அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.
கதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் புடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க?
பின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள்! எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம்! ( கொடும சார் ).
கடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும்? இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.
படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா.
படத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா!
No comments:
Post a Comment