Tuesday, May 18, 2010

‘டயட்’டில் இருப்பவரா நீங்கள்?



இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும்
பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு
அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு
கெட்டுவிட்டதே என்று பலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச்
சரிசெய்யவும்,
வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.

வயிற்றுப்
பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம்
கேட்டு,
அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக்
கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.அளவான
உடற்ற்பயிர்ர்ச்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது
நடப்பது
உடலுக்கு நல்லது.அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும்.
அதேபோல், இரவு
உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

உடல் எடைக் குறைய…

* தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
* சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம்,
கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

* பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில்
தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

* உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு
வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது
ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இது இப்படி
தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை வாழுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

நன்றி - தினகரன்

No comments: