Thursday, July 22, 2010

ஈரமான ரோஜாவே என்னை....


திரைப்படம் : இளமைக்காலங்கள்
இசை: இளையராஜா

பாடியவர்கள் : கே ஜே ஏசுதாஸ் பி சுசிலா

பாடலாசிரியர் : வைரமுத்து

வெளியான ஆண்டு : 1983



ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே... ஏ...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை... என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

No comments: