Wednesday, June 30, 2010
சதுரகிரி மலை
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.
அமைவிடம்
சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அருகில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.
தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையின் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதான் கோவிலைச் சென்றடைய முடியும்.
மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி என்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நான்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ என்றால் நான்கு, ‘கிரி’ என்றால் மலை.
சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டித்தான் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றின் போக்கிடமாக உள்ளது.
கைலாயத்தில் சிவபெருமானையும் பார்வதியையும் தேவாதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இருவரையும் பிரதட்சணமாகச் சுற்றி வந்து வணங்கினர்.
பிருங்கி மகரிஷி என அழைக்கப்படும் தவ சிரேஷ்டப் பெருமகனார் மட்டும் சிவபெருமானை மட்டுமே சுற்றி வந்து வணங்கினார், பார்வதியை தவிர்த்துவிட்டு.
பார்வதி சிவனைப் பார்த்து ஏன் அவர் தன்னைச் சுற்றி வரவில்லை எனக் கேட்டார். பூலோகத்தில் அனைத்தையும் துறந்துவிட்டு மோட்சகதியைத் தேடி தன்னிடம் வருவோருக்குத் தாம் மோட்சத்தை அளிப்பதாகப் பதிலளித்தார் பரமாத்மா.
உலக இன்பங்களை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் அவற்றை அடையும் சக்தியை தேவியிடமிருந்து பெறுவதால், தங்கள் இருவரையும் சேர்த்து வணங்குகின்றனர். ஆனால் பிருங்கி முனிவரோ தமக்கு மோட்சகதி மட்டும் கிடைத்தால் போதும் என விரும்புவதால் அவர் தன்னை மற்றும் சுற்றி வந்து வணங்கியதாக மேலும் கூறினார் சிவன்.
இவ்வாறு பரம்பொருள் கூற, தன்னைத் தவிர்த்துவிட்டாரே என்று கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு சாபமிட்டார், அவருடைய சக்தியெல்லாம் இழக்கட்டும் என்று.
சக்தியை இழந்த மகரிஷி தடுமாறி கீழே விழ, தன்னுடைய அடியாரைக் காக்கும் விதமாக ஓர் ஊன்றுகோலை எடுத்து சிவன் வீச, அதைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி பிருங்கி மகரிஷி வெளியேறினார்.
தன்னை சிவனுடன் இணைத்துக் கொண்டால் மட்டுமே தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என எண்ணிய பார்வதி, பரமாத்மனின் இடப்புற உடலாகத் தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டி தவம் செய்யப் புறப்பட்டார்.
பரம்பொருளை விட்டுப் பிரிந்த பார்வதி சதுரகிரி வந்தடைந்து தவம் செய்ய சரியான இடம் தேடி மலையுச்சியை அடைந்து கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்யலானார். இந்த மரம் சட்டநாத முனிவரின் குகைக்கருகில் இருக்கிறது.
அவ்வனப் பகுதி 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து வறட்சியின் பிடியில் சிக்கியிருந்தது. தெய்வமகளின் வருகையால் மரங்கள் மலர்ச்சியடைந்தன. செடிகளும், கொடிகளும் பூச்சொறிந்தன. புத்துணர்வு பெற்றது வனம்.
தெய்வத்தின் வருகையறிந்த சட்டநாதர் அவரை வரவேற்று, வந்த காரணத்தை வினவினார். பார்வதி தேவியின் விளக்கத்தைக் கேட்டறிந்த சட்டநாதர், அவரது தவம் நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்தார்.
பார்வதி தேவி சந்தனத்தைக் குழைத்து அதன் மூலம் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டானம் செய்தார். அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்த தேவி, கடும் தவத்தை மேற்கொண்டார்.
மனமுருகிய சிவன் தேவியின் தவத்தினை மெச்சி, தன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தேவி வேண்டிய வரத்தினை அருளினார்.
சந்தன லிங்கத்தை தேவியே பூஜித்து வழிபட்டமையால் அதை தவத்தில் உயர்ந்த ரிஷிகளும், முனிவர்களும், சித்தர் பெருமக்களும் மட்டுமே பூஜிக்க வேண்டுமென்று ஆணையிட்டார்.
இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் பக்தர்கள் தன்னை இங்கே வந்து வழிபட்டால், இவ்வுலக வாழ்வின் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே அவர்கள் மோட்சகதியை அடையும் பக்குவத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், இறுதியாக தன்னுடன் இணைவார்கள் என்றும் அறிவித்தார்.
அதன் பின் எல்லோரையும் ஆசிர்வதித்த சிவபரமாத்மா தன்னுடன் இணைந்த தேவியுடன் அர்த்தநாரியாக கைலாயம் திரும்பினார்.
பின்னர், சட்டநாத முனி சந்தன மகாலிங்கத்தை வழிபட, அவருக்குப் பின் அவருடைய சீடர் காணாங்கி முனி வழிபட்டு வந்தார். இதுவே தல வரலாறு.
(தொடரும்).....
Tuesday, June 29, 2010
வைகைக் கரை காற்றே நில்லு......
திரைப்படம்: உயிருள்ளவரை உஷா
இசை:டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
வெளியான ஆண்டு: 1984
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை காற்றே நில்லு)
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை காற்றே நில்லு)
Monday, June 28, 2010
கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?
பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்துவரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலேசென்றுவிட,உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது. இதுபோல்லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில்அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.
ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு.கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?
நன்றி -தினகரன்
தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி.....
படம் : தங்கைக்கோர் கீதம்
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்
வெளியான ஆண்டு: 1983
தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன்
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
மலராக எண்ணி தான் நானும் வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட நானும் துடிச்சேன்
தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
கிளியாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் கொத்தி விட வலிபட்டு நானும் துடிச்சேன்
தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
Sunday, June 27, 2010
வாசமில்லா மலரிது.......
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடல் : டி.ராஜேந்தர்
வெளியான ஆண்டு: 1980
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
Saturday, June 26, 2010
வாழைப்பழம்
வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.இதில் குளூக்கோஸ்,ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் இருக்கிறது. அதனை இன்று பார்ப்போம்.
வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும்
வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது.
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.
பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.
2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும
3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும
5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்ச
6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும
7.மஞ்சள் வழைப்பழம் -மலச்சிக்கலைப் போக்கும்
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும்.
இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.
மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.
நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.
உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.
புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.
அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.
தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.
சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.
வாழைப்பழத்தோல்:”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.
100 கிராம் வாழைப்பழத்தில்:நீர் 61.4%
மாவுச்சத்து 36.4.%
சுண்ணாம்புச்சத்து 0.01%
கரோட்லின் 78
மை.கிரிபோபிளேவின் _ 0.08 மி.கி.வைட்டமின் 'சி' 7 மி.கி.
புரோட்டின் 1.3%
கொழுப்பு 0.2%
இரும்பு 0.04%
தயமின் 0.05 மி.கி.
நியாசின் 0.5 மி.க
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் !
Friday, June 25, 2010
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வரிகள் - பா.விஜய்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!
Thursday, June 24, 2010
எங்கே எனது கவிதை கனவிலே.....
படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை- ஏ. ஆர். ரஹ்மான
வரிகள் - வைரமுத்து
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
படம்: அலைபாயுதே
வரிகள்: வைரமுத்து
இசை: ஏ. ஆர். ரஹ்மான
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
Wednesday, June 23, 2010
கடவுள் தந்த அழகிய வாழ்வு
படம்: மாயாவி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா
இசை: தேவி ஸ்ரீ பிரசாந்த.
எழுத்து - பழனி பாரதி
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காத்து கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
Tuesday, June 22, 2010
உனக்கென்ன மேலே நின்றாய்
படம் - சிம்லா ஸ்பெஷல்
இசை - விஸ்வநாதன்
பாடல் - வாலி
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
(உனக்கென்ன)
தாய் மடியில் பிறந்தோம்,தமிழ் மடியில் வளர்ந்தோம்!
நடிகரென மலர்ந்தோம்,நாடகத்தில் கலந்தோம்!
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை,நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று,ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு,புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு,நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்....
ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்
(உனக்கென்ன)
Sunday, June 20, 2010
தீயில் விழுந்த தேனா
படம் : வரலாறு-அஜித்
இசை : ரஹ்மான்
எழுத்து : வைரமுத்து
தீயில் விழுந்த தேனா?
இவன் தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா?
இல்லை தாயும் ஆனவனா?
(தீயில்)
மழையின் நீர் வாங்கி,
மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி,
தனயன் அழுவானோ?
உயிரைத்தந்தவளின்,
உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?
(தீயில்)
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!
(ஓர்)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?
நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?
தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
(தீயில்)
தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!
உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?
கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!
(தீயில்)
Saturday, June 19, 2010
தெய்வம் தந்த வீடு
படம் - அவள் ஒரு தொடர் கதை
இசை - விஸ்வநாதன்
பாடல் - கண்னதாசன்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊர் என்ன சொந்த வீடென்ன
சொல்லடி ஞான பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன
நான் கேட்டு தாய் தந்தை படைத்தார - இல்லை
என் பிள்ளை எனைகேட்டு பிறந்தான
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடிய நீ என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருகூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வெளி போடி தங்கச்சி
காடுகேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி
என்னை தோடி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தென் என்ன கடிக்கும் தேள் என்ன ஞான பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
Friday, June 18, 2010
நிழல்கள்-பொன் மாலை பொழுது
ஹே ஹோ ஹும் ல ல லா...
பொன் மாலை பொழுது.....
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்....
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்..
ராத்திரி வாசலில் கோலமிடும்,
வானம் இரவுக்கு பாலமிடும்,
பாடும் பறவைகள் தாளமிடும்,
பூ மரங்கள், சாமரங்கள் வீசாதோ?
இது ஒரு பொன் மாலை பொழுது..
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..
வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்..
ஒரு நாள் உலகம் நீதி பெரும்,
திரு நாள் நிகழும் தேதி வரும்,
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்,
இது ஒரு பொன் மாலை பொழுது..
வான மகள் நானுகிறாள்,
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது....
ஆ ஹே ஹோ ஹும் ல ல லா..
ஹும்.. ஹே ஹோ ஹம் ஹம்ம் ஹம்ம் ஹம்ம்...
Thursday, June 17, 2010
ஆடாத ஆட்டமெல்லாம்
இசை - யுவன்
எழுத்து - ச்நேஹன்
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தம் இல்லையே.....
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே .......
ஏன் ? நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன ?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே...
பாதை மாறி போகாதே ......
பூமி கொஞ்சம் குளுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே ,
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே
பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே ........
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்தது என்ன?
நீ கொண்டு போவது என்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா?
வாழ்க்கை இங்கே யாருக்கும்
சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே....
ஏன் ? நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
Tuesday, June 15, 2010
செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!
இசை - எ. ர . ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு. கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!
கம்பன் நடழவர் கவிஅரசியும் நல்ல அழும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்ஆடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
Wednesday, June 2, 2010
சிங்கம் -ஆண் சிங்கம்
நடிகர்கள் – சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்
இசை- தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன்
எடிட்டிங் - வி.டி. விஜயான்
இயக்கம்- ஹரி
தயாரிப்பு- ஸ்டியோ கிரீன்
கதை பார்க்க போறவங்களுக்கு முதல்லையே காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை.ஹரி தானது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் காரசாரமான காவியம் தான் - இந்த சிங்கம்.
நான் கூட சிங்கதல-சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் ரொம்ப மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் படு ஸ்பீட இருக்கிறது.கோடம்பாக்கத்து செய்தி இது விஜய்கு சொன்ன ஸ்கரிப்டமா நல்ல வேலை அவரு நடிகல.சரி நாம படதுக்கு வரோம்.
கதை களம்
கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்காக
சூர்யா - துரைசிங்கம்
பிரகாஷ்ராஜ் -மயில்வாகனம்
சிங்கம் படம் நன்றாகயிருப்பதாக காரணம் படத்தின் இயக்குனர் ஹரியோ அல்லது சூர்யாவோ அல்ல,மிக 'சமீபத்தில்' வந்த மற்ற தமிழ் படங்கள்தான்.
மொத்தத்தில் சிங்கம் - அடிச்சா ஒனேட்ற வெயிட்
கதை - ????????????????
திரைக்கதை - விறுவிறு
வசனம் - ஆயரம் வாட்ட்ஸ்
பாடல் - ஐதில் / ஒன்று பாஸ்
ஆக்ஷன் - லாங் பஞ்ச்
ஒளிப்பதிவு - ஓகே
எடிட்டிங் - தத்தித் தாவுகிறது