Friday, May 20, 2011

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம்.இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு
சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி,
நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள்,
வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும்.
வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு
வெங்காயத்தையும்,
கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை
தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது.
வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும்.

சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால்
ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல்
குறையும்.


* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை
பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.


* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம்
மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

உள்ளங்கை நீள பூனை!


உள்ளங்கை நீளத்திற்கு பூனை இருக்குமா? பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன, இப்படிப்பட்ட அதிசய பூனை ஒன்று உள்ளது.
அமெரிக்காவில், டிரமான்ட் நகரில் வசிப்பவர் கால்நடை டாக்டர் டொன்னா சாஸ்மன். இவர், ஒரு நாள், ஒரு பண்ணைக்கு செல்லும் போது, இந்த அதிசய பூனையைப் பார்த்தார்; அவ ராலேயே நம்ப முடியவில்லை. அந்த பூனை, மிகவும் சிறியதாக இருந்தது. உள்ளங்கை அளவு கூட அது இல்லை. "இந்த குட்டி பூனை பிறந்து, எத்தனை நாள் ஆகிறது?' என, அதன் உரிமையாளரிடம் கேட்டார். "இது குட்டி பூனை அல்ல;. இரண்டு ஆண்டுகள் ஆன பூனை. ஆனால், இதன் வளர்ச்சி இவ்வளவுதான். இதற்கு மேல் வளரவே இல்லை...' என்றார் அதன் உரிமையாளர்.
அந்த பூனையை தன் குட்ஷெப்பர்ட் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இது, சிறிய கண்ணாடி டம்ளருக்குள் அடங்கி விடுகிறது. அதன் மொத்த உயரமே, 6.1 அங்குலம் தான்; எடை இரண்டு கிலோ.
உள்ளங்கையில் பொம்மை போல் உட்கார்ந்து கொள்ளும் இந்த பூனை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், மிகச்சிறிய பூனை என்ற பெயரைப் பெற்று விட்டது. இப்போது, இந்த மருத்துவ மனையில் எல்லாரது பார்வையும் இந்த பூனை மேல் தான் உள்ளது.
எல்லா பூனைகளையும் போல நன்றாக ஓடியாடி விளையாடும் இந்த பூனை, நன்றாக சாப்பிடவும் செய்கிறது.
ஏன் இந்த பூனை மட்டும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என, ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
***

தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி

உயிர் காத்த சத்தியம்


இந்தப் புதிய தலைப்பிற்கான முதல் கதையை நமது பெரு மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளோம். 1931ஆம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றிய திரு கலாம் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவருடைய அரும்பெரும் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு `பாரத ரத்னா' பட்டம் தந்து சிறப்பித்தது. 2002ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று, அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி, சத்தியத்தின் மதிப்பைப் பற்றி நமக்கு ஓர் கதையை அனுப்பியுள்ள திரு அப்துல் கலாம் அவர்களுக்கு சந்தமாமா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் அப்துல் காதர் அல்கிலானியின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது! அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, ஒருநாள், அவர் புல்வெளியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று அவரை நோக்கி, "நாங்கள் மேயும் இடத்தில் உனக்கு என்ன வேலை? இப்படி சோம்பேறியாக உட்கார்ந்து பொழுதுபோக்க உன்னைப் படைக்கவில்லை!" என்று கூறியதைக் கேட்டதும், பயந்துபோன அவர் தன் வீட்டிற்கு ஓடிச் சென்று தன் வீட்டின் மாடிக்குச் சென்றார். அங்கிருந்து கீழ் பார்க்கும்போது, ஹஜ் பயணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஏராளமான பயணிகளைக் கண்டார்.
அதைக்கண்ட அப்துல் கீழே வந்து, தன் தாயிடம் ஹஜ் பயணத்தைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டு விவரங்களைத் தெரிந்து கொண்டார். உடனே, தானும் ஹஜ் செல்ல விரும்புவதாகத் தாயிடம் கூறி அனுமதியும் பெற்றுக் கொண்டார். அப்துலின் தந்தை அவருக்காக விட்டுச் சென்ற நாற்பது பொற்காசுகளை பயணத்தின் பொருட்டுக் கொடுக்க நினைத்த அப்துலின் தாய், அவற்றை அவனுடைய சட்டையின் உட்புறம் ஒரு பையில் வைத்து சட்டையோடு சேர்த்து ஊசி, நூல் கொண்டு பத்திரமாகத் தைத்து விட்டார். பிறகு, அப்துலுக்கு விடை கொடுத்த அவர் தாய், "மகனே! புனிதப் பயணம் சென்று வா! அல்லாவின் பொருட்டு, உன்னை இப்போது என்னிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதிக்கிறேன். இனி உன்னை எப்போது காண்பேன் என்று தெரியாது. உனக்கு இப்போது நான் கூறும் அறிவுரையை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்! எப்போதும் சத்தியத்தையே பேசு! சத்திய வழியிலேயே நட! உன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சத்தியத்தைக் கை விடாதே!" என்றாள். தன் தாயிடம் விடைப்பெற்றுக் கொண்ட அப்துல் காதர், ஏற்கெனவே ஹஜ் பயணம் சென்று கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து கொண்டார். துர்பாக்கியவசமாக, பயணிகளை கொள்ளைக்காரர்கள் வழிமறித்து கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

அப்துல் காதரை நோக்கி அவர்களில் ஒருவன், "உன்னைப் பார்த்தால் பரம ஏழையாகத் தோன்றுகிறது. உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்க, அப்துல், "என் தாய் கொடுத்த நாற்பது பொற்காசுகள் என் சட்டையின் உட்புறப் பையில் உள்ளன!" என்று உண்மையைக் கூறினார்.
பரம ஏழையாகத் தோன்றிய அப்துல் பொய் சொல்கிறார் என்று அந்தக் கொள்ளைக்காரன் அவரை ஒன்றும் செய்யாமல் செல்ல, மற்றொருக் கொள்ளைக்காரன் அவரை அணுக, அவனிடமும் அப்துல் உண்மையையே கூறினார். அந்தக் கொள்ளைக்காரனும் அவர் சொல்வதை நம்பவில்லை. இறுதியில், கொள்ளைக்காரர்கள் அப்துலைத் தங்கள் தலைவன் முன் நிறுத்தி, "இவன் பரம ஏழையாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாகச் சொல்கிறான். மற்ற எல்லாரையும் கொள்ளையடித்து விட்டோம். இவன் சொல்வது பொய் என்று தோன்றுவதால், இவனை விட்டுவிட்டோம்!" என்றனர்.
தலைவன் அவரிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அவர் மீண்டும் அதே பதிலையேக் கூறினார். தலைவன் அவரைச் சோதனையிட, நாற்பது பொற்காசுகள் அகப்பட்டன. ஆச்சரியமடைந்த தலைவன் அவரிடம் உண்மையைக் கூறியதன் காரணத்தை வினவ, அதற்கு அப்துல், "உயிர் போனாலும் சத்தியத்திலிருந்து தவறக் கூடாது என்ற என் தாயின் வேண்டுகோளுக்கிணங்கி நான் உண்மையையேக் கூறினேன். கேவலம் நாற்பது பொற்காசுகளுக்காக நான் அவளுக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற விரும்பவில்லை!" என்றான்.
அவருடைய சொற்களைக் கேட்டு கொள்ளையர் தலைவன், "நீ உன்னுடைய தாயின் சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்டு சத்திய வழியில் நடந்தாய்! ஆனால் நாங்களோ எங்கள் பெற்றோரின் நம்பிக்கையை சிதைத்து, அவர்களுக்கும், அல்லாவிற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இனிமேல், நீதான் எங்கள் குருவாக இருந்து, எங்களை சத்திய வழியில் நடத்திச் செல்ல வேண்டும்!" என்று கூறினான். அதற்குபின் அவர்கள் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு நேர் வழியில் நடக்கத் தொடங்கினர்.
அந்த நிகழ்ச்சிதான் ஷேக் அப்துல் காதர் அல்கிலானி என்ற மகான் தோன்ற வித்திட்டது.

அசுரனைத் துரத்திய அதிமேதாவிகள்

ஒரு கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் மோயித்திரா என்பவன் பிறவியிலிருந்தே குருடன். மற்றவனான புக்கான் பிறவியில்இருந்து நோண்டி. அவர்கள் அடிக்கடி கிராமத்து ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கதை பேசுவதுண்டு.

ஒரு சமயம் அந்த கிராமத்தில் பிஹு பண்டிகை கொண்டாடப்பட்டது. கிராமம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அமர்க்களப் பட்டது. ஆனால் நண்பர்கள் புக்காலும் மோயித்திராவும் அந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் நிகழ்ச்சிகளை ரசிக்க ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி குருடனான மோயித்திரா தன் தோளில் நோண்டியான புக்கானைத் தூக்கிக் கொண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றான். தான் கண்ணால் காண்பதையெல்லாம் புக்கான் மோயித்திராவுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர்களாலும் நிகழ்ச்சிகளை ரசிக்க முடிந்தது.

பண்டிகை முடிந்த பிறகும் கூட, அவர்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தனர். இதனால் தங்களுடைய உடல் குறைபாடுகளை ஓரளவு மறந்து விட்டனர் என்றே சொல்லலாம. ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மோயித்திரா புக்கானை நோக்கி, "நாம் எவ்வளவு நாட்கள்தான் இவ்வாறு வீணே காலத்தை கழிப்பது? நாம் இந்த கிராமத்தை விட்டு எங்காவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்வோம்" என்றான். "மோயித்திரா இந்த கிராமத்திற்குள் சுற்றி வருவது சுலபம். ஆனால் இங்கிருந்து பக்கத்து நகரத்திற்கெல்லாம் என்னைத் தூக்கிக் கொண்டு செல்ல உன்னால் முடியுமா?" என்று புக்கான் கேட்டான்.

அதற்கு மோயித்திரா," பரவாயில்லை நடக்க முடியும் வரை உன்னை சுமப்பேன். நடுநடுவில் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆகவே நாம் நகரத்திற்குச் செல்வோம் வா" என்று கூறினான்.


இவ்வாறு தீர்மானித்தபின், மறுநாள் இருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிவிட்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினர். மோயித்திரா புக்கானைத் தோளில் சுமந்து கொள்ள புக்கான் செல்லும் வழியில் தான் காணும் காட்சிகளை எல்லாம் தன் நண்பனுக்கு விவரித்துக் கொண்டே சென்றான். அவ்வாறு செல்லுகையில் வழியில் ஓரிடத்தில் சாலையோரம் ஒரு மத்தளம் தென்பட்டது. அதைப்பார்த்த புக்கான், அதை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

வழியில் ஒரு கிணற்றில் நீர் எடுத்துப் பருகி இருவரும் இளைப்பாறினார்கள். அங்கு கிணற்றடியில் ஒரு கயிறு தென்பட்டது. இதுவும் நமக்குப் பயன்படும் என்று கருதிய நண்பர்கள் அதையும் எடுத்துக் கொண்டனர். கொஞ்சதூரம் சென்றவுடன் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் அமர்ந்து இருவரும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அவர்களை நோக்கி ஓர் ஆமை ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த புக்கான் "நண்பா, ஓர் ஆமை நம்மை நோக்கி வருகிறது. அதையும் எடுத்துக் கொள்வோமா?" என்று கேட்டுவிட்டு, அந்த ஆமையையும் அவன் எடுத்துக் கொண்டான்.

இப்படி நாள் முழுதும் சென்று கொண்டிருந்த நண்பர்கள் இறுதியில் மாலை நேரம் வந்ததும், இரவு தங்குவதற்குத் தகுந்த இடத்தைத் தேடினார்கள். மோயித்திராவின் தோளில் அமர்ந்திருந்த புக்கான் கண்களில் ஒரு வீடு சற்றுத் தொலைவில் தென்பட்டது. இரவு அங்கு தங்கி விடலாம் என எண்ணி, இருவரும் அந்த வீட்டுக்குச் சென்றனர்.
அந்த வீட்டுக்குள் நுழைந்த நண்பர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிலிருந்த ஓர் அறையில் கோரமான உருவத்துடன் ஓர் அசுரன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு நடுங்கிய இருவரும் சுற்றுமுற்றும் வேறு ஏதாவது வீடு தென்படுகிறதா என்று பார்த்தனர். எங்கும் எதுவும் தென்படாததால், அந்த அசுரன் உள்ள வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போயிற்று.


முன்னெச்சரிக்கையாக அசுரன் படுத்துறங்கிய அறையின் கதவை வெளிப்புறம் தாழிட்டு விட்டு, நண்பர்கள் மற்றோர் அறையின் உள்ளே சென்று அதை உட்புறம் தாழிட்டுக் கொண்டனர். அந்த அறையில் ஏராளமான உணவுப் பண்டங்களைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடள் வயிறார அவற்றை உண்டனர். அசுரன் விழித்தெழுந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு திட்டமும் தயார் செய்தனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த மத்தளம் தற்செயலாகத் தரையில் உருண்டு விழ, அந்த சத்தத்தில் அசுரன் விழித்துக் கொண்டான். தான் வெளியில் செல்ல முடியாமல் தன் அறைக்கதவு வெளியில் தாளிடப் பட்டுள்ளதை அறிந்தவுடன், அசுரன் கொதித்தெழுந்தான். "யாரடா என் அறைக் கதவை தாளிட்டது? கதவைத் திற" என்று பெரிய குரலில் கத்தினான்.

நண்பர்கள் முன்னமே திட்டமிட்டபடி மத்தளத்தை பலமாகக் கொட்டினார்கள். அந்த ஒலியைக் கேட்டுத் துணுக்குற்ற அசுரன் "யார் நீ?" என்று கத்தினான். உடனே மோயித்திரா கட்டைக் குரலில் "நீ யாரென்று முதலில் சொல்" என்று உரக்கக் கத்தினான். "நான் அசுரன். ஆமாம் நீ யார்?" என்று அசுரன் கேட்க. "நான் அசுரர்களின் தலைவன்" என்று மோயித்திரா பதிலுக்குக் கத்தினான். அதைக் கேட்டு திடுக்கிட்ட அசுரன் "இல்லை, நீ பொய் சொல்கிறாய். வெளியில் வா" என்றான்.

"நீ தான் பொய் சொல்கிறாய். நீ அசுரன் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று மோயித்திரா பயப்படாமல் கேட்க, அசுரன் தன் தலைமுடி ஒன்றைப் பிய்த்து ஜன்னல் வழியே வீசினான். "பார் என் முடியை எவ்வளவு பருமனாகஇருக்கிறது என்று! இப்போது சொல்" என்றான் அசுரன்.

உடனே மோயித்திரா தாங்கள் கொண்டு வந்த கயிற்றை அசுரன் பக்கம் வீசி எறிந்து "என்னுடைய முடியைப் பார்" என்று சவால் விட்டான். அதைக் கயிறு என்று அறியாத அசுரன் உண்மையாகவே பயந்து போனான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, தன் தலை முடியிலிருந்து ஒரு பேனை எடுத்துத் தூக்கி எறிந்தான். "தவளை அளவு பெரிதான என் தலைப் பேனைப்பார்" என்று அசுரன் வால் விட்டான். "ஹாஹ்ஹா" என்று சிரித்த மோயித்திரா" இதுதான் உன் பேனா! என்னுடைய தலையிலுள்ள பேனைப்பார்" என்று ஆமையைத் தூக்கி அசுரனிடம் எறிந்தான். ஆமையைப் பார்த்த அசுரன் கதி கலங்கி விட்டான்.


உண்மையிலேயே வெளியில் உள்ளவன் பெரிய அசுரன் என்ற தப்புக் கணக்குப் போட்ட அசுரன் "ஐயா, நீங்கள் பெரிய அசுரன் என்று ஒப்புக் கொள்கிறேன். கதவைத் திறவுங்கள். நாம் இருவரும் நண்பர்கள் ஆகலாம்" என்று சமாதானமாகப் பேசினான்.

"தாராளமாகக் கதவைத் திறக்கிறேன். வெளியில் வா. எனக்கு ஒரே பசி. நீ வெளியில் வந்ததும் உன்னை கடித்துக் குதறித் தின்னப் போகிறேன்" என்று மோயித்திரா சொன்னதும் அசுரன் பெருத்த அதிர்ச்சி அடைந்தான். மோயித்திரா புக்கானின் உதவியுடன் சத்தமின்றி அசுரன் அறைக் கதவுத் தாழ்ப்பாளை நீக்கி விட, இருவரும் ஒளிந்து கொண்டனர். இதற்குள் அசுரன் தன் அறைக் கதவை இலேசாகத் திறக்க முயற்சி செய்ய கதவு உடனே திறந்து கொண்டது. மெதுவாக வெளியில் எட்டிப்பார்த்த அசுரன் கண்களில் யாரும் தென் படாததால் தப்பித்தேன் பிழைத்தேன் என்று அந்த வீட்டை விட்டு ஒரே ஓட்டம் பிடித்து விட்டான்.

பிறகு இரு நண்பர்களும் தைரியமாக வெளியே வந்து, அசுரனுடைய உடமைகளை ஆராய்ச்சி செய்தனர். அவனிடம் இருந்த ஏராளமான பணம், காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். அசுரன் வைத்திருந்த தைலங்களில் ஒன்றை தன் கண்களில் தடவ, மோயித்திராவுக்குக் கண் பார்வை திரும்பி விட்டது. மற்றொரு தைலத்தைத் தன் கால்களில் தடவ, புக்கானுக்குக் கால்கள் சரியாகி விட்டன. இருவரும் அசுரனிடம்இருந்த பணம், காசு, உணவுப் பொருட்கள், தைலங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தங்கள் கிராமத்திற்கேத் திரும்பி விட்டனர். அதன்பிறகு தாங்கள் கொண்டு வந்தப் பணத்தைக் கொண்டு சுக வாழ்வு வாழத் தொடங்கினர்.

Thursday, May 19, 2011

தெய்வம் வாழ்வது எங்கே.......



வானம்.. வானம்..

தெய்வம் வாழ்வது எங்கே, தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

தெய்வம் வாழ்வது எங்கே, தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
காதலினால் மூடிவிட்ட, கண்கள் இன்று திறக்கிறது..
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

அடுத்தவன் கண்ணில் இன்பம்.. காண்பதும் காதல் தான்..
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
தனக்காக வாழாத வழக்கை..
விதி ஈரமற்று தந்த போக்கை..
இவன் பாவம் கங்கையில் தீர..
இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..

நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
நாளும்.. நாளும்..