Wednesday, October 27, 2010

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க

* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.

* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல்
கொஞ்சம் மேலே தூக்குங்கள்.

* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.

* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்

* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்

* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.

கவனம்:

* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள்,
வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.


உத்தானபாத ஆசனம்






நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில்
காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும்.

இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்)
தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி
மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும்.

ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.

பலன்கள்:

அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம்
பெற்றுநன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி
நரம்புகளும்தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப்
பின் இவ்வாசனம்செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.

குறிப்பு:

உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2
அம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2
அடி உயரலாம். 2 அம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து
உயரலாம்.

3 comments:

திரு.. said...

Dear Kumar,

if we have backpain, (L4,L5) can we do this asanam?
I feel little strain while doing this.
-tiru

குமார் said...

Don,t take for a long give a break while you feel pain.
relax & continue.

Still if you fell the pain dont go beyond 2ft.

ஆதி said...

சிசேரியன் செய்து 8 வருடம் ஆகி விட்டது இந்த ஆசனம் நான் செய்யலாமா