Friday, February 25, 2011

வாழக்கை ஆனந்தமயமானது




* வெளித்தோற்றத்தில் அப்பழுக்கில்லாமல் தூய்மையாகக் காட்சி தரும் வாழ்க்கையையே மக்கள் நாடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் தராதரம் என்பது ஒருவரின் மனத்தூய்மையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
* ஆன்மிகம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ, மனதையோ, ஆற்றல் மிக்க சக்திகளையோ அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை உலக அமைதி என்பது வெறும் கேலிப் பேச்சாகவே இருக்கும்.
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் நமக்கு நாமே ஆபத்தையும், அழிவையும் தேடிக் கொண்டு வாழ்கிறோம். உண்மையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் மட்டுமே உலகமே உய்வடையும்.
* அடிப்படையில் வாழ்க்கை ஆனந்தமயமானது. நீங்கள் ஆனந்தத்துடன் தொடர்பு கொள்வீர்களானால் உங்களைச் சார்ந்த அனைத்துமே ஆனந்தமயமாகி விடும்.
* நாம் ஒவ்வொருவரும் தத்தமது சிறப்பு இயல்புகளை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதே மனிதகுலத்தின் அடிப்படைத் தேவையாகும். ஒரு மரத்தைப் போல, சாதாரண இயல்புடன் இருந்தாலே போதும். வாழ்வின் உயர்ந்த பரிமாணம் நமக்குப் புலப்படத் தொடங்கும்.


-சத்குரு ஜக்கிவாசுதேவ்

No comments: