Tuesday, December 6, 2011

அழுவதாலும் நன்மை உண்டு!





கண்ணீர் விடுவதை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மை. ஆனால் உணர்ச்சிகளின் உச்சத்தில், அது சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் கண்ணீர் கரை மீறுகிறது.

மனம் விட்டுக் கண்ணீர் சிந்தி அழுவதால் நன்மை உண்டு, மனதில் புதைந்திருக்கும் சோகம், பாரத்தை அது கரைக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கண்ணீரால் விளையும் ஒரு புதிய நன்மையைக் கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.

அதாவது, கண்ணீர் விட்டு அழுவது ஒருவரின் சுய கவுரவத்துக்கு ஊக்கம் அளிக்கிறது, மனரீதியாக ஒரு தயார் நிலைக்கு உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர் கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம்- புலூமிங்டனை சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இதுகுறித்து ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள், கல்லூரி அளவிலான கால்பந்து போட்டிகளில் தோல்வியுறும்போது கலங்காத `உறுதியான’ மாணவர்களை விட, உடனடியாகக் கண்ணீர் சிந்தும் மாணவர்களுக்கு சுய கவுரவத்தின் அளவு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் மேலும் கூறும்போது, சகஅணி வீரர்களுடன் தொட்டுத் தழுவிப் பழகும் நெருக்கமான வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கால்பந்து வீரர்கள் களத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, கண்ணீர் சிந்துவது போன்றவை ஆட்டத்தில் எவ்வாறு தாக் கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் இந்த ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர்.

இதுதொடர்பாக, 150 கல்லூரி கால்பந்து வீரர்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம், அழுகைக்கான வெவ்வேறு சூழ்நிலைகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டு, அவை தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன.

இந்த ஆய்வில் இறுதியாகத் தெரியவந்திருக்கும் விவரம், உணர்ச்சிகளை அடக்கி வைத்திருப்பதை விட அதை கண்ணீர் போன்ற வழிகளில் வெளிப்படுத்திவிடுவது நன்மை பயக்கும் என்பதே!

No comments: