Monday, July 4, 2011

போக்குவரத்து விளக்குகள்!




பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விபத்துகளையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப்பட்டது. அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு’ அது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எச்சரித்து, செல்ல அனுமதிப்பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியாளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ணத்தையும், `செல்லலாம்’ என்று தெரிவிப்பதற்கு பச்சை வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். முதன்முதலாக அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டன. சராசரியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு வார காலத்தை போக்குவரத்து விளக்குகளுக்காகக் காத்திருப்பதில் செலவிடுகிறார்.

http://senthilvayal.wordpress.com

1 comment:

Manisha said...

This Blog Provide Such good information about Tamil eBooks. Thanks for sharing this resources with us. You guys can also give a new try on: https://www.pustaka.co.in/