முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின் முதல் பாகத்தைப் பார்த்தால், இரு படங்களின் தாக்கத்தையும் முழுதாய் உணரலாம். இப்படத்தின் ஆரம்ப நிமிடங்களில் நாம் உணரும் ஒரு அற்புதமான மனநிலை, முதல் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் கிடைக்கும்.

ஜெஸ்ஸி (ஈதன் ஹாக்) ஒரு எழுத்தாளன். பத்து வருடங்கள் முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அப்புத்தகத்தைப் பாரிஸில் பிரமோட் செய்வதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்பொழுது, அங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நிருபர்கள், அப்புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான் ஜெஸ்ஸி. அப்பொழுது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத்தைப் பார்வையால் துழாவுகையில், ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண் தான், பத்து வருடங்கள் முன் அவன் சந்தித்த பெண்! பல வருடங்களாக இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக் கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் ஃப்ளைட்டைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலினிடம் (ஜூலி டெல்ஃபி) சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான்.


பல வருடங்கள் கழித்து ஜெஸ்ஸியைப் பார்த்த மகிழ்ச்சி செலினுக்கு. அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலினுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது. மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். பத்து வருடங்கள் முன், தாங்கள் பிரிந்த போது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்து விட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலின், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தனக்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது என்றும், ஆனால், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேகும் செலின், அவன் வர மறந்து விட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலினுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்து கொள்ளும் செலினால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளை சமாதானம் செய்கிறான்.

பேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலின் அறிந்து கொள்கிறாள். செலினுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளத் தொடங்குகின்றனர். செலின் தனது உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை மெல்ல வெளியிடத் தொடங்குகிறாள். தங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு, தன்னால் எந்த ஆணுடனும் இயல்பாகப் பழக முடிவதில்லை என்றும், எந்த ஆணுடன் தான் இருக்கும்போதும், ஏதோ ஒரு தனிமையைத் தன்னைச் சுற்றி உணர்வதாகவும் சொல்லும் செலின், தன்னுடன் எவரும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே இந்தத் தனிமை எண்ணத்திலிருந்து விடுபடுவதாகவும் சொல்கிறாள். அதனால் தான் அவளது காதலன் பல நாடுகளுக்கிடையில் சுற்றினாலும் அவள் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறாள்.

செலினின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்பிற்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன.

இருவரும் காஃபி அருந்துகின்றனர். அங்கிருந்து, செலினை அவளது அபார்ட்மெண்ட்டில் விட்டுவிட்டு வருவதற்காக, ஜெஸ்ஸி அவளுடன் செல்கிறான். காரில், செல்லும் வழியில், ஜெஸ்ஸியின் நெருக்கத்தை உணரும் செலின், அழத்துவங்குகிறாள். அவர்களது முதல் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவுகூரும் செலின், அவளது மனதில் இருப்பவற்றையெல்லாம் அப்படியே தனது கண்ணீரின் வழியே கொட்டத் தொடங்குகிறாள். தனது மடியில் முகம் புதைத்து அழும் செலினின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுக்க, ஜெஸ்ஸியின் கரம் எழுகிறது. ஆனால், அவளது தலையை நெருங்கும் கரத்தை, அவன் பின்னிழுத்துக் கொள்கிறான். அதன்பின், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, ஜெஸ்ஸி சொல்லத் துவங்குகிறான். தனது திருமணம், மனைவிக்கும் இவனுக்கும் இடையே எப்போதும் எழும் சண்டைகள், தனது மகனுக்காக மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கையை இன்னமும் முறிக்காமல் இருப்பது ஆகிய எல்லாவற்றையும் செலினிடம் மனம் திறக்கிறான்.


தங்களாலேயே, தங்கள் மனதில் எழும்பியுள்ள வெறுமையை இருவரும் உணர்கிறார்கள். அந்த வெறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அது இனிமேல் சாத்தியமே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது தெரிந்திருந்தாலும், இன்னுமிருக்கும் மிகக் குறைந்த நேரத்தில், இருவருமே ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ஜெஸ்ஸி, செலினின் அபார்ட்மெண்டுக்குள் வருகிறான். செலின், கிதார் பயின்று கொண்டிருப்பதால், அவளை ஒரு பாடல் பாடச் சொல்கிறான். தயக்கமே இல்லாமல், அவர்களது முதல் சந்திப்பினைப் பற்றி செலின் எழுதிய பாடல் ஒன்றை அவள் பாடத் துவங்குகிறாள்.

மிக உருக்கமான வரிகளை, மிகவும் சந்தோஷமான ஒரு மெட்டில் அவள் பாடப்பாட, நம் மனதில் ஒரு அற்புதமான உணர்வு எழும்புகிறது. அந்தப் பாடலை இதோ இங்கு காணுங்கள்.

பாடல் முடிந்ததும், நினா சிமோனின் பாடல்களை ஜெஸ்ஸி அங்கிருக்கும் சிடி ப்ளேயரில் போடுகிறான். செலின், மிக நளினமாக, நினா சிமோனை நினைவுபடுத்தும் முறையில் ஆடுகிறாள். ஜெஸ்ஸியின் ஃப்ளைட்டின் நேரம் நெருங்கி விடுகிறது.

இதன் பின் என்ன நடந்தது? காதலர்கள் இருவரும் இணைந்தார்களா? படத்தில் காணுங்கள்.


நினைத்துப் பாருங்கள்: பல வருடங்கள் முன் நாம் காதலித்த ஒரு ஆணோ பெண்ணோ, திடீரென நம் முன் தோன்றினால், எப்படி இருக்கும்? அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம்? இதை, அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். பல வருடங்களாக நாம் மறக்க நினைக்கும் சில நினைவுகளை, இப்படம் தூண்டிவிட்டு எழுப்புகிறது. ஆனால், அந்த நினைவுகள், நம்மை வருந்த வைப்பதற்குப் பதில், ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்பட வைக்கின்றன. ஒரு அமைதியான மாலை வேளையில், ரம்மியமான மழை நம் மனதில் என்ன உணர்வை ஏற்படுத்துமோ, அதை இப்படம் ஏற்படுத்துகிறது.

இப்படத்தின் திரைக்கதை, ஈதன் ஹாக் மற்றும் ஜூலி டெல்ஃபி இருவராலும் கட்டமைக்கப்பட்டது. முன்பே எழுதப்படாமல், கேமரா முன் நடிக்கும் அந்த நிமிடத்தில், இயற்கையாக அவர்கள் பேசிக்கொள்வதிலேயே இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டது. அதனாலேயே மிகவும் இயற்கையான வசனங்கள் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படத்தில் ஈதன் ஹாக்கின் கேரக்டரான ஜெஸ்ஸி, தனது குழந்தையின் காரணத்தாலேயே தன்னுடைய திருமணத்தை முறிக்காமல் தொடர்வதாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படம் வெளியானவுடனே, ஈதன் ஹாக், தனது மனைவியான உமா தர்மேனை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு முன்னரே உருவான குழந்தையின் காரணத்தாலேயே தான் இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பிஃபோர் சன்ரைஸ் படத்துக்கும் இப்படத்தும், சரியாக பத்து ஆண்டுகள் இடைவெளி.

மொத்தத்தில், வாழ்க்கையில் இழந்த தருணங்களின் வலியை நினைவுபடுத்தும் ஒரு படமே இந்த 'பிஃபோர் சன்செட்'. ஆனால், முற்றிலும் சந்தோஷமான ஒரு முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மிகப்பிடித்த காதல் கதைகளில் ஒன்றான இப்படம், நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கம், விவரிக்க இயலாதது.


Posted by கருந்தேள் கண்ணாயிரம்

உள்ளத்தை திறந்து வை!

* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.
* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.
* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.
* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

- விவேகானந்தர்

விருப்பங்கள் நிறைவேறும்

* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

-விவேகானந்தர்

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
கலைஞர் உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
மு.வ உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
மு.வ உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கலைஞர் உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
மு.வ உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
கலைஞர் உரை:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.
மு.வ உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் -


குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
கலைஞர் உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
மு.வ உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Wednesday, March 16, 2011

Tsotsi

ஒரு நல்ல படத்தை, எவ்வளவு கேவலமாகத் தமிழில் எடுக்கலாம்? அல்லது எடுக்கிறார்கள்?

Tsotsi , யோகி

Tsotsi - ஒரு அருமையான படம்
யோகி - தொலைக்காட்சியில், பாடல் காட்சிகளிலும், சிறு காட்சிகளிலும் பார்த்தது (அது போதாதா?) முழுன்மையாகப் பார்க்கும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவப் படவில்லை.


எதற்கும் கவலைப்படாத ஒரு சேரிப்புற ரவுடியின் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இணைந்து கொள்ள, என்னவாகிறது? - இதுதான் படத்தின் தீம்.

சிறுவயதில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரக்கமற்ற தந்தையிடமிருந்து ஓடிவந்து சேரிப்புறத்தில் தஞ்சமடைந்து, வளர்ந்த சொற்சி, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி, கொள்ளை, கொலை என வாழ்ந்து வருகிறான்.


ஒருநாள் பென்ஸ் காரொன்றை திருடும்போது, உள்ளே ஒரு குழந்தை, தாயை சுட்டு விடுகிறான். குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், அனாதையாக விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இறுதியில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்கிறான். ஒருவருக்கும் தெரியாமல் தானே வளர்க்க முடிவு செய்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களை உள்ளே நுழைய விடாமல், சந்தேகப் படும் அவர்களை ஒருவாறு சமாளித்து அனுப்புகிறான்.

கைக் குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அவளை மிரட்டி பாலூட்ட வைக்கிறான். முதலில் வற்புறுத்தலால் சம்மதிக்கும் அவள், நாளாக அக்குழந்தையின் மேல் பாசம் கொள்கிறாள்.


ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க செல்லும்போது, அது அந்தக் குழந்தையின் வீடு எனத் தெரிய வருகிறது. குழந்தையின் தந்தையிடமிருந்து அதன் தாய் அவன் சுட்டதால், இடுப்புக்கு கீழ் வழங்காமல் இருப்பதையும், குழந்தையைப் பிரிந்து இருவரும் மிகவும் வருந்துவதையும் உணர்கிறான். பணம், நகையை விட்டு குழந்தையின் விளையாட்டு பொம்மைகள், உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான்.

ஒரு சிறு குழப்பத்தில் குழந்தையின் தந்தையை சொற்சியின் சகா கொல்லப் போக, அவனைக் கொன்று தந்தையைக் காப்பாற்றுகிறான். இன்னொரு சகா வெறுத்துப் போய் அவனிப்பிரிந்து செல்கிறான்.

இப்பொழுது அவனுடன் குழந்தை மட்டுமே. அதான் ஆடம்பரமான பெரிய வீட்டைப் பார்த்த அவனுக்கு தனது குடிசையில், பாதுகாப்பின்றி வைத்திருப்பது அவன் மனதுக்கு கஷ்டமாக இருக்க, போலீஸ் வேறு அவனைத் தேட, முதன்முறையாக தான் வாழ்க்கையில் நேசித்த, அன்பு கொண்ட ஒரேயொரு ஜீவனைப் பிரிந்து விட முடிவு செய்கிறான்.


குழந்தையை அதன் வீட்டில் கொண்டுபோய் விட தூக்கி செல்லும்போது, அந்தப் பெண் எங்கே எடுத்துச் செல்கிறாய்? அவனை நான் வளர்க்கிறேன் என்னிடம் விட்டுவிடு எனக் கேட்க, அவன் எதுவுப் பேசாமல் போகிறான்.

துப்பாகிகளால் குறிவைத்தபடி போலீசார் சுற்றிநிற்க, குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அழுதபடி, சொற்சி கைகளை மேலே மெதுவாக தூக்க படம் நிறைவடைகிறது.

மிகத் தெளிவான, எளிமையான, குழப்பமற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு (குறிப்பாக அந்த 'ஸ்லம்' காட்டப்படும் விதம்)

சொற்சி பாத்திரத்தின் இயல்பான நடிப்பு, குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும்போது வெளிப்படும் (தாய்ப் பாசத்துக்கு ஏங்கும்) முகபாவனை

இயக்கம் - Gavin Hood
Country- South Africa
Award - Academy Award for Best Foreign Language Film 2005
- Nominated for Golden Globe for Best Foreign Language Film 2006

யோகி

tsotsi என்றால் ரவுடி / பொறுக்கி
யோகி என்றா? ( பெயரிலேயே வித்தியாசமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க)

அதில டீன் ஏஜ் ஹீரோ.
இதில நம்ம 'யூத்து' அமீர்.

அதில பெயருக்கு ஏற்றமாதிரி ஹீரோ ரவுடி. மற்ற எல்லாரும் இயல்பான பாத்திரங்கள்.
இதில தமிழ் சினிமா விதிகளின்படி ஹீரோ நல்லவர், வல்லவர், நியாயமானவர் இன்னபிற. அவர்தான் ஹீரோவாச்சே.. அப்போ மற்ற எல்லாரும் கெட்டவங்க.

அதில, அவன் கெட்டவனாகவே வாழ்கிறான். அவன்தான் படத்தில் வில்லன். அதையும் தாண்டி இறுதிக் காட்சியில் அவன் மேல் எங்களுக்கு இரக்கம் ஏற்படும்.
இதில இவர் 'ஹீரோ'வா இருக்கிறார், நடக்கிறார், இறுதியில் சாகிறார். எங்களுக்கு? (அப்பாடா! போயிட்டானா? அவ்வளவு சேட்டை, தாங்க முடியல!)

ஆனா இரண்டிலையும் ஹீரோயின் சறம் கட்டி இருக்காங்க. அபிரிக்காவில பெண்கள் சறம் கட்டுவாங்க ஒக்கே. தமிழ் நாட்டிலையும் கட்டுறாங்களா? எனக்குத் தெரியல.

ஒண்ணு மட்டும் எனக்குப் புரியவே மாட்டேங்குது. யோகிய ஏன் இரண்டு வருஷமா எடுத்தாங்க? ஒன்னுமே தெரியாத நானே, புது முகங்களை வைத்து (பழைய முகம்னா 'நடிக்கத்' தொடங்கிடுவாங்களே), ஒவ்வொரு ஸீனா பாத்துப் பாத்து, காட்சியமைத்து (அவ்வளவு தெளிவா இருக்கு படம்), ஆறு மாசத்தில எடுத்துடலாம் ன்னு நினைக்கிறேன்.
அமீருக்கு ஏன் இவ்வளவு நாள்? இதில டைரக்க்ஷன் வேற ஒருத்தர், கதை அமீரோடதாம் (பார்ரா!!)

tsotsi யை அப்படியே தமிழில் எடுத்திருந்தால், தமிழ் சினிமாவின் ஒரு நல்ல படைப்பாக இருந்திருக்கும். ம்ம் என்னமோ போங்க!

The Pianist

இரண்டாம் உலகப் போரில் மிகக்கொடூரமான முறையில் இன அழிப்பை மேற்கொண்டிருந்தது ஹிட்லரின் படை. ஆனால் அதிலும் மனதில் சிறிதும் விருப்பமின்றி, இராணுவச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டும் அப்படிச் செயற்பட்ட, மனித நேயம் கொண்ட, இரக்கமுள்ள இராணுவ அதிகாரிகள் இருந்திருப்பார்கள் தானே?

எல்லா இடங்களிலும் இருப்பார்கள்தானே...!


போலந்தில் வாழ்ந்த ஸ்பில்மென் தன் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய The Pianist இலிருந்து 2002 இல் வெளிவந்த படம்.


1939 ம் ஆண்டு. போலந்தின் தலைநகர் Warsaw வில் வசிக்கும் திறமையான பியானோக் கலைஞனான ஸ்பில்மென், அங்குள்ள வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான்.


திடீரெனக் குண்டுகள் வெடிக்க, வானொலி நிலையச் சுவர்கள் தகர்ந்து விழ, வெளியில் வருகிறான். மக்கள் பயந்தோடும் அந்த நேரத்தில் டோரதா என்னும் பெண் ஸ்பில்மெனை அடையாளம் கண்டு அவனது வாசிப்பைப் புகழ, அறிமுகம் ஏற்படுகிறது இருவருக்கும். வீட்டில், எல்லாரும் பாதுகாப்பான இடத்துக்குச்செல்ல தயாராகிறார்கள். வானொலியில் போர் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஹிட்லரின் படைகள் ரோந்து வருகின்றன.




யூதர்களான ஸ்பில்மென், டோரதா வீதியில் சந்திக்கிறார்கள், கடைகளில் யூதர்கள் நுழையக் கூடாது, வீதியோர இருக்கைகளில் அமரக்கூடாது என்ற அரசாங்க அறிவிப்பு டோரதாவுக்கு அதிர்ச்சியாகஇருக்கிறது.

யூதர்கள் அனைவரும் வலது கையில் அடையாளத்துக்காக ஒரு Badge அணியச் செய்கிறார்கள். பட்ச் அணிந்தவர்கள் படைவீரர்களால் தாக்கப்படுகிறார்கள். யூதர்களுக்கான தனிக் குடியிருப்பு அமைக்கப்பட்டு, அக்டோபர் 31 க்குள் அனைவரையும் அங்கு குடியேறச் சொல்ல, சோகத்துடன் மக்கள் அந்தச் சிறிய குடியிருப்பில். வறுமையைப் போக்க பியானோவை விற்கிறான் ஸ்பில்மென். யாரும் வெளியேறாமல் குடியிருப்பைச் சுற்றி பெரிய சுவர்.




ஸ்பில்மென் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பியானோ வாசிக்கும் வேலையில் சேர்கிறான். வறுமை, படையினர் கொடுமை, இரவுகளில் ரோந்து காரணமாக விளக்குகள் அணைத்துவிட்டு வாழ்கிறார்கள். போலீஸ் வேலைக்கு யூதர்களைத் தேர்ந்தெடுக்க, அதில் ஸ்பில்மென் குடும்பத்துக்குத்தெரிந்த யிட்சாக் போலீசாகிறான். அவன் ஸ்பில்மெனை படையின் இசைக்குழுவில் சேருமாறு கேட்க, அவன் மறுக்கிறான்.



ஆகஸ்ட் 16, 1942. எல்லோரும் தங்கள் உடைமைகளுடன் எங்கு போகிறோமெனத் தெரியாமல் அழைத்துச் செல்லப்பட, இறந்த உடல்கள், கூட்டம் கூட்டமாக உறவுகளைதேடியலையும் மனிதர்கள். சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் செல்லும் ரயிலில் வரிசையாக எல்லோரும் ஏற, யிட்சாக், ஸ்பில்மெனை தனியே இழுத்துவிட, தன் குடும்பத்தைப் பிரிந்து, இறந்த உடல்கள், சிதறிய உடைமைகள், யாருமற்ற வீதியில் அழுதுகொண்டு செல்கிறான்.



குடியிருப்பில் எஞ்சியவர்களோடு ஸ்பில்மென் கட்டடவேலை செய்கிறான். முன்பு தன் இசைக்குழுவில் இருந்த பாடகி ஒருத்தியைச் சந்தித்து, குடியிருப்பிலிருந்து தப்பித்து நகரத்திற்கு செல்கிறான். 16 மே 1943 ம் ஆண்டு. ஜெர்மானியருக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறி பழைய தோழியான டோரதா வீட்டுக்கு வர, அவளும் கணவனும் அவனுக்கு உதவி செய்து, சந்தேகம் வராதிருக்க, ஜெர்மானியர் தங்கியுள்ள பகுதியிலுள்ள வீடொன்றிலேயே அவனைத் தங்க வைக்கிறார்கள்.


போர் முடிவுக்கு வருகிறது. கிளர்ச்சிப் படையினர் தாக்குதல்களினால் ஆத்திரமடையும் ஜெர்மன் படைகள் ஸ்பில்மென் தங்கியுள்ள பகுதியிலுள்ள கட்டடங்களை எல்லாம் தகர்த்து, கொளுத்த, ஸ்பில்மென் தப்பி ஓடுகிறான்.



ஜெர்மன் படைகள் துரத்த, பசியோடு, இடிந்த கட்டடங்களில் உணவு தேடி, மீந்த தானியங்களை உண்டு, பாசித் தண்ணீரைக் குடித்து, மரணம் துரத்த ஓடுகிறான்.

ஒரு வீட்டில் சமையலறையில் உணவு கொண்ட டின் ஒன்றைக் கண்டெடுத்து, அதைத் திறக்க முயல, பியானோ சத்தம் கேட்க, பயத்தில் மேலே ஏறி, ஒளிந்து கொள்கிறான்.
மறுநாள் அந்த டின்னைத் திறந்து விட்டு நிமிர எதிரே...ஜெர்மன் இராணுவ அதிகாரி ஒருவர். ஸ்பில்மென் பயத்தில் உறைய, யார் நீ? எனக் கேட்கிறார். தான் ஒரு பியானோ கலைஞன் என்று சொன்னதும் அதிகாரி ஆச்சரியப்பட்டு அவனை அங்கிருக்கும் பியானோவை வாசிக்கச் சொல்கிறார்.



பசி, களைப்பு, மரண பீதி, தாடி மீசையுடன் இருக்கும் ஸ்பில்மென் மெதுவாக, வாசிக்கத் தொடங்கி, தன்னை மறந்து அதனோடு ஒன்றிப் போய் வாசிக்க, பிரமிக்கிறார் அந்த அதிகாரி. எங்கே ஒளித்திருந்தாய்? எனக் கேட்க, ஸ்பில்மென் தான் மேலே இருந்த இடத்தைக் காட்டுகிறான்.


அங்கேயே அவனை ஒளிந்திருக்கச் செய்து, அவனுக்குத் தேவையான உணவுகளையும் வழங்குகிறார். இன்னும் சில வாரங்களில் போர் முடிந்துவிடும் எனக்கூறும் அவர், 'அதன்பிறகு என்ன செய்வாய்?' எனக்கேட்க, 'வானொலியில் பியானோ வாசிப்பேன்' என்கிறான் ஸ்பில்மென். 'நான் அதைக் கேட்கிறேன்' எனக் கூறுகிறார் அவர்.
குளிரில் நடுங்கும் ஸ்பில்மெனுக்குத் தனது மேலங்கியைக் கொடுத்து விட்டு விடை பெற்றுச் செல்கிறார் அந்த அதிகாரி.


ஸ்பில்மென், அந்த மனித நேயமுள்ள அதிகாரி என்ன ஆனார்கள்?


-பூட்டப்பட்ட அறையில் தனியாக இருக்கும்போது, அருகில் பியானோ.. வாசிக்கும் ஆவலுடன் ஸ்பில்மென்..ஆனால் சத்தம் கேட்க கூடாது என்ற சூழ்நிலையில், அவன் கை படாமல் காற்றில் கைவிரல்களை அசைக்க, அவன் மனதில் ஒலிக்கும் அந்த இனிய இசை.
-ஜெர்மன் அதிகாரி முன்னிலையில் ஸ்பில்மென் வாசிக்கும் காட்சியும், இசையும்.


-போர் முடிந்து ஜெர்மன் படைகள் போர்க்கைதிகளாக இருக்கும்போது, அந்த அதிகாரி, ஸ்பில்மெனுக்கு உதவியதைக் குறிப்பிட்டு, தன்னைக் காப்பாற்ற முடியுமா? எனக் கேட்கும் நெகிழ்வான காட்சி.
- படம் முழுதும் பின்னணி இசை இவை என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

இயக்கம் - Roman Polanski
மொழி - Polish

விருதுகள் -
3 Academy Awards - Actor, Director, Screenplay
Cannes Films Festival 2002
2 BAFTA Awards 2003 - Best Film, Best Direction