திரைபடம் : மகாநதி
இசை : இளையராஜா
வரிகள் :
பாடியவர் : கமல்ஹாசன்
வெளியான ஆண்டு : 1994
எங்கேயோ திக்குதெச
காணாத தூரந்தான்.
எம்மாடி வந்ததென்ன
தென்னாட்டின் ஓடம்தான்.
காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி!
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி!
கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனதே!
கண்ணார நானும் காண இத்தனைநாள் ஆனதே!
இது கண்ணே செந்தமிழ் தேனே
தந்தையின் பாசம் வென்றதடி!
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே
இத்துடன் சோகம் சென்றதடி!
நான் கங்கா நதியைக் காணும் பொழுது
உண்மை விளங்குது!
இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில்
கங்கை கலங்குது!
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை
நீரில் கழுவுது!
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி
நானும் அழுவது?
No comments:
Post a Comment