Wednesday, June 2, 2010

சிங்கம் -ஆண் சிங்கம்

சிங்கம் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்



நடிகர்கள் – சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன்
எடிட்டிங் - வி.டி. விஜயான்

இயக்கம்- ஹரி
தயாரிப்பு- ஸ்டியோ கிரீன்


கதை பார்க்க போறவங்களுக்கு முதல்லையே காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை.ஹரி தானது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் காரசாரமான காவியம் தான் - இந்த சிங்கம்.

நான் கூட சிங்கதல-சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் ரொம்ப மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் படு ஸ்பீட இருக்கிறது.கோடம்பாக்கத்து செய்தி இது விஜய்கு சொன்ன ஸ்கரிப்டமா நல்ல வேலை அவரு நடிகல.சரி நாம படதுக்கு வரோம்.



அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி சூப்பர்.ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனம் , என்று பல...வசனங்கள் அனல் தெரிகுறது.

ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல, இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.





கதை களம்

கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்காக

சொந்த உள்ளூரிலேயே (நல்லூர்) போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, சென்னையில் ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து என மிரட்டி வரும் பிரகாஷ்ராஜ், கேஸ் ஒன்றில் நல்லூர் ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போடவேண்டும் என கோர்ட் சொல்ல. டூப்ளிகேட் ஆளை செட்டப் செய்து அணுப்பி கையெழுத்து போடு வைப்பதை கண்டுபிடிக்கும் சூர்யா,பிரகாஷ்ராஜ்தான் கையெழுத்துப்போடவேண்டும் என கூறி அடுத்த மூணு மணி நேரத்துக்குள் வரவழைக்க இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த புளித்து போன கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது இந்த சிங்கம்.




சூர்யா - துரைசிங்கம்

துரைசிங்கம்(சூர்யா). பெட்டி கேஸ், வெட்டு கேஸ் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வெளியிலேயே பஞ்சாயத்து பண்ணி அணுப்பி வைத்து காந்தியத்தை வெளிப்படுத்தும் இன்ஸ்பெக்டர். யாராவது புகார் கொடுக்க வந்தால் இரு தரப்பையும் விசாரித்து, கையை கொடுங்க கட்டிப்பிடிங்க என சமாதான புறாவை பறக்கவிடும் காவல் சிங்கம்.




அனுஷ்காவிடம் தியேட்டரில் கலாய்க்கும் ரவுடிகளை யூனி ஃபார்மை கழற்றி வைத்து ஓட ஓட விரட்டி வரட்டி அடிப்பது, பிரகாஷ்ராஜ் அடியாட்களின் காரை கிரீனில் தொங்கவிட்டு தோலுரிப்பது,கேட்க வரும் அசிஸ்டெண்ட் கமிஷனர் - நிழல்கள் ரவி நெஞ்சு விறைத்து நின்று ‘ உங்களுக்கு தோளில் ஒரு சிங்கமும், தொப்பியில் ஒரு சிங்கமும்தான் இருக்கு. ஆனா என் நெஞ்சு மேலேயே சிங்கம் இருக்கு” என துரைசிங்கம் என்ற தனது பெயரை சுட்டிக்காட்டிபேசிக்கொண்டே வந்து நிழல்கள்ரவியை நடுரோட்டில் நிறுத்துவது.பிரகாஷ்ராஜிடம் " நீ சிங்கத்தை சினிமாவில் பார்த்திருப்ப, போட்டோ பார்த்திருப்ப, கூண்டுக்குள்ள பார்த்திருப்ப,காட்டுக்குள்ள தனியா நடக்குறப்ப பார்த்திருப்ப.ஆனா தனியா நின்னு வேட்டையாடி பாத்து இருக்க மாட்ட அடிச்சா ஒனேட்ற வெயிட்.... பாக்குறிய.. பாக்குறிய" என்று கர்ஜிப்பது,, ஹோட்டல் சண்டையில் மேனேஜரிடம் இன்சூரன்ஸ் பண்ணியிருக்கீங்களா என்று கேட்டுவிட்டு அடியாட்களை தொம்சம் செய்வது என்று விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். 'காக்க காக்க' படத்திற்குப் பிறகு சூர்யா போலீஸ் வேஷம் போட்டிருக்கும் இப்படத்தில் நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா-(காவியா) ….யப்பா!



வேட்டைக்காரன் பிறகு நடித்து இருக்கும் படம். அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார்,நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு போல. கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள், அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசானம் பேசி நடித்து இருக்கிறார். என்ன கொடுமை சார் இது.பாடல் காட்சியில் அனுஷ்காவின் உடையழகும் இடையழகும் யப்பா யப்பா .... போதும் போதும் என்கிற அளவுக்குa ஆடை போட்டு இருகாங்க.

பிரகாஷ்ராஜ் -மயில்வாகனம்



பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில். கையெழுத்து போட காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல்.மொத்தில் தனக்கு கொடுத்த கதபத்ரித்தை கலக்கி இருக்கிறார்.


விவேக் -எரிமலை.....(யாரு அது )

விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார் இல்லை காமெடி செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலை பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு சில கட்சியில் மட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்.

சிங்க‌ம் ப‌டம் ந‌ன்றாகயிருப்ப‌தாக‌ காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'ச‌மீப‌த்தில்' வ‌ந்த‌ ம‌ற்ற தமிழ் ப‌ட‌ங்க‌ள்தான்.

மொத்தத்தில் சிங்கம் - அடிச்சா ஒனேட்ற வெயிட்

கதை - ????????????????
திரைக்கதை - விறுவிறு
வசனம் - ஆயரம் வாட்ட்ஸ்
பாடல் - தில் / ஒன்று பாஸ்

ஆக்‌ஷன் - லாங் பஞ்ச்
ஒளிப்பதிவு - ஓகே
எடிட்டிங் -
தத்தித் தாவுகிறது

1 comment: