Friday, June 3, 2011

ஹெல்த் டிப்ஸ்


குறுமிளகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறுமிளகு நமது உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உண்டாக்குகிறது. குறுமிளகையும் உப்பையும் பொரித்து சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்துவிடும்.

தினமும் இரண்டு அகத்தி இலையை விழுங்கி வந்தால் வயிற்றில் உண்டாகும் புண்களை உடனே குணப்படுத்தும்.

மாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு வலுப்பெறும். குரல் வளம் நன்றாக இருக்கும். இதனுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.

-தேனி முருகேசன்

கார உணவு சாப்பிடவேண்டும்

உணவைப் பொதுவாக இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை கார உணவு, அமில உணவு. உடல் வளர்ச்சிக்கு கார உணவு 80 சதம் தேவை. அமில உணவு 20 சதம் தேவை.

துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு ஆகிய சுவைகளில் அமிலம் அதிகம். உப்பு, கசப்பு, காரசுவை உணவுகளில் காரம் அதிகமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கார உணவே அதிகமாக இடம் பெறவேண்டும். அமில உணவுகள் அதிகரித்தால் அந்த அளவுக்கு உடலில் நோயும் அதிகமாகும். அதற்காக அதிகமாகவும் காரம் சேர்க்கக்கூடாது.

- தேனிமுருகேசன்

குமுதம்

No comments: