Thursday, March 3, 2011

குளிர்பானங்கள் வர்த்தகத்தில் களமிறங்குகிறது அமிர்தாஞ்சன்




சென்னை : அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், குளிர்பான வர்த்தகத்தில் களமிறங்க இருப்பதாக மும்பை பங்குசந்தையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குளிர்பான வர்த்தகத்தில் களமிறங்கும் பொருட்டு, முதற்கட்டமாக, சிவா சாப்ட் டிரிங்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தன்வசப்படுத்தியுள்ளது. சிவா சாப்ட் டிரிங்க் நிறுவனம், தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் தென்பகுதிகளில் 'புரூட்னிக்' என்ற பெயரில் குளிர்பானங்களை வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 2010 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ. 3 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: