புதுடெல்லி, பிப்.28,2011
2011-12 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்களாவன:
இரட்டை இலக்க வளர்ச்சிக்கான முக்கியமான நிறுவன சீர்திருத்தங்கள் * கிராமப்புற பொருளாதாரம் துடிப்புடன் இயங்குவதற்கான பல்வேறு ஆதார வளங்கள் * 2010-11-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 விழுக்காடு வளர்ச்சி * முந்தைய ஆண்டைவிட 2010-11-ல் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஏற்றுமதி 9.6 விழுக்காடும், இறக்குமதி 17.6 விழுக்காடும் வளர்ச்சி * 2011-12-ல் இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. * கறுப்பு பணப் பிரச்னையை சமாளிப்பதற்காக ஐந்து அம்ச உத்தி, ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க அமைச்சர்கள் குழு * வரும் நிதியாண்டில் இந்திய பொது கடன் நிர்வாக முகமை மசோதா கொண்டு வரப்படும் * 2012 ஏப்ரல் 1 முதல் நேரடியான வரி நெறிமுறை * மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றை சிறப்பாக விநியோகிக்க, வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள மக்களுக்கு நேரடி ரொக்க மானியம் * 2011-12-ல் பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும் * அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கை மேலும் தளர்த்தப்படும் * வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபி பதிவு பெற்ற பரஸ்பர நிதி அமைப்புகளில் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் * கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக வெளியிடப்படும் பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள் * மேலும் தனியார் நிறுவனங்கள் வங்கிகளை அமைக்க அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது * பொதுத் துறை வங்கிகளில் 8 சதவீத அளவிற்கு சொத்துக்களை பாதுகாக்கும் விதத்தில் 2011-12-ம் ஆண்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் வழங்கப்படும் * அதே போல் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.500 கோடி அளவிற்கு இதுபோன்ற நிதி வழங்கப்படும் * இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி இந்தியாவின் குறு நிதி பங்குகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படவுள்ளது * மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடி மதிப்பில் தனி நிதியம் ஒன்று ஏற்படுத்தப்படும் * குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றுக்கு முறையே ரூ.5000 கோடி மற்றும் ரூ.3000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் * வீட்டு வசதிகளுக்காக கொடுக்கப்படும் கடன் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது * கிராமப்புற வீட்டு வசதி நிதி ரூ.3000 கோடியாக அதிகரிப்பு * தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.7860 கோடியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது * மழை பெய்யும் கிராமங்களில் பருப்பு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு * காய்கறி உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி * சத்துள்ள தானிய வகைகளின் உற்பத்தியை மேலும் மேம்படுத்த ரூ.300 கோடி * விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரோடின் சத்தை மேம்படுத்த ரூ.300 கோடி * 25 ஆயிரம் கிராமங்களில் விவசாயிகளுக்கு தீவிர கால்நடை உணவு மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்படும் * விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3,75,000 கோடியிலிருந்து ரூ.4,75,000 கோடியாக அதிகரிப்பு * கிராமங்களுக்காக கடன் வழங்கப்படும் நிதியத்திற்கு 2011-12-ம் ஆண்டுக்கு நபார்டு வங்கிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது * 2011-12-ல் மேலும் 15 பெரிய அளவிலான உணவு வளாகங்கள் அமைக்கப்படும் * இந்த ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புக்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும் * உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 23.3 சதவீதமாக அதிகரிப்பு * அரசு நிறுவனங்களால் உத்தேசிக்கப்பட்ட வரி இல்லா பத்திரங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு * நீராவி மற்றும் மின்சார ஊர்திகளுக்கு தேசிய இயக்கம் துவங்கப்படும் * உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் சார்ந்த சுற்றுச் சூழல் அனுமதி வழங்க அமைச்சர்கள் குழு * தோல் பொருட்கள் உற்பத்திக்கு 7 மாபொரும் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும் * சமூக துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இது மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 36.4 சதவீதமாகும் * பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு * அடுத்த மூன்றாண்டுகளில் ஊரகப் பகுதிகளுக்கு 2.5 லட்சம் அகன்ற அலைவரிசை தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும் * இந்திய பத்திர சட்டத்தில் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும். பத்திரங்கள் நவீனமயம் மற்றும் பத்திர பதிவு நிர்வாகத்திற்கு ரூ.300 கோடியில் திட்டம் * அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு * கல்விக்கான ஒதுக்கீடு 24 சதவீதமாக அதிகரிப்பு. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. இது 40 சதவீதம் கூடுதலாகும் * அறிவுசார் இணையத்தின் மூலம் 1500 உயர் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 2012-க்குள் ஒருங்கிணைக்கப்படும் * நூதன கண்டுபிடிப்புகளுக்கான தேசிய குழு ஏற்படுத்தப்படும். தேசிய தொழில் மேம்பாட்டு நிதிக்கு கூடுதலாக ரூ.500 கோடி * சுகாதாரத்திற்கான திட்ட ஒதுக்கீடு 20 சதவீதமாக அதிகரிப்பு * இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் மேலும் தளர்த்தப்படும் * பசுமை இந்தியா இயக்கத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு * நதிகளை தூய்மைப்படுத்த ரூ.200 கோடி * ஜம்மு-காஷ்மீர் மாநில மேம்பாட்டுக்கு ரூ.8000 கோடி ஒதுக்கீடு * வரும் அக்டோபர் மாதம் முதல் நாளன்றுக்கு 10 லட்சம் ஒருங்கிணைந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் * 2011-12-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 4.6 சதவீதமாக இருக்கும் * வருமான வரி உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக அதிகரிப்பு * மூத்த குடிமக்களுக்கான வருவமான வரி உச்சவரம்பு பெறும் வயது 65-லிருந்து 60 ஆக குறைப்பு. மிக மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 80 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு * நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 5 சதவீதமாக குறைப்பு பட்ஜெட் செய்திகள்: உணவுப் பொருட்கள் விலை கவலைக்குரியது: பிரணாப் உரை விமானப் பயண சேவை வரி உயர்வு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 5% குறைவு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்வு மத்திய பட்ஜெட்: விலை உயரும், குறையும் பொருட்கள் விவரம் பரஸ்பர நிதியில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அனுமதி ஓய்வூதியத் திட்ட வயது வரம்பு குறைப்பு ஏரிகள், ஆறுகளை சுத்தப்படுத்த ரூ.200 கோடி கல்வி திட்டங்களுக்கு ரூ.52,057 கோடி! சுகாதாரத்துறைக்கு ரூ.26,700 கோடி ஒதுக்கீடு தேசிய பணித் திறன் வளர்ச்சி நிதியத்துகு ரூ.500 கோடி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்து ரூ.20 கோடி விகடன்
உணவு விடுதிகளுக்கு சேவை வரி சேர்ப்பு
No comments:
Post a Comment