நி - நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
- நித்திய கண்டம் பூரண ஆயிசு.
- நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
- நித்திரை சுகம் அறியாது.
- நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
- நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
- நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
நீ
- நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
- நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
- நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
- நீர் மேல் எழுத்து போல்.
- நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
- நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
நு
- நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
நூ
- நூல் கற்றவனே மேலவன்.
- நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
- நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை.
- நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
- நூற்றைக் கொடுத்தது குறுணி.
1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.
அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.
2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்
உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.
3. இன்று விருந்து நாளை உபவாசம்
இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.
4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு
கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய்.
மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.
6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.
எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது.
7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே.
பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.
8. வாழை வாழ வைக்கும்:
வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.
9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை:
உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.
10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.
11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு
உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.
12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்:
திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது.
13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு:
பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.
14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை.
கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு.நன்றி குமுதம்
தா
- தான் திருடன் பிறரை நம்பான்.
து
- துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
- துள்ளற மாடு பொதி சுமக்காது.
தொ
- தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்.
ந
- நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
- நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
- நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
- நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
- நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
- நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
- நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
- நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
- நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
- நயத்திலாகிறது பயத்திலாகாது.
- நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
- நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
- நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
- நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
- நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
- நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
- நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
- நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
- நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
சோ
- சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
- சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
- சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
த
- தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
- தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
- தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
- தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
- தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
- தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
- தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
- தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
- தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
- தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- தருமம் தலைகாக்கும்.
- தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
- தலை இருக்க வால் ஆடலாமா ?
- தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
- தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
- தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
- தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
- தவளை தன் வாயாற் கெடும்.
- தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
- தனிமரம் தோப்பாகுமா?
சை - சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
சொ
- சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
- சொல் அம்போ வில் அம்போ?
- சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
- சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
- சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
- சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
- சொல்வல்லவனை வெல்லல் அரிது.
- சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
- சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
- சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
சே - சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
- சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
- சேற்றிலே செந்தாமரை போல.
சூ - சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
செ - செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
- செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
- செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
- செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
- செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
- செயவன திருந்தச் செய்.
- செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
- செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
- செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
- சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
சி - சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது.
சு - சுக துக்கம் சுழல் சக்கரம்.
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
- சுட்ட சட்டி அறியுமா சுவை.
- சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
- சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
- சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
- சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
- சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
- சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
- சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
- சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
- சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
- சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
சா - சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
- சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
- சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
- சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
- சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
- சாண் ஏற முழம் சறுக்கிறது.
- சாது மிரண்டால் காடு கொள்ளாது.
- சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
- சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
- சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
ச
- சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
- சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
- சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
- சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
- சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
- சர்க்கரை என்றால் தித்திக்குமா?
கோ
- கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
- கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
- கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
- கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
- கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
- கோபம் சண்டாளம்.
- கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
- கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
- கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
- கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
- கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
- கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
கொ - கொடிக்கு காய் கனமா?
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
- கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
- கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
- கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
- கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
- கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
- கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
- கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
- கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கை
- கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
- கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
- கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
- கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
- கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
- கையிலே காசு வாயிலே தோசை
- கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
- கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
- கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
கே - கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
- கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
- கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
- கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
கெ
- கெடுக்கினும் கல்வி கேடுபடாது
- கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
- கெடுவான் கேடு நினைப்பான்
- கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
- கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
- கெட்டும் பட்டணம் சேர்
- கெண்டையைப் போட்டு வராலை இழு.
- கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
- கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
கூ - கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
- கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
- கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
- கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கு - குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
- குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
- குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
- குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
- குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.
- குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
- குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
- குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
- குணத்தை மாற்றக் குருவில்லை.
- குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
- குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
- குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
- குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
- குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
- குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
- குப்பை உயரும் கோபுரம் தாழும்.
- குமர் தனியப் போனாலும் கொட்டாவி தனியப் போகாது.
- குரங்கின் கைப் பூமாலை.
- குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
- குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
- குரு குசு விட்டால் குற்றமில்லை.
- குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
- குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
- குரைக்கிற நாய் கடிக்காது.
- குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
- குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
- குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
- குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
- குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
- குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
- குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
- குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
- குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
- கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
கீ
- கீர்த்தியால் பசி தீருமா?
- கீரை மசிச்ச சட்டியிலே ரசம் வச்சமாதிரி.
- கீறி ஆற்றினால் புண் ஆறும்.
கி - கிட்டாதாயின் வெட்டென மற.
- கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை.
- கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
- கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கா - காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
- காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
- காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
- காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
- காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
- காணி ஆசை கோடி கேடு.
- காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
- காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
- காப்பு சொல்லும் கை மெலிவை.
- காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
- காய்த்த மரம் கல் அடிபடும்.
- காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
- காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
- காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
- கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
- காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
- காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
- காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
- காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
- காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
- காற்றில்லாமல் தூசி பறக்குமா?
- காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
- காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.