Thursday, September 9, 2010

மாதுளை

மாதுளை









மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள் :


* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.

* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.



* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.

* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.



* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.

* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.




* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.

* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.

* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.



* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.



* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.

* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.

* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.




* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

நன்றி - ஆரோகியச்சறல்

இதயம் குறித்த சில தகவல்கள்




பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும்.
ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும். இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும்.முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.

நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக
ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து
மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை.
இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை
பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.

1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.

பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில்

ஏற்படுகிறது.

காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை, ஞாபகம் ,நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.

சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.

நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு
கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.

ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.

உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கைஆண்டுதோறும் 1.5 கோடியாகும். வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாகஇருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.

நன்றி - தினகரன்

Wednesday, September 8, 2010

உலகில் எந்த காதல்


படம் : நாடோடிகள்
இசை : சுந்தர்.சி.பாபு

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : ஹரிஹரன்

வெளியான ஆண்டு : 2010








உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

நினைவுகளாலே நிட்சியதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு

ஒரு புறம் தலைவன்
மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துக்காக
காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்

யார் காரணாம்
ஆஹா…
யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல

கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் வானிலை
உணர்வை பார்ப்பதேது
உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எரிந்தாளே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே

நதி வழி போனால்
கரை வரக்கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போட
வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே

என் சொல்வது
என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்

கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும்
என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

Tuesday, September 7, 2010

வா வா நிலவ புடிச்சி...


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : ராகுல் நம்பியார்

வெளியான ஆண்டு : 2010





வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வானத்தில் ஏறி ஏணிக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

கவலை நம்மை சிலனேரம் கூறுப்போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்

கடலை சேரும் நதியாவும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்

ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்

அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
—-
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓ ஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

தனனன னனனா
தனனன னனனா
னன னன ஓஹோ…
ஓஹோ… னன னன னன னன னன னனா னா

ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரலாதே
இதயம் வேர்த்து துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே

கன்வில் நீயும் வாழதே கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே

அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்து போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
—-
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ… ஹோ.. ஹோ…
ஓஹோ… ஹோ.. ஹோ…