Thursday, February 11, 2010

பழமொழி-நாயைக் கண்டால்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போதுநாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழிதற்போது பிரயோகிக்கப் படுகிறது.

இதன் உண்மைப் பொருள்.
பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பிநாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தைஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம்எப்படி? என்று.

அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

இது மனிதரின் பார்வையில்தான்
ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது.

No comments: