Tuesday, April 5, 2011

நாள் கணக்கில் சிந்தியுங்கள்


* அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில்
எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே
நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த
மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த
மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ,
அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து
நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை
உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள்,
நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.


-விவேகானந்தர்

No comments: