Monday, June 27, 2011
யாரை நம்பி நான் பொறந்தேன்...
திரைப்படம்: Enga Uru Raja [எங்க ஊரு ராஜா]
வரிகள்: Kannadasan [கன்னதாசன்]
இசை: M S Visvanathan [M S விச்வநாதன்]
குரல்: T M Soundara Rajan [T M சௌந்தர ராஜன்]
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
குளத்திலே தண்ணியில்லே கொக்கும் இல்லே மீனும் இல்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்கும் இல்லே மீனும் இல்லே
பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
வாங்கடா வாங்க.. வாங்கடா வாங்...
சட்டி சுட்டதடா கை விட்டதடா..
குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) – மனம்
சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
போனால் போகட்டும் போடா....
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடல் : போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா.
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
ஒஹோஹோ… ஒஹோஹோ…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
ஒஹோஹோ… ஒஹோஹோ…
- கண்ணதாசன்Saturday, June 25, 2011
உழைத்துக் கொடு
ஒருமுறை மன்னன் தன் பிறந்தநாளின் போது மக்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பரிசு பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசுகளை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போயிற்று. கடைசியில் ஒரே ஒரு அந்தணர் மட்டும் பொறுமையாக வெகு நேரமாக நின்று கொண்டிருப்பதை மன்னன் கவனித்தான். அவன் அவரிடம் "பண்டிதரே! ஏன் அசையாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள். அதைக் கொடுக்கிறேன்" என்றான்.
அந்த அந்தணரும் "அரசே! எனக்குப் பொன்னும் வேண்டாம். மணியோ முத்தோ மானியமோ எதுவும் வேண்டாம். ஆனால் நீங்களாக நேற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்து வாங்கிய பொருள் ஏதாவது உங்களிடம் இருந்தால் அதைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
அதைக் கேட்ட மன்னன் திகைத்துப் போனான். அந்தணர் கூறியது அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஆம். அவன் தன் பொருள் என்று எதை எல்லாம் எண்ணினானோ அவை தான் உழைத்துச் சம்பாதித்தவை அல்ல என்பதை அறிந்து கொண்டான். ஆம் அவை யாவும் மக்கள் கொடுத்தவரிப் பணத்தில் வாங்கப் பட்ட பொருள்களே! இதை உணர்ந்த அவன் அந்த அந்தணரிடம் "பண்டிதரே! நானாக உழைத்துச் சம்பாதித்தது என்று எதுவும் இப்போது என்னிடம் இல்லை.என்னிடம் இப்போது உள்ளவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறேன்" என்று சற்று நாணிக் குறுகிக் கூறினான்.
அந்தணரே "அரசே! இப்போது உங்களிடம் உள்ள எதையும் நான் கேட்க மாட்டேன். எனவே நீங்கள் உழைத்து சம்பாதித்தது எதுவானாலும் ஏற்றுக் கொள்வேன். மற்றவை எவ்வளவு விலை உயர்ந்தனவாக இருந்தாலும் அவை எனக்கு வேண்டவே வேண்டாமே" என்று உறுதி படக் கூறினார். அப்போது மன்னன் "பண்டிதரே! நீங்கள் தயவு செய்து நாளைக்கு வந்தால் நீங்கள் கேட்டபடியே பொருளைக் கொடுக்கிறேன்" என்றான். அந்தணரும் மன்னனை வணங்கி விட்டு சிரித்தவாறே சென்றார்.
மன்னனுக்கு அந்தணர் கூறியதன் பொருள் விளங்கி விட்டது. மன்னனுக்கு மக்களிடமிருந்து கிடைப்பதெல்லாம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த பணமே என்றும் அவன் அதைத் தன் பணமாகக் கருதி செலவு செய்வது சரஇல்ல என்றும் உணர்ந்தான். அதனால் அவர் கூறியபடி அந்தணருக்கு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான்.
மன்னன் தன் பட்டாடைகளைக் களைந்து விட்டு சாதாரணக் கூலியாள் போல ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியே நடந்து சென்றான். அவன் தான் செய்யக் கூடிய வேலை ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து பார்த்தான். ஆனால் ஒரு வேலை கூடக்கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு மீனவர் குப்பத்திற்குப் போய் பல மீனவர்களிடம் தனக்கு வேலை கொடுக்கும்படிக் கேட்டான். அநேகமாக எல்லோருமே வேலை இல்லை என்றே சொல்லி விட்டார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அவனது நிலையைக் கண்டு பரிதாபப் பட்டு "நான் உனக்கு வேலை கொடுக்கிறேன். நீ வலை வீசி மீன் பிடித்துக் கொண்டு வரவேண்டும். நீ கொண்டு வருவனவற்றில் பெரிய மீன்களாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு செப்புக் காசு வீதம் கொடுப்பேன். சிறிய மீனாக இருந்தால் ஒரு மீனிற்கு ஒரு சோழி வீதம் தான் கொடுப்பேன்" என்று கூறி மீன் பிடிக்கும் வலையை அவனிடம் கொடுத்தான்.
அவனும் வலையை வாங்கிக் கொண்டு கடலுக்குப் போய் வலையை விரித்துப் போட்டான். அதில் ஒரு பெரிய மீனும் ஒரு சிறிய மீனும் சிக்கின. அவனும் கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அந்த மீன்களைக் கொண்டு போய் மீனவனிடம் கொடுக்கவே, மீனவனும் ஒரு செப்புக்காசையும் ஒரு சோழியையும் கொடுத்தான். அவனும் அதை வாங்கிக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.
மறுநாள் மன்னன் தர்பாருக்கு வந்தபோது அங்கே அந்தணர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவரைத் தன்னருகே அழைத்து "பண்டிதரே! நேற்றிரவு நான் வேலை செய்து ஒரு செப்புக்காசும் ஒரு சோழியும் சம்பாதித்தேன். அவற்றை உங்களுக்கு தானமாகக் கொடுக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.
அந்தணரும் மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக் கொண்டு "இவை போன்ற பொருள்களைத் தான் விரும்புவது" எனக்கூறி மன்னனை வணங்கிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது மனைவி மன்னனைக் காணச் சென்ற தன் கணவன் விலையுயர்ந்த பொருள்களை சன்மானமாகப் பெற்று எடுத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தாள். அவர் வந்ததும் ஆவலுடன் அவள் "சன்மானம் கிடைத்ததா? அவை என்ன? யாராவது அவற்றைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களா?" என்று ஆவலுடன் கேட்டாள்.
அவரும் "மன்னர் விலையே மதிக்க முடியாத பொருள்களை சன்மானமாகக் கொடுத்திருக்கிறார்" என்று சிரித்துக் கொண்டே கூறி தாம் பெற்ற ஒரு செப்புக் காசையும் ஒரு சோழியையும் அவளிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிப் பார்த்த அவள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்து "பூ இவ்வளவு தானா உங்களுக்குக் கிடைத்த சன்மானம்? இவற்றைப் பெற்றுக் கொள்ளத்தான் இரண்டு நாட்களாக அரண்மனைக்குப் போய் மன்னரைப் பார்த்தீர்களா?" என்று அழாத குறையாகக் கேட்டாள்.
அந்தணரோ! "இவை மன்னரே உழைத்துச் சம்பாதித்தவை. இவற்றை எனக்குக் கொடுத்தது மிகமிக விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்ததற்குச் சமம். இவை வேறு யாருக்குமே கிடைக்காதே" என்றார். அதைக் கேட்ட அவரது மனைவிக்குக் கோபமே வந்து விட்டது. அவற்றைத் தூக்கித் தன் வீட்டு வாசலில் எறிந்து அவள் "ஒரு செப்புக் காசும் ஒரு சோழியும் விலையுயர்ந்த பொருள்களா? யாருக்கு வேண்டும் அவை?" என்று கூவினாள். அந்தணர் வீண் சண்டை எதற்கு என்று எதுவும் பேசவில்லை.
அன்றைய வேலைகளை இருவரும் செய்து விட்டு இரவானதும் படுத்துத் தூங்கினார்கள். மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து வாசலைப் பார்த்த போது அங்கு இரண்டு மரங்கள் முளைத்து உயர்ந்து நிற்பதைக் கண்டார்கள். ஒரு மரத்தில் தங்கக் காசுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற மரத்தில் வெள்ளிச் சோழிகளாக இருந்தன. அவற்றைக் கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டு தங்க நாணயங்களையும் வெள்ளிச் சோழிகளையும் பறித்து எடுத்தார்கள். அந்தணர் தம் மனைவியிடம் "பார்த்தாயா! நான் சொன்னது சரிதானே! செப்புக்காசும் சோழியும் மரங்களாக முளைத்தன தங்கக் காசுகளையும் வெள்ளிச்சோழிகளையும் கொடுத்திருக்கின்றன. அவை விலையுயர்ந்த பொருள்கள் தாமே?" என்று கேட்டாள்.
அவரது மனைவியும் "ஆம். விலையுயர்ந்தவையே. அப்போது அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை தான் எதையும் உழைத்துச் சம்பாதித்தாலே அதற்கு மதிப்பே அதிகம் தான்" என்றாள். அந்தணர் அவற்றை விற்றுப் பணமாக்கி சுகமாக வாழ்ந்து வந்தார்.
கனவு ஏன் வருகிறது?
மிக அதிகமாக குறட்டை விடுவோரை கட்டுப்படுத்த, அறுவை சிகிச்சை உள்ளது. தொண்டைப் பகுதியில், மூச்சுக் காற்றுடன் ஒலியை எழுப்பு மென்மையான பகுதியின் திசுக்களை இந்த அறுவை சிகிச்சை மூலம் இறுக்க்கமாக்குவர். ஆனால் அதன் பின் குரலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
தரமான கட்டில் மெத்தையின் ஆயுள் காலம் 8 முதல் 10 ஆண்டுகள். அதற்கு மேல் அதைப் பயன்படுத்தக் கூடாது. மிகப் பழைய மெத்தைகளில் உருவாகும் பாக்டீரியாக்கள், கடுமையான நோய் உருவாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகிலேயே அதிகளவில் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வது அமெரிக்கர்கள் தான். 20 முதல் 44 வயதுடைய அமெரிக்கர்கள் தான் அதிகமாக தூக்கமாத்திரை பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
மூளைக்கு செல்லும் முக்கியமான உணர்வு நரம்புகளில் மின்னூட்டம் ஏற்படுவதன் மூலம் கனவுகள் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் கனவு காண்பதில் செலவழிக்கிறான். அதில் 1லட்சத்து 36 ஆயிரம் கனவுகள் அடங்கும். பகல் கனவு காண்பவர்களை இதில் சேர்க்கவில்லை.
1964ம் ஆண்டு 17 வயதான ராண்டு கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 264 மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் விழித்திருந்ததே சாதனையாக கருதப்படுகிறது. சாதனையை முடித்து விட்டு 15 மணி நேரம் மட்டுமே அவர் தூங்கினார்.
பொதுஅறிவு
- நாம் உண்ணும் உணவு முழுதாக செரிமாணம் ஆவதற்கு 48 மணி நேரம் ஆகும்.
- நாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.
- மனிதர்களின் தொடை எலும்பு, கான்கிரீட்டை விட வலிமையானது.
- ஒரு மனிதன் உணவு உட்கொள்ளும் போது, சராசரியாக 295 முறை விழுங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மனித உடலில் தாடை எலும்பு தான் மிகக் கடினமான எலும்பு.
வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன்
படுத்தப்பட்டது.
உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.
தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.
ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட்.
தெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.
பாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.
`செக்மேட்’ என்று சொல்வது ஏன்?
கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, செஸ். இருவர் விளையாடும் இதில் இருவருக்கும் ராஜா, ராணி தவிர, காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வியடையச் செய்யலாம்.
இந்தியர்களிடம் இருந்து இந்த விளையாட்டை முதலில் கற்றுக்கொண்டவர்கள் பாரசீகர்கள். அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர்கள், இவ்விளையாட்டை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர். அரசர் என்பதற்கான பாரசீகச் சொல், `ஷா’. அரேபிய `ஷாமட்’ என்பதில் இருந்து `செக்மேட்’ என்ற வார்த்தை தோன்றியது. அதன் அர்த்தம், `அரசன் இறந்துவிட்டான்’ என்பதாகும்.
லாலிபாப் உருவான விதம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மிட்டாய்கள் (Candies) மிகவும் பெரியதாக இருந்தன. அதனால் அவற்றைக் குழந்தைகள் சாப்பிடும்போது ஆபத்தை விளைவித்தன.
மேலும், காகிதம் சுற்றப்படாமல் விற்கப்பட்டதால் அவை ஒழுகி, உடை, முகம், விரல்கள் எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டு அசுத்தப்படுத்தின. அதனால் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தரவில்லை.
கனெக்டிகட்டைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித் என்பவர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். அவர், மிட்டாயை ஒரு குச்சியில் பொருத்தினார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பந்தயக் குதிரையான `லாலிபாப்’பின் பெயரை அந்த மிட்டாய்க்குச் சூட்டினார்.
இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் "தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!'' என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார்.
காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். "என்ன விஷயம் ஐயா?'' என்று நடுங்கும் குரலில் கேட்க, "தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!'' என்றார் அதிகாரி.
இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். "கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?'' என்றாள். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது'' என்ற அதிகாரி சற்று யோசித்தபின், "தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்'' என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர்.
உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் "கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்'' என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார்.
சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் "ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே'' என்று அலற, "நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது'' என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார்.
மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான்.
அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், "மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்'' என்றான்.
உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது.
"இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?'' என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. "பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி'' என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
சிறிய தவறும் பெரிய தண்டனையும்!
அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, "பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்" என்றான்.
"இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றான் அலி. "தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?" என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.
அச்சம் என்பது மடமையடா...
மன்னாதி மன்னன்
பாடல்: அச்சம் என்பது மடமையடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
உள்ளம் என்பது ஆமை - அதில்....
பாடல்: உள்ளம் என்பது ஆமை
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
Monday, June 20, 2011
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 150:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்கலைஞர் உரை:
பெண்மை நயவாமை நன்று.
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.மு.வ உரை:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - இல்லறவியல் அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்கலைஞர் உரை:
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.மு.வ உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.சாலமன் பாப்பையா உரை:
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குகலைஞர் உரை:
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.மு.வ உரை:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்கலைஞர் உரை:
பெண்மை நயவா தவன்.
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.மு.வ உரை:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்கலைஞர் உரை:
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.மு.வ உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 145:
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்கலைஞர் உரை:
விளியாது நிற்கும் பழி.
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.மு.வ உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 144:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்கலைஞர் உரை:
தேரான் பிறனில் புகல்.
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.மு.வ உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்கலைஞர் உரை:
தீமை புரிந்துதொழுகு வார்.
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 142:
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைகலைஞர் உரை:
நின்றாரின் பேதையார் இல்.
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.மு.வ உரை:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.சாலமன் பாப்பையா உரை:
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.
அதிகாரம் - பிறனில் விழையாமை
குறள் 141:
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துகலைஞர் உரை:
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்......
இசை : Sm. சுப்பையாஹ் நாய்டு
பாடல் : Tn. ராமையாஹ் தாஸ்
பாடியவர் : T.m.s
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) -
கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) -
குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) -
அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
இன்னும்
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
உன்னை அறிந்தால்...
படம் : வேட்டைக்காரன்
இசை : K.v.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.m.s
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
Friday, June 17, 2011
கிழமைகள் ஏற்பட்டது எவ்வாறு?
பண்டைய நாட்களில் காலத்தை மாதங்களாகவே பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் இருந்தன. அத்தனை நாட்களுக்கும் பெயர் வைப்பதற்குச் சாத்தியப்படவில்லை.
மனிதர்கள் நகரங்களை அமைத்தபிறகு வாணிபம் செய்வதற்கு, அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தனியாக ஒருநாள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கினார்கள். சிலசமயங்களில் 7 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கப்பட்டது. அதாவது 7-வது நாளே வணிக நாளாக அமைந்தது.
பண்டைக் காலத்துப் பாபிலோனியர் ஒவ்வொரு 7-வது நாளையும் வணிகத்துக்கும், மத விஷயங்களுக்கும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யவில்லை.
யூதர்களும் பாபிலோனியர்களின் உதாரணத்தைப் பின்பற்றினர். ஒவ்வொரு 7-வது நாளையும் மத விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு வாரம் பிறந்தது. வாரம் என்பது இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம். வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் பெயர் வைத்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் எண்களாகவே அமைந்திருந்தன. சனிக்கிழமைக்குப் பிறகுஅவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு வந்து சனிக்கிழமையுடன் முடித்தனர். அவர்களுடைய திட்டப்படி ஞாயிறு முதல் நாளாகவும், சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் அமைந்தன.
வாரத்துக்கு 7 நாட்கள் என்ற முறையை எகிப்தியர்களும் கடைப்பிடித்தனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. வாரத்தின் நாட்களுக்கு அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர். எகிப்தியர்கள் வைத்த பெயர்களை ரோமானியர்கள் பின்பற்றினர். சூரியனின் பெயர் ஞாயிறு. சந்திரனின் பெயர் திங்கள். மார்ஸ் அல்லது டியூ, ரோமானியர்களின் போர்த் தெய்வம். அந்தப் பெயர் செவ்வாய்க்கிழமை ஆயிற்று. `மெர்க்குரி’ தெய்வத்தின் மற்றொரு பெயர் (ஓடன்) புதன்கிழமை ஆயிற்று. `தர்’என்பது ரோமானியர்களின் இடித்தெய்வம். அது `தர்ஸ்டே’ ஆயிற்று. அதாவது வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்தப் பெயர் எப்படி வந்தது? `ப்ரிக்’ என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர், `ப்ரைடே’, அதாவது வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமைக்கு வந்தது.
இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்
உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன்முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படுத்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் மகன் வில்லியம் காங்கிரீவ் திப்புவின் ராக்கெட் பகுதிகளை இங்கிலாந்து கொண்டு சென்று நவீனப்படுத்தினார். அதுவே பின்னர் காங்கிரீவ் ராக்கெட்டு கள் என்று பெயரிடப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் ஆராய்ச்சிக் குழந்தையென்றால், அதனை பத்திரமாக தன் முதுகில் ஏற்றிச்சென்று, மிகச் சரியான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் ஏவுகலம் (Launch Vehicle) (ராக்கெட்) அதன் தாய் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். கடின முயற்சி, தன்னம்பிக்கை, திறன் ஆகியவை அதிகம் தேவைப்படுகின்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் ஏவு வாகனம் ஒரு முக்கிய பகுதி.
இந்தியாவில் ராக்கெட் (அல்லது) ஏவுகலம் பிறப்பு 1960 காலகட்டங்களில் நிகழ்ந்தது. பிரெஞ்சு நாட்டினுடைய சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பமான கேரியர் ராக்கெட் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில், சுமார் 200 கி.மீ. உயரத்தில் நிகழும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டு வந்தது. அந்நாடு, அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளிக்க முன்வந்தது. இந்தியா அத்தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, சவுண்டிங் ராக்கெட்டுகளை தும்பாவில் தயாரிக்கத் துவங்கியது. இதுதான் ஆரம்பம்.
1970 காலகட்டத்தில் PSLV ராக்கெட்டுகளுக்கு தேவையான விகிங் எஞ்சின் தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இந்தியாவிற்கு அளித்தது. அந்நாடு இத்தொழில்நுட்பத்தை பணம் வாங்காமல், அறிவியல் துறையில் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்படவேண்டி இதனை செய்தது. நம் நாட்டு விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை கற்றறிந்து, மேம்படுத்தினர். பின்னர் நம்முடைய நாட்டிலேயே இயந்திர பாகங்களையும், நவீனப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தினையும் உருவாக்கலானார்கள்.
நம்முடைய அனைத்து ராக்கெட்டுகளின் தாய் சவுண்டிங் ராக்கெட்டுகள். இவை 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 300 முதல் 400 கி.மீ. உயரத்தில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டவை. இந்தியாவில் முதலாவது செயற்கைக்கோள் ராக்கெட்டான நகயலி3ன் வடிவமைப்பும், தொழில்நுட்ப அடித்தளமும் உருவானதற்கு இந்த சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பம் வழிவகுத்தது. உள்நாட்டு வடிவமைப்பு, திறன், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை SLV-3ன் உருவாக்கத்தில் துளிர்விடத் துவங்கியது.
ஒரு ராக்கெட் (அல்லது) ஏவுகலம் என்பது நியூட்டனின் மூன்றாம் விதியினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய இயந்திர வாகன அமைப்பு. ராக்கெட்டின் முன் பகுதியிலிருந்து (தலை) காற்று உள்ளிழுக்கப்பட்டு, திட அல்லது திரவ எரிபொருட்களுடன் எரிகலன் அமைப்பில் எரிக்கப்படுவதனால் அதிக அழுத்தம் கொண்ட வெப்ப வாயு உருவாகிறது. இந்த வெப்ப வாயு பீச்சாங்குழல்(Nozzle) போன்ற அமைப்பின் வழியே (குறிப்பிட்ட விட்டம் வரை குறுகி, பின் அகன்று விரியும் குழல் போன்ற அமைப்பு) செல்லும்போது, குறுகிய பகுதியில் வெப்ப வாயுவின் அழுத்த ஆற்றலானது, அகன்ற பகுதியில் செல்லும் போது இயக்க ஆற்றலாக மாறுகிறது. ராக்கெட்டின் வால் பகுதியில் வெப்ப வாயு அதிக விசையுடன் வெளியேறுகிறது. இதனால் இவ்விசைக்கு சமமான விசை ராக்கெட்டின் மீது செயல்பட்டு, ராக்கெட்டை முன்னோக்கி அதிக வேகத்தில் உந்துகிறது. நாம் தீபாவளிக்கு வெடிக்கும் ராக்கெட் பட்டாசுகூட இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.
விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோளின் பயன்பாடுகளைப் பொறுத்துதான் அதற்குண்டான சுற்றுப் பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு நிர்ணயிக்கும் சுற்றுப் பாதையானது ராக்கெட்டுகளின் தேவையான பண்புகளை தீர்மானிக்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் நிச்சயிக்கப்பட்ட பாதையில் பறந்து சென்று குறிப்பிட்ட உயரம் மற்றும் திசை வேகத்தில், சுற்றுப் பாதையில் செயற்கைக்கோளை செலுத்துகிறது. இதற்காக பிழைநிகழ இடமளிக்காத தரம் வாய்ந்த ராக்கெட் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், ஏவுதலுக்கு முன்னர் அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை சோதனை செய்து உறுதி செய்ய தள வசதிகள், ஏவு வாகன திட்ட நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு வசதிகள் ஆகியவற்றின் அவசியம் மிக முக்கியமானது.
செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ராக்கெட்) வடிவமைப்பதில் 1. உந்துசக்தி 3. காற்றியக்கம் மற்றும் உருவாகும் வெப்பம் 3. கட்டுமானம் மற்றும் பயன்படுத்தப்படும் உலோகப் பொருட்கள் 4. செயற்கைக்கோள் ராக்கெட்டினின்றும் பிரியும் தொழில்நுட்பம் 5. ராக்கெட்டுகள் கட்டம் கட்டமாக பிரியும் வழிமுறை 6. ஒருங்கிணைப்பு, ஏவுதலுக்கு முன் பாகங்களின் இயக்கங்களை சரிபார்த்தல் மற்றும் ஏவுதல். 7. நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமான பகுதிகள்.
தள்ளுசுமை எடை (Payload) மற்றும் சுற்றுப்பாதையின் அளவீடுகள் நிர்ணயிப்பதிலிருந்துதான் ராக்கெட் வடிவமைப்பு தொடங்குகிறது. சுற்றுப்பாதையின் அபோஜீ (Apogee) (சுற்றுப் பாதையில் சுற்றிவரும்போது பூமிக்கும் செயற்கைக்கோளுக்கும் உள்ள குறைந்த தூரம்) மற்றும் பெரிஜீ (Perigee) (அதிக தூரம்) உயரங்கள், பூமத்திய ரேகையைப் பொருத்து சுற்றுப்பாதை தளத்தின் சாய்வுக்கோணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது ஆகியவை ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சவுண்டிங் ராக்கெட்
1963- ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி நைக் – அபாசே சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் தும்பா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ராக்கெட் முதல் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது துவங்குகிறது. அன்று தொடங்கிய இப்பயணத்தில் சோதனை ராக்கெட்டுகள், வானிலை ஆய்வு ராக்கெட்டுகள் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஏவுதல்கள் என பல ராக்கெட்டுகளை இந்தியா வடிவமைத்து விண்ணில் ஏவியுள்ளது. இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டுகள் 10 முதல் 100 கி.மீ. வரையிலான தள்ளுசுமை (Payload) எடுத்துச் செல்லும் திறன் படைத்தவை.
அயனோஸ்பியரின் ‘D’ மற்றும் ‘F’ பகுதியைப் பற்றிய ஆய்வு, வாயு மண்டலத்திற்கும் மேல் வாயுக்களின் வேதியியல் பண்புகள் மற்றும் அதன் நிறை பற்றிய ஆய்வு 350 கி.மீ.க்கும் மேல் சூரியனிலிருந்து வரும் ல-கதிர்களின் ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள இவ்வகை ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
எஸ்.எல்.வி.-3
(Satellite Launch Vehicle3-SLV3)
இது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலம். ராக்கெட் தொடர்பான தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் SLV-3 திட்டத்தின் மூலம் பிறந்தது. ராக்கெட் மற்றும் திட்ட வடிவமைப்பு, புதிய பொருட்கள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு தொழில்நுட்பம், அதிக விசை தரும் திட எரிபொருள்கள், நான்கு வகையான மோட்டார்களுக்கு, கலவை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வெப்பத்தடுப்பு கவசம், கண்ட்ரோல் பவர் பிளாண்ட்கள், இனர்ஸியல் சென்சார்கள், மின்னணு சிஸ்டம் ஒருங் கிணைப்பு, பன்முக வடிவமைப்பு, மாதிரி உருவாக்கம், செயற்கைக்கோள் ஏவுவாகன திட்ட நிர்வாகம் என அத்தனை களங்களும் SLV-3 திட்டத்தின் மூலம் முன் னேற்றம் கண்டது. PSLV மற்றும் GSLV போன்ற ஏவுவாகனங்களுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பு அணுகுமுறை உருவாக்குவதற்கு SLV-3 திட்ட வெற்றிதான், உந்துசக்தி.
SLV-3 E1-இல் இடம்பெற்ற ஒரு வன்பொருள் முறையாக செயல்படாமையினாலும், இரு கட்டங்களை கொண்ட ராக்கெட்டின் இரண்டாவது கட்டுப்பாட்டு அமைப்பின் சோலனாய்டு வால்வில் தூசு படிந்து சரிவர இயங்காமையி னாலும் திட்டம் தோல்வியை சந்தித்தது. அடுத்த முயற்சியான SLV-3E2-வில் குறிப்பிட்ட குறைபாடுகளை களையப்பெற்று 1980-ஆம் ஆண்டு ஜூலை முதல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
எ. எஸ்.எல்.வி. (ASLV- Augmented Satellite Launch Vehicle)
அறிவியல் ஆராய்ச்சிக்கும், வானியல் பயன்பாட்டுக்கும் அதிக எடையுடைய பேலோடுகளை விண்ணில் செலுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, வடி வமைக்கப்பட்டவை இந்த பெரிதாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனத் ஆநகய திட்டம்.
இது SLV-3 ராக்கெட்டுடன் இரு ராக்கெட் மோட்டார் களையும் பூஸ்டர் மோட்டார்களையும் கூடுதலாகப் பெற்றவை. SLV-3 திறந்தச் சுற்று கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் அமைப்பினைப் பெற்றதெனில் ASLV மூடிய சுற்று அமைப்பினைக் கொண்டது. தொகுப்பு பீச்சாங்குழல் (Nozzle), ராக்கெட்டின் பயணப் போக்கை கட்டுப்படுத்தும் அமைப்பு, ஏவுதள ஒருங்கிணைப்பு வசதிகள் ஆகியவை ASLV திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன.
வாயு மண்டலத்தில் ராக்கெட் பயணிக்கும் போது நிகழும் உயர்ந்த காற்றியக்க அழுத்தம், தானாக பறக்கும் அமைப்பு, ராக்கெட்டில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்ட தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பு போன்றவை ASLV – யில் மேம்படுத்தப்பட்டன.
பி. எஸ்.எல்.வி. (PSLV -Polar Satellite Launch Vehicle)
SLV-3 யின் மாடலை அடிப்படையாகக் கொண்டு அதனுடன் தேவைக்கேற்ப பல்வேறு வேலைகளை செய்யக் கூடிய இயந்திரப் பாகங்களை இணைத்துதான், ஏவு வாகனங்கள் நவீனப்படுத்தப்பட்டன. டநகய ராக்கெட்டுகள் 1000.கி.கி. எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை சூரியனை மைய மாகக்கொண்ட வட- தென்துருவ சுற்றுப் பாதையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. PSLV ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை யில் 139 டன் எடையுள்ள உந்து எரிபொருள் கலம், இரண்டாவது நிலையில் 37 டன் எடையுடைய திரவ எரிபொருள் கலம், மூன்றாம் நிலையில் உயர்செயல்பாட்டு மோட்டார், நான்காம் நிலையில் இரட்டை என்ஜினுடன் இணைந்த 2.5 டன் எரிபொருள் கலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. PSLV -யில் டிஜிட்டல் முறையிலமைந்த தானாக பறக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெசின்ஸ் (RESINS) எனும் முப்பரிமாண வழிகாட்டும் அமைப்பு மூலம் செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. PSLV ராக்கெட்டுடன் அதிக சக்திகொண்ட பூஸ்டர்களையும், பெரிய மோட்டார்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட PSLV-XL உதவியுடன் சந்திரயான் -1 நிலவுக்கு பயணமானது.
PSLVயின் உதவியிடன் கொரியாவின் KITSAT-3 மற்றும் ஜெர்மனியின் TUBSAT செயற்கைகோள்கள் வாணிபரீதியாக விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளி திட்டங்களில் இந்தியாவின் வெற்றி சதவீதம் கூடியது.
குறைந்த எடைகொண்ட வெப்பத் தடுப்பு கவசம், காற்றினூடே பறக்கும்போது காற்று மூலக்கூறுகளுக்கும் விண்கலத்தின் மேற்பரப்பிற்கும் இடையே நிகழும் உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கக்கூடிய வடிவமைப்பு, ஹைப்பர் சோனிக் காற்றியக்க வடிவமைப்பு (ராக்கெட் விண்ணில் பறக்கும்போது அதன் வேகம் படிப்படியாக அதிகரித்து சப்சோனிக், டிரான்சோனிக், சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர் சோனிக் போன்ற வேகக் கட்டங்களை அடையும்போது ராக்கெட்டின் உடலமைப்பில் சுற்றியக்கம் ஏற்படுத்தும் தடையினை குறைப்பதற்கான அமைப்பு), வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு, ராக்கெட்டை திரும்பப் பெறுதல் மற்றும் மிதவை அமைப்பு ஆகிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டன.
ஜி. எஸ்.எல்.வி. (GSLV- Geosynchronous Satellite Launch Vehicle)
PSLVயினை படிப்படியாக நவீனப்படுத்தும் அதே வேளையில், உடன் எடையுள்ள தொலைத்தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்த GSLV-யினை ISRO வடிவமைத்தது. இதில் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் நிலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சவால்களை சமாளித்து, அதிக எடையை சுமந்து செல்லும் வகையில் GSLV-யின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வந்தது. தற்போது உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் பகுதி தயாரிக்கப்படுகிறது. ராக்கெட் எதிர்பார்க்கப்பட்ட தன்மையுடன் செயற்கைக்கோளை குறைந்தபட்ச விலகலுடன் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு மூடப்பட்ட சுற்று வழிகாட்டும் அமைப்பு பயன்படுத்தப் படுகிறது. இந்த அமைப்பில் ரேட் இன்டகிரேடட் ஜைரோ போன்ற ஜைரோ சென்சர்கள், வேகத்தை அதிகப்படுத்தும் சர்வோ ஆக்கிலரோ மீட்டர்கள் (வேக முடுக்கி), உயிர்நாடி போன்ற இணைப்பு நுட்பமான வழிகாட்டும் மென்பொருள் அடங்கியுள்ளன. மேலும் புவியிலிருந்து எவ்வளவு உயரத்தில் தனது சுற்றுப்பாதையில் செயற்கைகோள் வலம் வரவேண்டும் என்று தீர்மானிக்கிறோமோ அதில் 10 கி.மீ. அதிகமான (அல்லது) குறைவான உயரத்திலும் தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையின் கோணத்தில் 0.2 டிகிரி அதிகமான (அல்லது) குறைவான வித்தியாசத்தில் ஜைரோ, துல்லியமாக செயற்கைகோளை வலம்வர வைக்கும்.
ஜி. எஸ்.எல்.வி மார்க் . GSLV MK III- Geosyronous Satellite Launch Vehicle Mark III)
நான்கு டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு GSLV MK III உருவாக்கப்பட்டு வருகிறது. 200 டன் எடை திட எரிபொருள் மோட்டார்களும் 110 டன் எடை திரவ எரிபொருள் மோட்டார்களும், இறுதிக் கட்டத்தில், 25 டன் எடை கிரையோஜெனிக் எரிபொருள் நிலையையும் கொண்டதாக இருக்கும். தீ கண்டுபிடிக்கும் கருவி, தொலைதூரக் கண்காணிப்பு, தொலைக்கட்டளை ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன் படுத்தப்படவுள்ளது.
செலுத்தப்பட்ட வாகனம் மீண்டும் பூமிக்கு வருவித்தல், அதற்கான உபகரணங்கள் தயாரித்தலில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விண்கலம் ஏவுதலுக்கான செலவு குறையும். PSLV ராக்கெட்டுகள் மூலம் 600 கி.மீ. எடையுள்ள செயற்கைகோளை 300 கி.மீ. உயரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்துவது, அவ்வாறு செலுத்தப்பட்ட செயற்கைகோள் திட்டமிட்ட பணி முடிவடைந்தபிறகு பூமிக்கே திரும்ப வந்துவிடுவது தொடர்பான ஆய்வுகள் நடந்துவருகின்றன.
இஸ்ரோவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கடந்த 40 வருடங்களில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. 1967-இல் 75 மி.மீ. விட்டமுடைய மோட்டார், ராக்கெட்டுகளில் உபயோகிக்கப்பட்டது. இது 4 கி.கி. எரிபொருளை எரிக்கவல்லது. சவுண்டிங் ராக்கெட்டுகளில் 125 மி.மீ. முதல் 560 மி.மீ. விட்டமுடைய திட எரிபொருள் மோட்டார் உபயோகிக்கப்பட்டது. இது 14 கி.கி. முதல் 700 கி.கி வரையிலான எரிபொருளை எரிக்கவல்லது. SLV-3ன் பூஸ்டர் மோட்டாரானது 1 மீ விட்டமுடையதும், 9 டன் எரிபொருளைக் கொண்டதுமாகும். PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த, 2.8மீ. விட்டமுடைய, 139 டன் எரிபொருள் கொள்ளளவு கொண்ட, 4700 கி. நியூட்டன் உந்துசக்தி கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் GSLV MK III ராக்கெட்டுகளில் 3.2 மீ. விட்டமுடையதும், 200 டன் எரிபொருள் கொண்டதுமான மோட்டார்கள் உபயோகப் படுத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
ராக்கெட் மோட்டார்களின் கட்டுமானத்திற்கு தரமான மாராஜிங் எஃகு மற்றும் நவீன வெல்டிங் தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. திரவ உந்து எஞ்சின்களில் ஆன் ஆஃப் இயக்கத்திற்கு பயன்படும் செயல் கட்டுப்பாட்டு அமைப்பில் நைட்ரஜன் ஆக்ஸைடையும் மோனோ மீதைல் ஹைட்ரஜனையும் கலந்து மிக வேகமாக ஆன்- ஆஃப் கட்டுப்பாடு நிகழ்த்தப்படுகிறது.
கிரையோஜெனிக் தொழில்நுட்பம் GSLV -யின் இறுதி நிலையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் – 1820 சென்டிகிரேடிலேயே கொதிக்கக் கூடிய திரவ ஆக்சிஜனும், – 2530 சென்டி கிரேடிலேயே கொதிக்கக்கூடிய திரவ ஹைட்ரஜனும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பாதுகாப்பாக ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தடுப்பதற்கு குறைந்த வெப்பநிலையை தாங்கவல்ல உலோக பாகங்கள் மற்றும் இவற்றை எஞ்சினில் செலுத்தக்கூடிய பம்பிற்கு பிரத்தியோக சீல் (தடுப்பான்கள்) உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. GSLV MKIII-யில் 200KN முடுக்குவிசை கொடுக்கவல்ல கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கத்தில் இஸ்ரோ முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.
ஏவுதள வசதிகள், ராக்கெட்டை ஏவுதலுக்கு முன்னர் சோதனை செய்ய தேவையான வசதிகள் ஆகிய அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்துவரும் பன்முக தொழில்நுட்ப வளர்ச்சி, சரியான திட்டமிடல், உள் நாட்டிலேயே இயந்திரப்பாகங்களை உற்பத்தி செய்ய தேவையான தொழிற்சாலை வசதிகள், சரியான மதிப்பீடு மற்றும் சோதனை முறைகள் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் தோற்றத்தை உயர்த்தியதோடு மட்டுமன்றி, வணிக நோக்கில் வெளிநாட்டுத் தேவைகளுக்கேற்ப செயற்கைகோள்களை செலுத்தும் நிறுவனமாகவும் மாற்றியுள்ளது. தற்போது பல நாடுகள் குறைந்த செலவில் விண்ணில் செயற்கைகோளை ஏவுவதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இன்று உலகில் இந்தியாவில் விண்வெளித் திட்டங்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகக்குறைந்த செலவிலேயே நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பது உலக அரங்கில் சாதனையாகும்.
`டாய்லெட்’ பின்னணி…
குழாய்ப் பகுதிகள் பொருத்தப்பட்ட குளியல் அறைக்கு `டாய்லெட்’ என்ற பெயர் சற்று வினோதமாக உள்ளது. ஆனால் 17-ம் நூற்றாண்டில் `டோய்லட்’ என்பதன் பொருள், பெண்கள் ஆடை, அணிகலன்கள் அணியும் அறை என்பதாகும். சுத்தம் செய்து கொள்வது அல்லது உடை மாற்றிக் கொள்வது ஆகியவற்றிற்கு அந்த அறை பயன்படுத்தப்பட்டது. மற்ற வேலைகளுக்கு `அவுட்ஹவுஸ்’ பயன்படுத்தப்பட்டது.
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கழிப்பறை வீட்டோடு இணைத்து கட்டப்பட்டது. அதன் பயனும் வேறாக மாற்றப்பட்டது. `டாய்லெட்’ என்ற பெயர் மட்டும் தங்கி விட்டது. அழகுசாதனப் பொருட்கள், கருவிகள் `டாய்லெட்ரிஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை வைக்கப்படும் மேஜை விரிப்புக்கு `டாய்ல்’ என்று பெயர். அது, அழகாக பின்னப்பட்ட துணியால் ஆனது.
ஆடு சிரித்தது!
அதிசயத் திருடன்
பணக்காரர்களைக் கொள்ளைஅடித்து ஏழைகளுக்கு உதவி புரிந்த ராபின்ஹுட் என்ற கதாநாயகனைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கேரள மாநிலத்தில் அதே போன்ற ஓர் அதிசயத் திருடன் நிஜமாகவே இருந்ததுண்டு. கொச்சுண்ணி என்ற பெயர் கொண்ட அந்தத் திருடன் ஏழைகளை வஞ்சித்து பணம் பறிக்கும் செல்வந்தர்களைக் கொள்ளையடித்து வந்தான். ஆனால் இவ்வாறு திருடிய பணத்தை தனக்குஎன்று பயன்படுத்தாமல் அதைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி வந்தான். இதனால் ஏழைகள் அவனிடம் நட்புரிமை பாராட்டிய போதிலும் அவன் பெயரான ‘காயம் குளம் கொச்சுண்ணி’ என்பதைக் கேட்டவுடனேயே பண்காரர்களுக்கு குலைநடுக்கம் ஏற்பட்டது.
காயங்குளம் என்ற ஊரில் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு ஜமீன்தார் இருந்தார். தங்க நகை முதலிய ஆபரணங்களை அடமானமாகப் பெற்றுக் கொண்டு மிக அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுப்பது அவர் வழக்கமாகஇருந்தது. பெரும்பாலானவர்கள் அசலை குறித்த தவணையில் செலுத்த முடியாது தவிக்கையில், அவர்களது அடமானப் பொருட்களை ஜமீன்தார் தன்னுடையதாக்கிக் கொள்வார். இவ்வாறு சேர்த்த செல்வத்தினால் அவர் பெரிய மாளிகையே கட்டி விட்டார்.
அந்த மாளிகையில் இரட்டைச் சுவர்களை அமைத்து தன் இருப்பிடத்தை உறுதியாகவும் பத்திரமானதாகவும் ரகசிய அறைகள் அடங்கிய தாகவும் ஏற்படுத்திக் கொண்டார்.
இவ்வளவு பந்தோபஸ்து எதற்கு என்று நண்பர்கள் யாராவது கேட்டால் "கொச்சுண்ணி திருட முயற்சித்தால் என்னிடமுள்ள அடமானப் பொருட்களை நான் எப்படி பத்திரமாக பாதுகாக்க முடியும்? ஆகவே தான் என் வீட்டை ஒரு மர்மக் கோட்டை ஆக்கிவிட்டேன். இப்போது பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் திருட முடியாது" என்று பெருமை பேசினார்.
அவரது இந்த வாய் சவால் கொச்சுண்ணியின் செவிகளை எட்டியது. ஜமீன்தாருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்த கொச்சுண்ணி ஒருநாள் நேராக ஜமீன்தாரை சந்தித்து பணம் கடன் கேட்டான். அவர் தராவிட்டால் அவரது வீட்டில் புகுந்து திருடலாம் என்று எண்ணினான். ஆனால் ஜமீன்தார் உடனே கடன் கொடுத்து விட்டார். கொச்சுண்ணியால் தன் வீட்டில் திருட முடியாது என்று சவால் விட்ட ஜமீன்தாரை, இப்போது வேறு வழியில் கொச்சுண்ணி மடக்க எண்ணினான்.
கிருஷ்ணன் நாயர் என்பவன் தனது நகைகளை ஒரு முறை ஜமீன்தாரிடம் அடகு வைத்து ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இதை அறிந்த கொச்சுண்ணி ஒரு நாள் இரவு ஜமீன்தாரின் வீட்டை அடைந்தான். ஜமீன்தாரின் தினசரி நடவடிக்கைகளை நன்கு அறிந்திருந்த கொச்சுண்ணிக்கு முன் இரவு நேரத்தில் ஜமீன்தார் என்ன செய்வார் என்பது தெரிந்திருந்தது.
ஜமீன்தார் உடலில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, தன் வீட்டிலுள்ள சிறிய குளத்தில் குளிப்பதற்குத் தயாராக இருந்தார். இதுதான் சமயம் என்று வீட்டிலுள்ள கொச்சுண்ணி வீட்டின் முன்புறம் மறைவாக நின்று கொண்டு, ஜமீன்தாரது மனைவியை அழைத்து, "கிருஷ்ணன் நாயர் வந்திருக்கிறான். அவனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அடகு வைத்திருந்த நகைகளை திருப்பிக் கொடு" என்று ஜமீன்தாருடைய குரலில் பேசினான். தன் கணவர் தான் தோட்டத்திலிருந்தபடியே பேசுகிறார் என்று நம்பிவிட்ட ஜமீன்தார் மனைவி அடகு நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.அங்கு நின்றிருந்த கொச்சுண்ணியின் கையிலிருந்து பணப்பையைப் பெற்றுக் கொண்டு நகைகளைக் கொடுத்து விட்டாள். கொச்சுண்ணியும் நகைகளுடன் சென்று விட்டான். இது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஜமீன்தாருக்குத் தெரியாது.
சில நாள்கள் கழித்து கிருஷ்ணன் நாயர் ஜமீன்தாரிடம் வந்து தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து அடகு வைத்த நகைகளைக் கேட்டான். பணத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே நகைகளைத் தேடிய ஜமீன்தாருக்கு அவற்றைக் காணாததால் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே தன் மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். அவள், "உங்களுக்கு மறந்து விட்டதா? நீங்கள் தானே சில நாள்களுக்கு முன் கிருஷ்ணன் நாயர் வந்திருந்த போது அவருடைய பணத்தைப் பெற்றுக் கொண்டு நகைகளைத் திருப்பிக் கொடுக்கச் சொன்னீர்கள்!" என்றாள்.
"அப்படியா, அந்தப் பணம் எங்கே?" என்று ஜமீன்தார் கேட்டார். அவளும் கொச்சுண்ணி தந்த சிவப்பு நிற பணப்பையைக் கொண்டு வந்தாள். அதைத் திறந்து பார்த்தால் உள்ளே பணமே இல்லை.
பெருத்த அதிர்ச்சியுற்ற ஜமீன்தார் கிருஷ்ணன் நாயரிடம் நிலைமையை விளக்கித் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். நகைகளுக்கு பதிலாக அதற்குச் சமமான மதிப்புஉள்ள பணம் கொடுத்து அவனை அனுப்பினார்.
ஜமீன்தாரும் அவரது மனைவியும் தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதை உணர்ந்தனர். ஜமீன்தார் தன் மனைவியிடம் "அன்று வந்த ஆள் எப்படி இருந்தான்?" என்று கேட்க "நான் உன்னிப்பாக கவனிக்கவில்லை. நீங்களே கொடுக்கச் சொன்னதால் தான் வந்திருப்பது கிருஷ்ணன் நாயர் என்று நினைத்தேன்" என்றாள்.
"ஆகா! இது கொச்சுண்ணியின் வேலையா!" என்ற எண்ணம் தோன்றவே ஜமீன்தாருக்கு அதிர்ச்சியுடன் பயமும் ஏற்பட்டது. தன்னுடைய குரலில் பேசி தன் மனைவியை ஏமாற்றி விட்டானே, இன்னும் என்னவெல்லாம் செய்வானோ என்ற பயம் வந்தது.
இப்படி சோகக் கடலில் மூழ்கிஇருந்த இருவரையும் நோக்கி சில மணிநேரங்களில் கொச்சுண்ணியே வந்தான் என்றால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல், "ஏன் இப்படி இருவரும் கவலையாக இருக்கிறீர்கள்?" என்றான் கொச்சுண்ணி. ஜமீன்தாரால் பேசவே முடியவில்லை. அவர் மனைவி நடந்ததை சொன்னாள்.அவள் சொன்னதைக் கேட்டு கடகடவென சிரித்த கொச்சுண்ணி ஒரு பையை நீட்டி "இதோ அந்த நகைகள். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்" என்றானே பார்க்கலாம். பிறகு தொடர்ந்து "கிருஷ்ணன் நாயரைக் கூப்பிட்டு அவனுக்கு நகைகளைக் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னமோ, பத்து கொச்சுண்ணிகள் வந்தாலும் உங்கள் வீட்டில் திருட முடியாது என்று சவடால் அடித்தீர்களல்லவா? அதற்காகத்தான் இப்படிச் செய்தேன்" என்று கொச்சுண்ணி பதில் கூறினான்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜமீன்தார் நல்லவராக திருந்தி விட்டார் என்று கொச்சுண்ணி கேள்விப்பட்டிருந்தான். ஆகவே அதன் பிறகு கொச்சுண்ணி ஜமீன்தாருக்கு இடைஞ்சல் எதுவும் செய்யவில்லை.
அந்த ஊரில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு கொப்பரை வியாபாரி இருந்தான். அவன் வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. அடிக்கடி அதிக வட்டிக்குப் பணம் வாங்கி ஏகப்பட்ட சிக்கலில் மூழ்கி இருந்தான். இவ்வாறு வியாபாரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதும், என்றாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவன் நாள்களை ஓட்டி வந்தான்.
ஒருநாள் அவன் கொப்பரை தேங்காய்களை ஆலப்புழைக்குச் சென்று விற்றுவிட்டு, எதிர்பார்த்த விலையில் விற்பனை ஆகவில்லை என்பதனால் வருத்தத்துடன் தனது ஊர் நோக்கிச் செல்லும் படகில் அமர்ந்து இருந்தான். திடீரென அவர்கள் பின் பக்கத்திலிருந்து ஒரு விசைப்படகு வேகமாக வந்தது. அதிலிருந்து ஒருவன், வியாபாரி சென்று கொண்டிருந்த படகுக்குத் தாவியேறினான். அது கொச்சுண்ணி என்று அறிந்தவுடன் வியாபாரி பயந்து நடுங்கினான்.கொச்சுண்ணி வியாபாரியை யாரென்று கேட்டான். வியாபாரி, "நான் கொப்பரை தேங்காய் விற்பவன். ஆலப்புழையிலிருந்து திரும்பி வருகிறேன்" என்றான்.
"தேங்காய் வியாபாரியா நீ? அப்படியானால் உன்னிடம் அதிகப் பணம் இருக்கும். அதை இப்போதே என்னிடம் கொடுத்து விடு" என்று கொச்சுண்ணி கட்டளையிட்டான்.
"ஐயா, நான் ஓர் ஏழை வியாபாரி. என்னை விட்டு விடுங்கள்" என்று வியாபாரி கெஞ்சினான். "நான் யார் தெரியுமா? நான்தான் கொச்சுண்ணி. நான் சொல்கிறபடி செய்," என்று கொச்சுண்ணி அதிகாரம் செய்தான். வேறு வழியின்றி தன்னிடமுள்ள பணம் இருநூற்று ஐம்பது ரூபாயை வியாபாரி கொச்சுண்ணியிடம் தந்து விட்டான். கொச்சுண்ணி மீண்டும் தன் படகில் ஏறிச் சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்ததும் வியாபாரி நடந்ததைத் தன் மனைவியிடம் சொல்ல, அவள் மனமுடைந்து அழுதாள். "இப்போது பணத்துக்கு என்ன செய்வது? நமது வீட்டை விற்று விடலாம். அதில் கிடைக்கும் பணத்தில் மீண்டும் வியாபாரம் செய்யலாமா?" என்று மனைவி கேட்க, வியாபாரிக்கும் அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
ஆனால் வீட்டை விற்க முயற்சித்த வியாபாரிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அவன் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்பனையாகவில்லை. இவ்வாறு பலவிதமான சோதனைகளுக்கும் ஆளான வியாபாரியின் வீடுதேடி ஒருநாள் கொச்சுண்ணியே வந்து விட்டான். "வியாபாரியே, பயப்படாதே! உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். உன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். உன்னிடமிருந்து பணத்தைக் கைப்பற்றிய அன்றே நீ ஓர் ஏழை வியாபாரிதான் என்று தெரிந்து விட்டது. அன்று எனக்குப் பணம் தேவையாயிருந்ததால் உன்னிடம்இருந்து பலவந்தமாகப் பணத்தை எடுத்துக் கொண்டேன். அதற்காக வருந்துகிறேன். எடுத்துக் கொள் உன் பணத்தை" என்று சொல்லிவிட்டு கொச்சுண்ணி சென்று விட்டான்.
அந்த பணப்பையில் அன்று கொச்சுண்ணி எடுத்துக் கொண்டதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகப் பணம் இருந்தது. கொச்சுண்ணியின் இரக்க குணத்தை அறிந்து உணர்ச்சி வசப்பட்ட வியாபாரி, "கடவுளே கொச்சுண்ணியின் நல்ல மனதிற்காக அவனை நீண்ட காலம் வாழச் செய்யுங்கள்" என்று பிரார்த்தனை செய்தான்.Wednesday, June 15, 2011
தரை மேல் பிறக்க வைத்தான்.....
படம் : படகோட்டி
இசை : M.s.v
பாடல் : வாலி
பாடியவர் : T.m.s
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கண் போன போக்கிலே கால் போகலாமா...
படம் : பணம் படைத்தவன்
பாடியவர் : T.m.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : M .s . விஸ்வநாதன்.
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா