Thursday, March 3, 2011
ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது
சென்னை : நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு 25 பைசா நாணயம் ஜூன் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கோ.ரா.ஆனந்தா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய நாணயச் சட்டம் 1906ன் கீழ், வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது.
எனவே, ஜூன் 29ம் தேதிக்குள் சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள், ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், பொதுமக்கள் இந்த நாணயங்களை மாற்றிக் கொண்டு அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment