Friday, October 7, 2011

பிரதிபலன் எதிர்பாராதே


* நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.

* கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டதால், நம்முடன் வாழ்பவர்களை சகோதரர்களாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

* பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் பல நன்மைகளைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை உண்மையான பக்தி உண்டாகாது.

* மனிதன் பிறந்தது இயற்கையை வெல்வதற்காகத் தான். அதற்குப் பணிந்து போவதற்கல்ல.

* சக்தி என்பது நன்மை, தீமை என்னும் இருவழிகளில் வெளிப்படுகிறது. கடவுளும், தீயவனான அரக்கனும் எதிரெதிர் நீரோட்டம் உள்ள ஒரே ஆறுதான். நல்ல வழியில் சக்தியை செலவழிப்பதே உத்தமம்.

* இல்லறம் நடத்துபவனுக்கும், துறவறம் பூண்டவனுக்கும் இடையில் உயர்வு தாழ்வு இல்லை. அவரவர் நிலையில் அவரவர் சிறந்தவர்கள்.

* பக்தியில் ஈடுபடும் போது கடவுளைத் தனியாகவும், நம்மை வேறாகவும் பிரித்துப் பார்க்க வேண்டும்.

- விவேகானந்தர்

No comments: