Monday, May 3, 2010

74 வயதில் குவா குவா-வாழைப்பழம்தான் காரணமாம்


லண்டன்: சமீபத்தில் குழந்தை பெற்ற 74 வயது முதியவர்(!), தனது ஆண்மை நீடிக்கக் காரணம் வாழைப்பழம்தான் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் லிங்க்ஸ் மாகாணம், லவுத் என்ற இடத்தில் வசிப்பவர் கெரி பர்க்ஸ். வயது 74. இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட 35 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இப்போது கடந்த 12ம் தேதி கெரிக்கு 2வது ஆண் குழந்தை பிறந்தது.

அதன்மூலம், உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனையை கெரி படைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உலகிலேயே மிக அதிர்ஷ்டசாலி மனிதன் நான் என்று நினைக்கிறேன். 74 வயதில் குழந்தை பெற்றது எப்படி என்று பலர் ஆச்சரியப்படுகின்றனர். சிறு வயதில் இருந்தே வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிடுகிறேன்.
தினசரி 2 முறையாவது சில வாழைப்பழங்களைச் சாப்பிடுவது வழக்கம். உணவில் அதிக உப்பு சேர்க்க மாட்டேன். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவேன். அதனால், ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. என் மனைவியின் அன்றாட வேலைகளில் உதவி செய்கிறேன்.
என்னைப் பார்த்து பலர் அதிசயிக்கின்றனர். என்மீது நான் அக்கறை கொள்கிறேன். மனதளவில் இளைஞனாக நினைக்கிறேன். இப்போது குடிப்பழக்கம், புகை பழக்கம் கிடையாது. அவற்றை 1980களிலேயே மூட்டை கட்டி விட்டேன். மனைவியின் சமையலும் எனது ஆரோக்கியத்துக்கு காரணம்.
எனக்கு அருமையான குடும்பம் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இனியும் குழந்தை பெறுவேன் என்று நினைக்கவில்லை என்ற கெரி, ஒரு நிமிடம் நிறுத்தி... ஆனால், யாருக்குத் தெரியும்? என்றாரே பார்க்கலாம். இனி, முருங்கைக்காய் கதை மறந்து வாழைப்பழம் முதலிடத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.

நன்றி :- தினகரன்

No comments: