குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் | ( குறள் எண் : 19 ) |
மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. |
Wednesday, December 29, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
Tuesday, December 28, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு சிறப்பொடு பூசனை செல்லாது வானம் | ( குறள் எண் : 18 ) |
மு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது |
Monday, December 27, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி | ( குறள் எண் : 17 ) |
மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும் |
Friday, December 24, 2010
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
படம் : சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
பாடல் : உன் பார்வையில்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : சுமங்கலி, கார்த்திக்
ம்ம்ம்…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நீயே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
—
எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னேன்று நான் சொல்லுவேன்
இது அதுவோ ஹ்ம் இது அதுவோ ஹ்ம்
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்தைக்கு ஏதெதோ அர்த்தங்களே
பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசை தான்
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
—
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
—
ஹா உனதருகே இருபதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு
புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருபதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடிஓடி வாழ்வேன்
காதல் என்னும் கடிதாசி நீ என்றென்றும் அன்புடன் நான்
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
—
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நானே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகதாலே நான் உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே
லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே | ( குறள் எண் : 16 ) |
மு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது சாலமன் பாப்பையா : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் |
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே | ( குறள் எண் : 15 ) |
மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் |
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் | ( குறள் எண் : 14 ) |
மு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் சாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார் |
Thursday, December 23, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து | ( குறள் எண் : 13 ) |
மு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் |
Wednesday, December 22, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் | ( குறள் எண் : 12 ) |
மு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் சாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே |
Tuesday, December 21, 2010
அதிகாரம் - வான் சிறப்பு
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் | ( குறள் எண் : 11 ) |
மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் |
Monday, December 20, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் | ( குறள் எண் : 10 ) |
மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் |
Friday, December 17, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் | ( குறள் எண் : 9 ) |
மு.வ : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் சாலமன் பாப்பையா : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் | ( குறள் எண் : 8 ) |
மு.வ : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது சாலமன் பாப்பையா : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம் |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் | ( குறள் எண் : 7 ) |
மு.வ : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் |
Tuesday, December 14, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க | ( குறள் எண் : 6 ) |
மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் |
Monday, December 13, 2010
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் | ( குறள் எண் : 5 ) |
மு.வ : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை சாலமன் பாப்பையா : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு | ( குறள் எண் : 4 ) |
மு.வ : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை சாலமன் பாப்பையா : எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை |
Friday, December 10, 2010
பச்சைக் கிளிகள் தோளோடு
பாடல் : பச்சைக் கிளிகள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் – அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் – நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் – என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் | ( குறள் எண் : 3 ) |
மு.வ : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் சாலமன் பாப்பையா : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் | ( குறள் எண் : 2 ) |
மு.வ : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? சாலமன் பாப்பையா : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன? |
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி | ( குறள் எண் : 1 ) |
மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. |