குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் | ( குறள் எண் : 19 ) |
மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. |
Wednesday, December 29, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
Tuesday, December 28, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு சிறப்பொடு பூசனை செல்லாது வானம் | ( குறள் எண் : 18 ) |
மு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது |
Monday, December 27, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி | ( குறள் எண் : 17 ) |
மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும் |
Friday, December 24, 2010
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
படம் : சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
பாடல் : உன் பார்வையில்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : சுமங்கலி, கார்த்திக்
ம்ம்ம்…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நீயே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
—
எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னேன்று நான் சொல்லுவேன்
இது அதுவோ ஹ்ம் இது அதுவோ ஹ்ம்
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்தைக்கு ஏதெதோ அர்த்தங்களே
பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசை தான்
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
—
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
—
ஹா உனதருகே இருபதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு
புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருபதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடிஓடி வாழ்வேன்
காதல் என்னும் கடிதாசி நீ என்றென்றும் அன்புடன் நான்
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
—
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நானே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகதாலே நான் உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே | ( குறள் எண் : 16 ) |
மு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது சாலமன் பாப்பையா : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் |
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே | ( குறள் எண் : 15 ) |
மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் |
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் | ( குறள் எண் : 14 ) |
மு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் சாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார் |
Thursday, December 23, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து | ( குறள் எண் : 13 ) |
மு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் |
Wednesday, December 22, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் | ( குறள் எண் : 12 ) |
மு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் சாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே |
Tuesday, December 21, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் | ( குறள் எண் : 11 ) |
மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் |
Monday, December 20, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் | ( குறள் எண் : 10 ) |
மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் |
Friday, December 17, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் | ( குறள் எண் : 9 ) |
மு.வ : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் சாலமன் பாப்பையா : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் | ( குறள் எண் : 8 ) |
மு.வ : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது சாலமன் பாப்பையா : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம் |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் | ( குறள் எண் : 7 ) |
மு.வ : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் |
Tuesday, December 14, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க | ( குறள் எண் : 6 ) |
மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் |
Monday, December 13, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் | ( குறள் எண் : 5 ) |
மு.வ : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை சாலமன் பாப்பையா : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு | ( குறள் எண் : 4 ) |
மு.வ : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை சாலமன் பாப்பையா : எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை |
Friday, December 10, 2010
பச்சைக் கிளிகள் தோளோடு
பாடல் : பச்சைக் கிளிகள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் – அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் – நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் – என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் | ( குறள் எண் : 3 ) |
மு.வ : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் சாலமன் பாப்பையா : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் | ( குறள் எண் : 2 ) |
மு.வ : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? சாலமன் பாப்பையா : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன? |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி | ( குறள் எண் : 1 ) |
மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. |
Sunday, November 28, 2010
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே..
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்:நரேஷ் ஐயர்
பாடலாசிரியர்: ஏக்நாத்
வெளியான ஆண்டு : 2010
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ
ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
ஒ ஒ ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சுக்குழி தள்ள
நீ பொத்தி வைச்ச ஆசையெல்லாம்
கண்முன்னே தள்ளாட
கண்ணாமுச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ள ஆட
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சிக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுபூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே
ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
நின்னுபோச்சு எம்மூச்சு
பஞ்சுமெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மொகம்
முத்தக்கட்டு மொழி அழகில்
குத்திக்குத்தி கொன்ன வலே
எ சிக்கிக்கிட்ட என் மனசில்
ஊறவச்சி தொவைச்சவலே
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே
ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ
Tuesday, November 16, 2010
கிளியோபாட்ரா
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள்.எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.
இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது.
கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை. சற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
நன்றி - தினகரன்
Tuesday, November 9, 2010
உள்ளத்தில் நல்ல உள்ளம்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்:சிர்காழி கோவிந்தராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
வெளியான ஆண்டு : 1964
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
Tuesday, November 2, 2010
ஒ மனமே ஒ மனமே....
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்
பாடலாசிரியர்: வைரமுத்து
வெளியான ஆண்டு : 2005
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தல்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா ?
தோல்விகள் இன்றி பூரணமா ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம்
கூலான் கற்களை எரிந்தது யார் ?
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன் ?
ஒ மனமே ஒ மனமே
Monday, November 1, 2010
நிலவில் நீர் சுழற்சிக்கு அதிக வாய்ப்பு: நாசா
ஏற்கனவே நினைத்திருந்த அளவைக் காட்டிலும் அதிகமான அளவில் நீர் வளம் அங்கு இருப்பதாக நாசா வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆராய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய விண்கலம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. நிலவில் நிழற்பகுதியில் நீர், மண், பிற உபயோகமான தாதுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் நிலவில் ரசாயன ரீதியில் மாற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்கு நீர் சுழற்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிலவில் பெரும்பாலும் தூய்மையான ஐஸ் கட்டிகளாக சில இடங்களில் இருப்பதாகவும் நாசா வெளியிட்ட 6 பக்க அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த விவரம் முழுவதையும் "சயின்ஸ்'' இதழ் வெளியிட்டுள்ளது. நிலவின் நிழல் பரப்பில் ஐஸ் கட்டிகளாகவும், சில இடங்களில் தண்ணீராகவும் உள்ளதையும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானக் குழுவின் தலைவர் மைக்கேல் வார்கோ தெரிவித்துள்ளார்.
நிலவில் கடந்த காலங்களில் நீர் உருவாகி அது பனியாக உறைந்திருக்கலாம். அல்லது ரசாயன மாற்றங்களால் மிக அதிக அளவில் பனி உருவாகி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் பனிக் கட்டிகளை தண்ணீராக மாற்றி நிலவில் மனிதன் வசிக்க முடியுமா? என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நிலவில் மிக அதிக அளவில் கிடைக்கும் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் வாயுக்களைக் எரிபொருளாக மாற்றி வாழ்வது குறித்த ஆராய்ச்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவில் காணப்படும் வாழ்வியல் சூழல் மற்றும் அங்கு நிலவும் தட்ப வெப்பம் உள்ளிட்டவை குறித்தும் ஆராயப்படுகிறது. நிலவில் தண்ணீர் உருவானது எப்படி, அங்கு பனிக் கட்டிகள் அதிக அளவில் காணப்படுவது எதனால் என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தினகரன்
Friday, October 29, 2010
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
பாடலாசிரியர்: வைரமுத்து
Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு
Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate
சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
என் கண்ணீர்..
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு
Thursday, October 28, 2010
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ ஒட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் ஒட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
Wednesday, October 27, 2010
தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா
தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா
* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல்
கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
கவனம்:
* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள்,
வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
உத்தானபாத ஆசனம்
காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும்.
இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்)
தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி
மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும்.
ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.
பலன்கள்:
அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம்
பெற்றுநன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி
நரம்புகளும்தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப்
பின் இவ்வாசனம்செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.
குறிப்பு:
உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2
அம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2
அடி உயரலாம். 2 அம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து
உயரலாம்.
Monday, October 25, 2010
யார் அந்த பெண் தான்....
படம் : பாஸ் (எ) பாஸ்கரன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஹரிசரண்
வெளியான ஆண்டு : 2010
யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள்
எங்கும் இருக்கிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முனனால் நடக்கிறாள்
நெஞ்சை கிழிக்கிராளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தாள்
யார் அந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையேடு நானும்பிறக்கவே துடிப்பேன்
கல் தீண்டும் கொலுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால்
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
நான் கொஞ்சம் பார்த்தாள் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தாள் மறைப்பாள்
Friday, October 22, 2010
தெய்வம் இல்லையெனும்போது...
படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன்
வெளியான ஆண்டு : 2010
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
இதுவரையில் எதைக்கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு?
—-
ஒரு நாளினை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்கு பார்ப்பது ஓ….
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே
உனை எதை தந்து மெய்ப்பிப்பது
அழுதிடக்கூடாதென்று அறிவுரை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தர தூக்கம் என்ன ஆண் தாயே
—
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
—
உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ
தினம் பேசுவாய் அது என்ன ஆனது… ஓ….
தலை மேல் சுமை இருந்தாலும்
புன்னகை தருமே இதழ் அது எங்குப்போனது
நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்
நடுவினிலே முந்தி சென்றால் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்குவாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்
—
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு?
Thursday, October 21, 2010
அல்லா ஜானே அல்லா ஜானே.....
படம் : உன்னை போல் ஒருவன்
இசை : சுருதி ஹாசன்
பாடலாசிரியர்: கமல்ஹாசன் , மனுஷ்யபுத்திரன்
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வெளியான ஆண்டு : 2009
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ
நன்மைகள் தீமைகள் யார் தான் அறிவார்
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்
அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே
வேட்டை முடிந்து ரோம்புதல் எங்கே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரிருள் இன்று நிலவினை திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்
அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
வெல்பவர்கள் எல்லாம் போர்களில் இங்கே
விழுந்தவர்கள் எல்லாம் பெயர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவென்றும் இல்லா அறிவின், பாதை
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே