Thursday, February 3, 2011

கேரட் அல்வா






சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதுமான கேரட் அல்வா செய்வது எப்படி? இதோ எளிய செய்முறை.

தேவையான பொருள்கள்:

கேரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
காய்ச்சிய பால் - முக்கால் கப்
உப்பு - 1/4 சிட்டிகை
முந்திரி - 6 பருப்புகள்
திராட்சை - 6
உருக்கிய நெய் - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு ரெட்பவுடர் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

* கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேகவைக்கவும்.

* பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

* ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கனமான உருளியில் பால், சர்க்கரை, கேரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை அளவாக ஊற்றிக் கிளறுங்கள்.

* அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

அவ்வளவுதான்... கமகம கேரட் அல்வா தயார்!

No comments: