Thursday, March 3, 2011

The Stoning of Soraya M.



பெண் விடுதலை, பெண் உரிமை என்று மேடைப் பேச்சுக்கள் நடுவில் தான் 53 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்ற புள்ளி விபரமும் சொல்கிறது. பெண்கள் பாதுக்காக பர்தா அணியும் நாட்டில் தான், அணியாதவர்களின் முகத்தில் திரவம் புசப்படுகிறது. பெண்களை கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை வழங்கும் நாட்டில் தான், ஆணுக்கு நான்கு திருமணங்கள் அனுமதிக்கப்படுகிறது. பெண் பாதுகாப்பு என்று பேசுவது எல்லாம் பெண்ணை ஏமாற்றி அவளை அனுபவிக்கும் போர்வைகளாக தான் எல்லா நாட்டிலும் இருந்து வருகிறது. ‘மதம்’ என்ற போர்வையில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘The Stoning of Soraya M.’

பிரென்ச் - இரானிய பத்திரிகையாளரான சஹிப்ஜம் இரானிய கிராமத்தில் காரில் நுழைவயும் போது கதை தொடங்குகிறது. அவன் கார் பழுதுப் பார்க்க கொடுத்திருக்கும் நேரத்தில் சகாரா என்ற பெண் அவனிடம் பேச வருகிறாள். அந்த நேரத்தில் அந்த கிராமத்து முல்லா, மெயர் இருவரும் வர சகாரா அந்த இடத்தை விட்டு நகர்கிறாள். ஆனால், தன் வீடு இருக்கும் குறிப்பை அவனிடம் கொடுத்து விட்டு செல்கிறாள்.

சகாரா என்ன சொன்னதாக பத்திரிகையாளரிடம் முல்லாவும், மேயரும் கேட்கிறார்கள். அவன் ஒன்றுமில்லை என்று சொல்லி மறுக்கிறான். ஆனால், கார் பழுதுப் பார்க்கும் நேரத்தில் அந்த பெண்மணி என்ன சொல்ல வருகிறாள் என்பதை கேட்க சஹிப்ஜம் செல்கிறான்.

அப்போது சகாரா சஹிப்ஜமின் டேப்ரெக்கார்டரில் தன் உறவுக்காக்காரப் பெண்ணான சோராயாவின் கதையை பதிவு செய்ய சொல்லுகிறாள்.


இரண்டு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகளுடன் சோராயா அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். அவளது கணவன் அலி பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அவளை சித்தரவதை செய்கிறான். இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் அலி, இரண்டு குடும்பத்தை ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் அவளை விவாகரத்து செய்துக் கொள்ள நினைக்கிறான். அதே சமயம் தனது இரண்டு மகன்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொள்ள நினைக்கிறான். அந்த கிராமத்து முல்லாவின் ரகசியம் தெரிந்ததால் அலி முல்லாவை மிரட்டி தனக்கு விவாகரத்து வாங்கி தர சொல்லுகிறான்.



இஸ்லாமிய சட்டப்படி மனைவியை அடிப்பது தவறு என்பதால், அந்த கிராமத்து முல்லா சோராயாவிடம் அவளது கணவனை விவாகரத்து செய்ய சொல்லுகிறான். சோராயா மறுக்கிறாள். ’அவளது காதலனாக வேண்டும்’ என்று தனது காமப்பார்வையை வீசுகிறான். இதை ஒளிந்திருந்து கேட்ட சகாரா அவனை திட்டி விரட்டுகிறாள். சகாராவிடம் சோராயா தன் கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முல்லாவை தூண்டி விடுவததாக சொல்லுகிறாள்.



இந்த சமயத்தில் அந்த கிராமத்தில் ஒரு பெண் இறந்து விட அவளது கணவனுக்கும், மகனுக்கும் உதவியாக வீட்டு வேலையை சோராயா செய்ய வேண்டும் என்று முல்லா சொல்லுகிறான். தன் கணவன் அலியிடம் இருந்து எந்த பணம் வராததால் பணத்திற்காக வேலை செய்ய சம்மதிக்கிறாள். இதை சந்தர்ப்பமாக பயன்ப்படுத்திக் கொண்டு, அலி தன் மனைவிக்கும், இறந்த பெண்ணின் கணவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரில் வதந்தி பரப்புகிறான். முல்லாவுடன் சேர்ந்து அலி தன் மனைவியைப் பற்றி மெயரிடம் புகார் கொடுக்கிறார். எந்த சாட்சி இல்லாததால் அவர் புகார் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.


விதவையின் கணவனிடம் தன் மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக பொய் சொல்ல சொல்லுகிறான். அதை மறுத்தால், தன் மனைவியுடன் அவனும் சேர்ந்து தண்டிக்கப்படுவாய் என்று மிரட்டுகிறான். முல்லா அலிக்கு ஆதரவாக இருப்பாதால், தன் மகனின் எதிர்க்காலத்தை நினைத்து பொய் சொல்ல சம்மதிக்கிறான். அலி பரப்பி விட்ட வதந்தி ஊர் முழுக்க பரவுகிறது. தகுந்த சாட்சிகளுடன் அலி மெயரிடம் தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று நிருப்பிப்பதால், அவளை கல்லால் அடித்துக் கொள்ள தீர்ப்பு வழங்கப்படுகிறது.


இடுப்பளவில் சோராயாவை புதைத்து ஊர் மக்களோடு சேர்த்து அவளின் அப்பா, கணவன், மகன்கள் அவள் மீது கல்லெரிந்து கொள்கிறார்கள். இரத்தம் சொட்ட சொட்ட சோராயா இறக்கிறாள்.


இந்த பெண் என்ன பெரிதாக சொல்லப்போகிறாள் என்று சஹிப்ஜம் முகத்தில் சோகம் ஓட்டிக் கொள்கிறது. சகாரா வீட்டில் சோராயாவின் இரண்டு பெண் குழந்தையை பார்த்தப்படி அவள் பேச்சை பதிவு செய்த கேசட்டுடன் செல்கிறான். சகாரா வீட்டில் இருந்து சஹிப்ஜம் வருவதை பார்த்த முல்லாவும், மேயர் துப்பாக்கி முனையில் அவனிடம் இருக்கும் எல்லா குறிப்புகளையும் பிடுங்கிவிடுகிறார்கள். தன் கையில் இருப்பதை எல்லாம் கொடுத்த சஹிப்ஜம், காரில் கொஞ்ச தூரம் சென்றது சகாரா அவள் பேச்சு பதிவு செய்ய கேசட்டை வீசுகிறாள்.


சோராயாவின் கணவன் அலி அந்த சிறுமி திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் கிராமத்துக்கு திரும்புகிறான். அர்த்தமே இல்லாமல் ஒரு பெண்ணின் உயிர் மத அடிப்படையில் கொல்லப்பட்ட உண்மை சம்பவம் என்ற வாசகங்களோடு, ஒன்பது வயது சோராயாவின் புகைப்படத்தோடு படம் முடிகிறது. சோராயாவுக்கு நடந்த அநீதி உலகிற்கு சொன்ன நிம்மதியில் அல்லாவுக்கு சகாரா நன்றி சொல்கிறாள்.


எலும்பு துண்டுகளை தண்ணீரில் கரைப்பதுப் போல் சகாரா கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. தன் உறவுக்கார பெண்ணின் வாழ்க்கை சொல்ல தொடங்கும் வரை இவர் தான் கதையின் முக்கிய பாத்திரம் என்று நினைக்கத் தோன்றுகிறது. சோராயா கதாபாத்திரம் அறிமுகப்படுத்தியதும் ஒரு பெண்ணடிமை சமூகமும் சேர்ந்து அறிமுகமாகிறது.


சோராயா இறக்கும் தன்னை கல்லால் அடிக்க வரும் ஆண்களைப் பார்த்து, “எப்படி இதை உங்களால் செய்ய முடிகிறது ?”. தன் அப்பாவை பார்த்து, “மகளாக இருந்திருக்கிறேன்”. கணவனைப் பார்த்து, “ உனக்கு மனைவியாக இருந்திருக்கிறேன்”. மகனிடம், “உனக்கு அம்மாவாக இருந்திருக்கிறேன். மற்றவர்களை “உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணாக இருந்திருக்கிறேன். என்னை கொல்ல மனம் வந்தது” என்று கேட்கும் போது கல்லும் கரைந்துவிடும். குறிப்பாக, பெற்ற மகன்களே அவள் மீது கல் ஏறியும் போது சராசரி பார்வையாளன் கூட தாங்கிக் கொள்ள முடியாது.

அலி தன் மனைவி அறையும் போது, தன் இரண்டு மகன்கள் பார்த்தை பார்த்ததும் அவர்களிடம், “ இந்த உலகம் ஆண்களுக்கு சொந்தமானது” என்று சொல்லும் காட்சி சிறுவயதிலே ஆண் ஆதிக்கத்தனத்தை வளர்க்கும் சமூகத்தைக் காட்டுகிறது. சோராயாவை கல்லெறிய சிறுவர்கள் கல்லை சேகரிக்கும் காட்சி கோபம்ப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு பெண்ணின் மரணம் அவர்களுக்கு கேளிக்கை நிகழ்வாக அமையும் சமூதாயத்தில் வாழ்கிறார்கள் என்பதை அந்த காட்சி காட்டுகிறது.

இரானில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இரானில் பெண்களுக்கு எதிராக கல்லெறிவதை உலக பார்வைக்கு எடுத்து செல்லுவிதமாக இந்த படம் அமைந்துள்ளது. பெண்ணுக்கு எதிராக நடக்கப்படும் இக்கொடுமை பல கண்டிப்பு, கண்டங்கள் உட்பட்டாலும் இன்னும் சில இஸ்லாமிய நாடுகளில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.


எழுத்து - குகன் பக்கங்கள்

No comments: