Monday, March 22, 2010

கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா?




கையை நீங்கள் தினமும் கழுவி சுத்தம் செய்வீர்களா? சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள்? ஹேண்ட் வாஷ் திரவத்தை வாங்கி பயன்படுத்துபவரா நீங்கள்?


— என்னடா இது, கை கழுவுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், படித்து முடித்தபின், இனி, தினமும் ஒழுங்காக கைகளை கழுவுவீர்கள்.
நாகரிக உலகில், இப்போதெல்லாம், எப்படி பல் துலக்குவது, எப்படி கையை கழுவுவது என்று பயிற்சி வகுப்பு துவங்கினால் கூட, ஆச்சரியப் படுவதற்கில்லை.

தனி நபர் சுத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான், புதுப்புது வைரஸ் நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.

உங்கள் கைகள், எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?

உடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம். பன்றிக்காய்ச்சல் நோய் வரும் வரை, கையை சுத்தமாக கழுவுவது பற்றி, பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருந்ததில்லை.

ஆனால், கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அவற்றில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி அதன் மூலம், ஒருவருக்கு அந்த நோய் வரும் ஆபத்து உண்டு என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த பின் தான் மக்கள் விழித்துக் கொண்டனர்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, "ஹேண்ட் சேனிட்டர்' மற்றும் "ஹேண்ட் வாஷ்' லோஷன்கள் மூலம் கையை கழுவ வேண்டும்; அப்படி செய்தால், வைரஸ் தாக்காது என்று அறிவிப்பு வெளிவந்ததும், இந்த லோஷன்கள் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. தரமான, "ஹேண்ட் சேனிட் டர்' லோஷன்களை சில நிறுவனங்கள் தான் தயாரித்து விற்பனை செய்தன.ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பெயரளவுக்கு இவற்றை புதுப் புது பெயர்களில் வெளியிட்டு, சந்தையில் குவித்தன.
எது நல்ல, "ஹேண்ட் சேனிட்டர்' என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 60 முதல் 90 சதவீதம் வரை ஆல்கஹால் கலந்த சேனிட்டர்களாக இருந் தால் தான் நல்லது.

வைரஸ்களை அப்புறப் படுத்தி, கையை சுத்தப்படுத்த ஆல்கஹால் அடிப்படையிலான, திரவ சாதனங்கள் தான், சிறந்தது என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதெல்லாவற்றுக்கும் மேலாக, தரமான சோப்பால் கையை சுத்தப்படுத்தினாலே போதும்.

தண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும்; கைகளும் சுத்தமாகும்.

குறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கைகளை சுத்தம் செய்யும் போது, குறைந்த பட்சம் 30 நொடிகளாவது கைகளை சோப்பு, லோஷன்கள் மூலம் சுத்தம் செய்து அதன் பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.
டென்ஷன்...' அர்ஜென்ட்... என்று எல்லாம் சாக்கு போக்கு சொல்லாமல், கை சுத்தம் செய்து, நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள் வீர்கள்தானே!

நன்றி - தினமலர்

Thursday, March 18, 2010

மூளைக்கு பலம் 'ஜாகிங்'




ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும்.ஓடும்போது உடலின்
அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.

சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள்.எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு
புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.

எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள்உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.

ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாகதுணைபுரிகிறது.

நன்றி - தினகரன்

Wednesday, March 17, 2010

வெண்மேகம் பெண்ணாக..


வெண்மேகம் பெண்ணாகஉருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்துவிளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தைசொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வைபார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக்கண்கலங்க நிற்கவைக்கும்தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில்பெண்ணினமேகோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வதுவீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம்பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான்சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான்காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

எங்கள் மனதைக்கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும்மந்திரமும் எங்கு சென்றுபடித்தாய்?
விழியசைவில் வலைவிரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில்தூக்கிச் செல்லகட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும்வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன்நானடி!
என் காதலும்என்னாகுமோ!
உன் பாதத்தில்மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனுபோங்கொ!

வெண்மேகம் பெண்ணாகஉருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்துவிளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தைசொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வைபார்த்தால் என்ன?

உன்னாலே பலஞாபகம்என் முன்னேவந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

படம்-யாரடி நீ மோகினி
பாடல் -
வெண்மேகம் பெண்ணாக..