Monday, October 10, 2011

பாங்க் ஸ்டேட்மென்ட் என்றல் என்ன



வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்டை’ கேட்கிறார்கள். பாங்க் ஸ்டேட்மென்டில் என்ன இருக்கு? ஏன் அது கோரப்படுகிறது?

பின்வரும் விஷயங்களை அறிய உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்ட்’ உதவுகிறது:

1. நீங்கள் ஒரு சுயதொழில்முனைவோராக இருந்தால், உங்களின் பணப் பரிமாற்றத்தை அறிய உதவுகிறது. உங்களின் தொழில் செயல்பாடுகளின் வருமான அளவு என்ன என்பதை இதைக் கொண்டு தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

2. எந்த ஒரு நபரின் சேமிக்கும், செலவழிக்கும் முறையை அறியவும், சேமிப்புக் கணக்கில் சராசரியாகப் பராமரிக்கப்படும் நிலுவைத் தொகையை மேலோட்டமாகக் கவனித்தாலே போதும்.

3. நீங்கள் பிறருக்குக் கொடுத்த காசோலை உங்கள் வங்கியால் திருப்பி அனுப்பப்படும்போது, ஒரு சிறுதொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். அது உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்ட்’ மூலம் தெளிவாகத் தெரியும். பலமுறை `செக் ரிட்டர்ன்’ ஆகியிருப்பது தெரிந்தால், கடன் வழங்க யோசிப்பார்கள்.

4. நீங்கள் டெபாசிட் செய்த காசோலை, அதை வழங்கியவரின் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டாலும் உங்கள் `பாங்க் ஸ்டேட்மென்டில்’ தெரியும். அப்படி ஓராண்டுக்கு எத்தனை `செக் பவுன்ஸ்’களை ஏற்பது என்றும் வங்கிகள் வரையறை வைத்திருக்கின்றன.

5. ஏற்கனவே நீங்கள் வேறு வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்களுக்குச் செலுத்திவரும் மாதாந்திரத் தவணைகள் இந்த ஸ்டேட்மென்டில் தெரியும். புதிய கடனுக்கு, அவை குறித்த முழு விவரத்தையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

6. நீங்கள் செய்யும் முதலீடுகளும் பாங்க் ஸ்டேட்மென்ட் வழியாகப் பார்வைக்கு வரும். அது, புதிய கடனுக்கான அடிப்படைத் தொகையை (டவுன் பேமண்ட்) செலுத்தும் உங்களின் திறனையும், உங்களின் சேமிப்புப் பழக்கத்தையும் காட்டும்.

No comments: