Monday, February 21, 2011

முடிந்ததைச் செய்யுங்கள்


* உங்களைச் சுற்றி உள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறிவிட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.

* உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவது தான் துயரமான ஒன்று.

* மற்றவரிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாக இருக்கட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாக இருக்கட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறி விட்டால் அவை நிகழ்வதில்லை.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல், நடத்த எந்த விழிப்பு உணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வுடன் இருத்தல் அவசியம்.

* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* மனம் என்பது அதன் செயல்களில் மட்டுமே உயிர்த்திருக்கிறது. அதற்கென்று தனியாக வேறு இடம் இல்லை. செயல்கள் நின்று போனால் மனம் என்று ஏதும் இல்லாது போய்விடும்.

-சத்குரு ஜக்கிவாசுதேவ்

No comments: