தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்மன், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.
கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா என்றழைக்கப்படுகிறது.
அத்திரி மகரிஷி தங்கியிருந்த இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் என்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. வன துர்கா (வன காளி)வுக்கும் ஒரு சிலை உள்ளது.
பிலாவடி கருப்பசாமி என்னும் கோவிலும் மேலே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சிறிது தொலைவுக்கு முன் உள்ளது.
தாணிப்பாறைக்குச் செல்லும் முன்னே தம்பிபட்டி என்னும் ஊரின் அருகில் மாவூத்து என்ற இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சதுரகிரிக்குச் செல்லும்முன் இங்கே தான் சிவன் இருந்ததாக ஐதீகம்.
விசேஷங்கள்
சதுரகிரியில் அமாவாசை நாள்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.
தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.
அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்களன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.
எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை முத்தரும்முத்தரும் முத்தரு
, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நான்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த கன்னியர் வனத்திற்குள் சென்று விடுவர் என்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.
மை தூக்கிகள்
இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தான் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகின்றனர்.நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகின்றனர்.
மூலிகை வனம்
இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கின்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.
சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயினர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.
இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மான், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி போன்ற அனைத்து விலங்குகளும் உண்டு.கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது.
மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!
மலைகளின் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுடன் நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர்.
சுனைநீர் என்பதால் குடிநீர் தித்திப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்கும்.
உணவு வசதிகள்
இங்கு மூன்று, நான்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சுவையான சாப்பாடாக இருக்கும்.
கவனிக்கவும்.. உப்பு, புளியிலிருந்து, காய்கறி, மசால், அரிசி என்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தான் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும். ஆதலால், சாப்பிடும்போது சிறிது குறையிருந்தாலும் பொருட்படுத்தாமலிருப்பது நலம். குறை பெரும்பாலும் இருக்காது என்பது வேறு விஷயம்.
காலையிலிருந்து மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் ஆக்கி, வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தன்னார்வலர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அங்குள்ள மடத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மனமுவந்து கடவுள் சேவையாக எண்ணிச் செய்கின்றனர். நடு இரவு பனிரெண்டு மணிக்குச் சென்றால்கூட வரவேற்று, இருக்கும் உணவை இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறேன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவனம்...
செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் சற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.
வனத்தினுள் செல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுடன் செல்லவும்.
செல்லும் வழி
தாணிப்பாறைக்குச் செல்ல பின்வரும் வழிகளுண்டு.
மதுரையிலிருந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.மீ)
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)
இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தேனி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையின் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான்.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேம்ந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!
இரவில் பெரும்பாலும் மலையில் ஏற வேண்டாம். அவ்வாறு ஏறினாலும் டார்ச் போன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.
முற்றும்

4 comments:
உங்களின் இந்த தொடர் மிக்க அருமை இன்னும் பல பல
தொடர்கள் வரவேண்டும். அறிய தகவல்கள் வரவேண்டும் .
மிக மிக உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி. நானும் எனது நண்பர்களும் அடுத்த மாதம் பௌர்ணமிக்கு போகலாம் என்று பிளான் போட்டுள்ளோம். இறைவன் சித்தம் எப்படியோ...
sir very super more news in come soon
thanking you
karthik madurai
very nice cover story
Post a Comment