Friday, October 7, 2011

எண்ணம் முழுவதும் இறைமயம்


* கடவுளிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்துவதே உயர் பக்தியாகும்

* கடவுளிடம் உரிமையோடு கேட்பது, பண்டமாற்று முறையில் எதிர்பார்ப்புடன் வழிபடுவது, விருப்பு வெறுப்பின்றி அவரிடம் சரணடைவது ஆகிய மூன்று வகைகளில் மனிதன் கடவுளிடம் பக்தி செலுத்துகிறான். மூன்றாவது வகையே உயர்ந்தது.

*மனதில் ஞானம் உதயமாகி விட்டால், செயல்களின் பலன்களை கடவுளிடமே அர்ப்பணிக்கும் மனநிலை உண்டாகும். ஒரு கணம் கூட அந்நிலையில் இறைவனை மறக்க முடியாது.

* அன்றாடப்பணிகள் ஒவ்வொன்றும் கடவுளாலேயே நடக்கிறது. அவரை நினைத்து உண்ணவும், உறங்கவும், பேசவும் முயற்சியுங்கள். அவரே எல்லாம் என்பதை உணருங்கள்.

* கடவுளின் அருளை விட அவருடைய மேலான அடியவர்களின் அருளைப் பெற முயற்சியுங்கள். அவர்களின் தொடர்பு அவ்வளவு எளிதில் ஒருவருக்கு வாய்த்து விடுவதில்லை. உண்மையான அடியவரால் ஒருவரது வாழ்வின் போக்கையே மாற்றிவிட முடியும்.

- விவேகானந்தர்

No comments: