ஹே ஹோ ஹும் ல ல லா...
பொன் மாலை பொழுது.....
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்....
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,
வானம் இரவுக்கு பாலமிடும்,
பாடும் பறவைகள் தாளமிடும்,
பூ மரங்கள், சாமரங்கள் வீசாதோ?
இது ஒரு பொன் மாலை பொழுது..
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..
வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..
ஒரு நாள் உலகம் நீதி பெரும்,
திரு நாள் நிகழும் தேதி வரும்,
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்,
இது ஒரு பொன் மாலை பொழுது..
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஆ ஹே ஹோ ஹும் ல ல லா..
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்...
No comments:
Post a Comment