Friday, September 23, 2011

காகிதமாகப் பயன்பட்ட பொருட்கள்!


தாவது ஒன்றில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. பண்டைய இந்தியாவில், வாழைப்பழத் தோல் முதல் பட்டைகள் முதல் பலவற்றில் மனிதர்கள் எழுதினர். அதற்கு மூலிகைச் சாறைப் பயன்படுத்தியதால் பல நாட்கள் அழியாமல் இருந்தன.

அதேநேரத்தில் உலகின் மற்ற நாடுகளிலும் எழுதுவதற்கு வேறு பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. புராதன எகிப்தியர்கள் பேப்பர் போன்ற ஒரு பொருளை விதைகள் மூலம் தயாரித்தனர்.

ஐரோப்பியர்கள் எழுதுவதற்கு மிருகங்களின் தோலைப் பயன்படுத்தினர். உடையாமல் மடித்துவைக்க முடியும் என்பதால் அதற்கு அதிக `மவுசு’ இருந்தது.

பல நாடுகளிலும் பல மிருகங்களின் தோல்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டன. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் மனிதத் தோலில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளில் மக்கள் எழுதினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாய்லுன் என்ற சீனர் மூங்கில் நாரைப் பயன்படுத்திக் காகிதத்தைத் தயாரித்தார். அதுதான் தற்போதைய பேப்பரின் முன்னோடி.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

No comments: