Monday, December 27, 2010

அதிகாரம் - வான் சிறப்பு

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

( குறள் எண் : 17 )

மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்

No comments: