Friday, February 25, 2011
பணத்தை தலையில் சுமக்காதீர்!
* உங்களைச் சுற்றியுள்ள உன்னதத்தை உணர நீங்கள் தவறி விட்டால், உங்கள் மூளை ஒரு நரகத்தை உருவாக்கக் கூடும். ஒவ்வொரு நாளும் அது புதிது புதிதாய் நரகங்களை உருவாக்கும்.
* சுவாசம் என்பது வெறும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் அர்த்தமற்ற செயல் அல்ல. ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிற படைப்பின் பரிமாணங்களையும் படைத்தவனையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டு, மனதில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
* உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று.
* அதிக செல்வம் துன்பத்தை தராது. சட்டைப்பையில் நிறைய பணம் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. ஆனால், அந்தப்பணம் உங்களுடைய சட்டைப்பையில் தங்காமல் தலைக்கு மேல் ஏறும் போதுதான் துன்பம் வரும். பணம் அப்படி தலைக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதனுடைய இடம் அது அல்ல.
-சத்குரு ஜக்கிவாசுதேவ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment