Wednesday, December 22, 2010

அதிகாரம் - வான் சிறப்பு

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

( குறள் எண் : 12 )

மு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

சாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே

No comments: