Friday, May 20, 2011

உள்ளங்கை நீள பூனை!


உள்ளங்கை நீளத்திற்கு பூனை இருக்குமா? பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன, இப்படிப்பட்ட அதிசய பூனை ஒன்று உள்ளது.
அமெரிக்காவில், டிரமான்ட் நகரில் வசிப்பவர் கால்நடை டாக்டர் டொன்னா சாஸ்மன். இவர், ஒரு நாள், ஒரு பண்ணைக்கு செல்லும் போது, இந்த அதிசய பூனையைப் பார்த்தார்; அவ ராலேயே நம்ப முடியவில்லை. அந்த பூனை, மிகவும் சிறியதாக இருந்தது. உள்ளங்கை அளவு கூட அது இல்லை. "இந்த குட்டி பூனை பிறந்து, எத்தனை நாள் ஆகிறது?' என, அதன் உரிமையாளரிடம் கேட்டார். "இது குட்டி பூனை அல்ல;. இரண்டு ஆண்டுகள் ஆன பூனை. ஆனால், இதன் வளர்ச்சி இவ்வளவுதான். இதற்கு மேல் வளரவே இல்லை...' என்றார் அதன் உரிமையாளர்.
அந்த பூனையை தன் குட்ஷெப்பர்ட் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இது, சிறிய கண்ணாடி டம்ளருக்குள் அடங்கி விடுகிறது. அதன் மொத்த உயரமே, 6.1 அங்குலம் தான்; எடை இரண்டு கிலோ.
உள்ளங்கையில் பொம்மை போல் உட்கார்ந்து கொள்ளும் இந்த பூனை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், மிகச்சிறிய பூனை என்ற பெயரைப் பெற்று விட்டது. இப்போது, இந்த மருத்துவ மனையில் எல்லாரது பார்வையும் இந்த பூனை மேல் தான் உள்ளது.
எல்லா பூனைகளையும் போல நன்றாக ஓடியாடி விளையாடும் இந்த பூனை, நன்றாக சாப்பிடவும் செய்கிறது.
ஏன் இந்த பூனை மட்டும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என, ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
***

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி

No comments: