Monday, October 10, 2011

`மொபைல் பாங்கிங்’ பற்றித் தெரியுமா?


இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. `இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ்’ எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்
துள்ளது.

`மொபைல் பாங்கிங்’ வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம், ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.

உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.


தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.

`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல் பாங்கிங்’ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: