Saturday, June 25, 2011

கனவு ஏன் வருகிறது?


மிக அதிகமாக குறட்டை விடுவோரை கட்டுப்படுத்த, அறுவை சிகிச்சை உள்ளது. தொண்டைப் பகுதியில், மூச்சுக் காற்றுடன் ஒலியை எழுப்பு மென்மையான பகுதியின் திசுக்களை இந்த அறுவை சிகிச்சை மூலம் இறுக்க்கமாக்குவர். ஆனால் அதன் பின் குரலில் சில மாற்றங்கள் ஏற்படும்.

தரமான கட்டில் மெத்தையின் ஆயுள் காலம் 8 முதல் 10 ஆண்டுகள். அதற்கு மேல் அதைப் பயன்படுத்தக் கூடாது. மிகப் பழைய மெத்தைகளில் உருவாகும் பாக்டீரியாக்கள், கடுமையான நோய் உருவாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகிலேயே அதிகளவில் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வது அமெரிக்கர்கள் தான். 20 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்கள் தான் அதிகமாக தூக்கமாத்திரை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான். அதில் 1லட்சத்து 36 ஆயிரம் கனவுகள் அடங்கும். பகல் கனவு காண்பவர்களை இதில் சேர்க்கவில்லை.

1964ம் ஆண்டு 17 வயதான ராண்டு கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 264 மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் விழித்திருந்ததே சாதனையாக கருதப்படுகிறது. சாதனையை முடித்து விட்டு 15 மணி நேரம் மட்டுமே அவர் தூங்கினார்.

No comments: