Thursday, June 2, 2011

சிறு குறிப்புகள்


ழைய பிளாஸ்டிக் ஸ்கிரீன்கள், மேஜை விரிப்புகளை தூக்கி எறியாதீர்கள். அவற்றை சரியான அளவில் வெட்டி, ஃபிரிட்ஜில் ஊறுகாய், ஜாம் பாட்டில்கள் வைக்கும் இடத்தின் கீழே விரித்து வைத்தால் கறை படியாது. அவ்வப்போது, இந்த பிளாஸ்டிக் துணிகளை மட்டும் எடுத்துக் கழுவி மீண்டும் விரித்து வைக்கலாம்.

- ஆர்.நிர்மலா, கோவை-38

மைதா மாவு, பிரெட்தூள் இல்லாமல் சுலபமாக கட்லெட் செய்ய ஒரு வழி இருக்கிறது. காய்கறி கலவையில் சிறிது கடலை மாவைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, இந்தக் கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, கெட்டியானதும், எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்துங்கள். பிறகு விரும்பிய வடிவில் வெட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுங்கள். கட்லெட் ரெடி.

- நிர்மலா சாமிநாதன், வேலூர்

மையல் செய்யும்போது துருவிய தேங்காய் மீந்துவிட்டால், அதனுடன் அரை டீஸ்பூன் (ஒரு கப் தேங்காய்த் துருவலுக்கு) உப்புத்தூளை சேர்த்துப் பிசிறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, மூடி வைத்து விடுங்கள். ஃபிரிட்ஜில் வைக்காமலேயே, மூன்று நாட்கள் வரை தேங்காய் கெடாமல் இருக்கும்.

- மீனா ரங்கநாதன், சென்னை-33



வீட்டிலுள்ள குளிர் சாதனப் பெட்டி, 'மைக்ரோ வேவ் அவன்', மிக்ஸி போன்றவற்றை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா. டூத் பேஸ்ட்டை சிறிது எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பாஞ்சை நனைத்துப் பிழிந்து, பொருட்களைத் துடைத்து விட்டு, கடைசியில் உலர்ந்த துணியால் துடைத்து விட்டால் போதும். பொருட்கள் பளிச்சிடும்.

- எம்.மைமுனா, சென்னை-43

மையல் அறை, பூஜை அறையில் எண்ணெய் ஊற்றி வைக்கும் தூக்கு, பாட்டில்களில் கையில் எடுக்க முடியாத அளவுக்கு பிசுக்கு ஏறி விடும். இதைப் போக்க பாட்டிலை இறுக மூடி, அரிசிமாவால் நன்றாக தேய்த்ததும் உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள். பிசுபிசுப்பு நீங்கி பளபளக்கும்.

- ஆர்த்தி ஸ்ரீராம், சென்னை-88

சுடிதார் செட் பழசானாலும் துப்பட்டா புதுசாகவே இருக்கும். அதை வீணாக்காமல் இரண்டாக கட் பண்ணி ஓரங்களை கடையில் கொடுத்துத் தைத்துவிடுங்கள். இந்தத் துணியை குளிர் காலத்துக்கு ஸ்கார்ப்பாகவும், ஹெல்மெட் போடும் முன் தலையில் கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.

- மனோகரன், சேலம்-6

முல்லை, மல்லிகளை உதிரிப்பூவாக வாங்கி தொடுக்கும்போது இடையிடையே சாட்டின் ரிப்பன் அல்லது உல்லன் நூலை மடித்து வைத்து கட்டினால் உடுத்தும் உடைக்கு மேட்சாக இருப்பதுடன், பார்க்க அம்சமாக இருக்கும்.

- சாந்தி வேணுகோபால், சென்னை-23

ஃபிரெட்டில் ஜாம், தேன், வெண்ணெய் தடவி சாப்பிடுபவரா நீங்கள்? முதலில் பிரெட்டில் ஜாம் தடவிய பிறகு தேன், அதன் பிறகு வெண்ணெய் தடவினால் பிரெட்டில் எல்லாம் சீராக பரவும். சாப்பிடும்போது சிந்தாமல் இருப்பதோடு, ஃபிரெட் வாயிலும் ஒட்டிக் கொள்ளாது.

- கீதா நாராயணன், மும்பை-80

'kumudham'

No comments: