Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, December 15, 2011

ஆதர்அடையாள அட்டை


http://appointments.uidai.gov.in/



இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது.



தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab) மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.



உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம்.



ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும்.

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள்.



இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்.



Tuesday, December 6, 2011

கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!

`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை’ என்பது கிராமத்துப் பழமொழி. இதற்கு மாறாக சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு பலரது வாழ்க்கை நிலை உள்ளது.

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும்… கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டி ருப்பார்கள்.

சிக்னமாக வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்?

* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்களால் வீட்டில் உள்ள துணிகளைத் துவைத்து விட முடியும் என்றால், வாஷிங்மெஷின் தேவையில்லைதான். பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்களே அதனால் நாமும் வாங்கி விடுவோம் என்ற வீண் பகட்டுக்காக ஒருபோதும் வாங்காதீர்கள். அதுபோல கையினால் துவைத்து விடக்கூடிய ஒன்றிரெண்டு துணிகளுக்காக வாஷிங் மிஷினை பயன் படுத்தாதீர்கள். மின்சார செலவு எக்கச்சக்கமாகிவிடும். உங்கள் உடல் உழைப்பும் குறைந்து போகும்.

* கூடுமானவரை ஒன்றிரெண்டு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் `யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை வாங்கப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, முகச்சவரம் செய்யக் கூடிய ரேசர், எழுத உதவும் பால் பாயிண்ட் பேனா வகைகள். இவை விலை குறைவு. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஏன்?

* நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கு படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் ஒரே நேரத்தில் எல்லாப் புத்தகங்ளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

* உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப் பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

* உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வண்ணக் காகிதங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு யாருக்காவது நீங்கள் பரிசு கொடுக்க நேரும்போது பரிசுப்பொருள் மீது அந்த வண்ணக்காகிதத்தை சுற்றி கொடுக்கலாம்.

* கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

* ரீ-சார்ஜபிள் பேட்டரியோடு, அதை ரீ-சார்ஜ் செய்யும் கருவியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பேட்டரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

* மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

* உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

* மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.

* நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி சார்ஜர், லைட் போன்றவற்றை வழங்குங்கள். அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி-தினத்தந்தி

இதயம் காக்கும் `சூப்பர் புராக்கோலி’!




`புராக்கோலி’ என்பது ஒரு மேலைநாட்டுக் காய்கறி வகை. தற்போது நம்மூர் குளுகுளு காய்கறி அங்காடிகளிலும் கிடைக்கிறது.

இதுதொடர்பான ஓர் இன்ப அதிர்ச்சியான விஷயம், இதயநோய், புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஒரு `சூப்பர் புராக்கோலி’யை உருவாக்கியிருப்பதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கியுள்ள புதிய புராக்கோலி, வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ளது என்கிறார் கள்.

இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகித்த ரிச்சர்ட் மிதன் கூறும்போது, “ஆரோக்கியம் காப்பதில் இது போன்ற காய்கறிகளின் பங்கு குறித்த புதிய தெளிவை எங்கள் ஆய்வு வழங்கியிருக்கிறது. இதன்மூலம், நாமë அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-தினத்தந்தி

செல்போன்- சில டிப்ஸ்கள்




ன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?

***

பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.

***

`புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.

***

தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.

***

`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.

***

பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.

***

ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.

***

தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!

***

வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.

***

நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

அழுவதாலும் நன்மை உண்டு!





கண்ணீர் விடுவதை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மை. ஆனால் உணர்ச்சிகளின் உச்சத்தில், அது சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் கண்ணீர் கரை மீறுகிறது.

மனம் விட்டுக் கண்ணீர் சிந்தி அழுவதால் நன்மை உண்டு, மனதில் புதைந்திருக்கும் சோகம், பாரத்தை அது கரைக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், கண்ணீரால் விளையும் ஒரு புதிய நன்மையைக் கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.

அதாவது, கண்ணீர் விட்டு அழுவது ஒருவரின் சுய கவுரவத்துக்கு ஊக்கம் அளிக்கிறது, மனரீதியாக ஒரு தயார் நிலைக்கு உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர் கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம்- புலூமிங்டனை சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இதுகுறித்து ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள், கல்லூரி அளவிலான கால்பந்து போட்டிகளில் தோல்வியுறும்போது கலங்காத `உறுதியான’ மாணவர்களை விட, உடனடியாகக் கண்ணீர் சிந்தும் மாணவர்களுக்கு சுய கவுரவத்தின் அளவு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆய்வாளர்கள் மேலும் கூறும்போது, சகஅணி வீரர்களுடன் தொட்டுத் தழுவிப் பழகும் நெருக்கமான வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கால்பந்து வீரர்கள் களத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, கண்ணீர் சிந்துவது போன்றவை ஆட்டத்தில் எவ்வாறு தாக் கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் இந்த ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர்.

இதுதொடர்பாக, 150 கல்லூரி கால்பந்து வீரர்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம், அழுகைக்கான வெவ்வேறு சூழ்நிலைகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டு, அவை தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன.

இந்த ஆய்வில் இறுதியாகத் தெரியவந்திருக்கும் விவரம், உணர்ச்சிகளை அடக்கி வைத்திருப்பதை விட அதை கண்ணீர் போன்ற வழிகளில் வெளிப்படுத்திவிடுவது நன்மை பயக்கும் என்பதே!

காந்தத்தின் மூலம் ஒருவரை உண்மை பேச வைக்கலாம்!




காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் கறக்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள்.

நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள `டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார்டெக்ஸ்’ என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள். இப்பகுதியின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி



உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன்என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். ஏன்?

இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள். கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள்.

இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகிவிட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை. டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது. ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்!

சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக் கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும். பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது. அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.

ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம். அதனால் உடலுக்குள் எண்ணை அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..

* உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

* மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

* முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

* தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

* அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

* இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலு டன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது. மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக் கான அடையாளங்கள். திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.

இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும்.

முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

விளக்கம்: டாக்டர் டி. காமராஜ்,

(பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை.

நன்றி-தினத்தந்தி

Wednesday, November 23, 2011

வாஷிங் மெஷின்






இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?

வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.

இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப் பொறுத்து சுழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.

வாஷிங் மெஷினின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சிக்னலை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர்மட்டத்தில் உள்ள காற்றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது. பிறகு மைக்ரோ சுவிட்சு மூலம் தடுக்கப்பட்டு, மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க், சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும், பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க, குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.

சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய, காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மாக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும்போது கதவு மூடும்.

வேலை முடிந்ததும் ஆட்டோமேட்டிக்காக கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்றவை சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்கின்றன. அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.

நமது உடம்பு ஓர் அதிசயம்!




எது எதுவோ அதிசயம் என்று பேசுகிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் பிறக்கும்போது நமது உடலில் 270 எலும்புகள் அமைந்திருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றில் 64 எலும்புகள் காணாமல் போய்விடுகின்றன. மனிதன் முதுமைப் பருவமடைந்து இறக்கும்போது 206 எலும்புகளே
எஞ்சியிருக்கின்றன. குறிப்பிட்ட எலும்புகள் எப்படிக் காணாமல் போகின்றன? அவை மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடுகின்றன.

நமது உடம்பில் தேவைக்கேற்ப மின்சாரமும் உள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு 25 வாட் மின்சார விளக்கை எரியவிடலாம். அல்லது நான்கு கெட்டில்கள் நிறையத் தண்ணீரைக் கொதிக்க விடலாம்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 52 டன் எடையுள்ள உணவை உண்கிறான். 19 ஆயிரம் காலன் திரவங்களை அருந்துகிறான்.

நன்றி - senthilvayal.wordpress

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!

வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.

கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது.

மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.

பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

உற்சாக ரசாயனம்

உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

மனசே ரிலாக்ஸ்

தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியே வழி

கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

Thursday, October 13, 2011

ரத்ததானம்



த்தமும், தசையும், எலும்பும் சேர்ந்ததுதான் உடல். ரத்த ஓட்டம்தான் உடலியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்தஓட்டம் தடைபடுவதால் தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பக்கவாதமும், தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பட்டால் புண்களும் வந்துவிடும். ரத்த ஓட்டம் இல்லாமல் எந்த ஜீவராசிகளும் கிடையாது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எந்த வியாதியும் கிடையாது.

***

த்தம் உடல் முழுவதும் ஓடுகிறது என்பதே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி. அதன்பிறகு தான் ரத்தத்தின் வழியாக மருந்துகளை செலுத்தினால் உடலின் எந்த பாகத்திற்கான வியாதியும் குணமடையும் என்பதே அறியப்பட்டது. ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் அணுக்களையும், திரவ பிளாஸ்மாவையும் கொண்டது. வெள்ளையணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் காரணம். இது ஒரு புரதப்பொருளாகும். இதுதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பெற்று திசுக்களுக்கு வழங்குகிறது.

***

டலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் `பம்ப்` செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதயம் ஒரு நிமிஷத்துக்கு 5 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்து எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. அவ்வளவு வேகத்தில் மருந்து ரத்தத்தின் வழியே கடத்தப்படுவதால்தான் மாத்திரை சாப்பிட்டவுடன் நோயின் தாக்கம் உடனடியாக குறைந்ததுபோல உணர முடிகிறது.

***

த்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜன் ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு நுரையீரலுக்கு எடுத்து வரப்பட்டு மூக்கு வழியே வெளியேற்றப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிஜன் எனும் புரதத்தின் தன்மைக்கேற்ப ரத்தங்களை வகைப்படுத்துகிறார்கள். அதன்படி `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` என 4 குரூப் ரத்தம் உள்ளன. இது தவிர ஏ1, ஏ2 என்ற உப `குரூப்`களும் ரத்தத்தில் உண்டு. `ஓ` பிரிவு ரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கலாம். அதனால்தான் அவர்களை “யுனிவர்சல் டோனர்` என்று அழைப்பதுண்டு.

***

த்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பல வியாதிகள் வந்துவிடும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை வியாதி ஏற்படும். இதனால் ரத்தம் இளஞ்சிவப்பாக மாறிவிடும். பசி குறையும், சோர்வு ஏற்படும், மூச்சிறைக்கும். நோய் முற்றிவிட்டால் நாக்கு வெளிறி விடும். நகங்கள் அடிக்கடி உடையும். ரத்த சிவப்பணுக்களை உடலில் செலுத்தி இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பார்கள். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம். கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். அசைவ உணவிலுள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் கிரகிக்கப்படுகிறது.

***

த்தசோகை ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதிக ரத்தத்தை இழக்கிறார்கள். கர்ப்பமாய் இருக்கும்போது கருவிலுள்ள சிசுவுக்கு ரத்தத்தின் வழியே உணவு கடத்தப்படுகிறது. பிரசவ நேரத்திலும் பெண்கள் ரத்தம் இழக்கிறார்கள். எனவே பெண்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு உடலை நல்ல தகுதியுடன் வைத்திருந்தால் மட்டுமே ரத்த சோகையை தவிர்க்க முடியும். பாதிப்பு உடையவர்களுக்கு சத்து மாத்திரைகள், மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவசியமற்ற நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளை விழுங்கி வருவது பயன் தராது. அதேநேரம் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

***

ம் நாட்டில் ஏறக் குறைய 50 சதவீதம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ரத்தசோகை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் எளிதில் களைப்படைவதால் உழைப்பு, உற்பத்தி எல்லாமே பாதிக்கப்படும். இது நாட்டிற்கு பெரிய நஷ்டம். இதைத் தடுக்க அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதைவிட இரும்புச்சத்து நிறைந்த உப்பை சமையலில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இரும்புச்சத்துள்ள உப்பு சேர்ப்பது மருந்து மாத்திரைகளை விட நல்லது. பக்க விளைவற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது சாதா உப்பிற்குப் பதில் இரும்புச்சத்து நிறைந்த உப்பு உபயோகிக்கப் பழகுங்கள்.

***

த்த பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க இன்னொரு வியாதி தாலசீமியா. இதுவும் ரத்த இழப்பால் ஏற்படும் வியாதி தான். இதற்கு அவ்வப்போது போதுமான ரத்தம் வழங்கிக் கொண்டிருந்தால்தான் பாதிக்கப்பட்டவர் பிழைக்க முடியும். வாழ்நாள் முழுவதும் மாதம் ஒரு முறை ரத்ததானம் பெற்று வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதேபோல பெரிய அறுவைச் சிகிச்சைகள் முதல், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வரை பலதரப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைக்க ரத்தம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் போதிய ரத்தம் கிடைக்காததால் ஏராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள்.

***

ருத்துவ சிகிச்சைக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி யூனிட்டுக்கு மேல் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் 20 சதவீத ரத்தம் அவசர சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தானமாக கிடைக்கும் ரத்தம் குறைவாகத்தான் இருக்கிறது. உடற்தகுதி உடையவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் கொடுத்தாலே ரத்த தேவை பூர்த்தியாகி விடும் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. 18 முதல் 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். எய்ட்ஸ், சிறுநீரக நோய், வலிப்பு நோய் உள்ளவர்கள் தவிர உடல் எடை 45 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் சதவீதமும், ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு இருப்பதும் அவசியம்.

***

ரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். ரத்ததானம் செய்வதால் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்பது கட்டுக்கதை. ரத்ததானம் செய்தால் புதிய ரத்தம் ஊறத் தொடங்கும் என்பது தான் உண்மை. இதனால் நமது உற்சாகமும், உடல்நலமும் கூடும். நண்பர்கள், உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது மட்டும் அவசர அவசரமாக ரத்தத்தை தேடி அலையும் நிலை மாற, தகுதி உடையவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம்.

C£yz¥ TP• ‘zeh• LÖ–WÖ!

NÖRÖWQ LÖ–WÖeL[Ö¥ S¥X ÙY¸oN• C£‹RÖ¥RÖÁ “ÛLTP• G|eL ˜z•. ÙY¸oN–Á½ C£yz¥ TP• ‘zTR¼h AR¼ÙLÁ¿ E·[ «ÚNc LÖ–WÖÛY†RÖÁ TVÁT|†R ÚY|•. A‰ `ALopY“ LÖ–WÖ' (Infrared camera) G]T|f\‰.

J£ ÙTÖ£¸Á —‰ ÙYªÚY¿ A[«¥ T|• J¸ÛV•, ŒZÛX• NÖRÖWQ LÖ–WÖ TPUÖehf\‰.

h•–£yz¥ NÖRÖWQ LÖ–WÖÛY ÙLց| TP• G|eL ˜zVÖ‰. B]Ö¥ C£yz¥ ÙTÖ£·L· ALopY“e L‡Ÿ Yz«¥ ÙYT†ÛR ÙY¸›|fÁ\]. ALopY“e LÖ–WÖ AÛR TPUÖehf\‰. C£yz¥ E·[ J£ ÙTÖ£¸¥ C£‹‰ ÙY¸T|• ÙYTNe‡† ‰„ehLÛ[e fWfeL ÚY|• GÁTR¼LÖL R¼ÚTÖ‰·[ `CW° LÖ–WÖ'eL¸Á ˜efV Th‡LÛ[ h¸Ÿ ŒÛX›¥ ÛY†‡£eL ÚYz·[‰. ÙYTNe‡† ‰„ehL· CeLÖ–WÖ«]Ö¥ fWfeLTy| –ÁNÖWUÖL UÖ¼\T|fÁ\].

CjfXÖ‹ÛRo ÚNŸ‹R `‘Ù[Íp' GÁ\ Œ¿Y]• E£YÖef›£eh• `CW° LÖ–WÖ', ÚY¿«R ÙRÖ³¥îyT†‡Á AzTÛP›¥ ÙNV¥T|f\‰.

C‹R LÖ–WÖ«¥ CP•ÙT¼¿·[ ÙXÁÍ rUÖŸ 10 B›W• V ÙN¥L[Ö¥ B]‰. B]Ö¥ C‰ ÙYT†RÖ¥ H¼T|f\ UÖ¿R¥LÛ[†RÖÁ L|Q£•. G]ÚY h¸Ÿ«eL ÚYzV AYpV–¥ÛX.

ÙYT A[«¥ AÛW zf¡ ÙN¥pVÍ UÖ¿R¥ H¼TyPÖ¨• CeLÖ–WÖ«]Ö¥ L|QW ˜z•. CRÁ ™X• G|eh• TPjL·, R¼ÚTÖ‰ C£yz¥ TPÙU|eL TVÁT|• LÖ–WÖeL[Ö¥ G|eLT|• TPjLÛ[ «P† ÙR¸YÖL C£TRÖLe i\T| f\‰.

PÖePŸ Í{TÁ ÚTÖŸyP£• AYW‰ hµ«]£• 15 B| LÖX• TÖ|Ty| C“‡V LÖ–WÖÛY E£YÖef·[]Ÿ. C“‡V ALopY“e LÖ–WÖ, TÖ‰L֐“† ‰Û\›¥ ÙT¡‰• TVÁT|• GÁ¿ L£RT|f\‰.

‘.GÍ.G¥.«. WÖeÙLy YWXÖ¿

‘.GÍ.G¥.«. WÖeÙLy YWXÖ¿


‘.GÍ.G¥.«. WÖeÙLy ™X• C‰YÛW 26 ÙY¸SÖy| ÙNV¼ÛLÚLÖ·Lº•, 21 E·SÖy| ÙNV¼ÛLÚLÖ·Lº• AĐTTy|·[]. C‡¥, N‹‡WÛ] Bš° ÙNšV AĐTTyP N‹‡WVÖÁ-1 h½‘P†ReLRÖh•.

C‰YÛW E·SÖyz¥ RVÖ¡†‰ AĐTTyP ÙNV¼ÛLÚLÖ·Lº•, ARÁ «YW˜• Y£UÖ¿:-

1. ‘.GÍ.G¥.«. - 1993 ÙNP•TŸ 20 - ÚRÖ¥«

2. ‘.GÍ.G¥.«. - 1994 AeÚPÖTŸ 15 - ÙY¼½

3. ‘.GÍ.G¥.«. - 1996 UÖŸo 21 - ÙY¼½

4. ‘.GÍ.G¥.«. p-1 - 1997 ÙNP•TŸ 29 - ÙY¼½

5. ‘.GÍ.G¥.«. p-2 - 1999 ÚU 26 - ÙY¼½

6. ‘.GÍ.G¥.«. p-3 - 2001 AeÚPÖTŸ 22 - ÙY¼½

7. ‘.GÍ.G¥.«. p-4 - 2002 ÙNP•TŸ 12 - ÙY¼½

8. ‘.GÍ.G¥.«. p-5 - 2003 AeÚPÖTŸ 17 - ÙY¼½

9. ‘.GÍ.G¥.«. p-6 - 2005 ÚU 5 - ÙY¼½

10. ‘.GÍ.G¥.«. p-7 - 2007 ^]Y¡ 10 - ÙY¼½

11. ‘.GÍ.G¥.«. p-8 - 2007 HW¥ 23 - ÙY¼½

12. ‘.GÍ.G¥.«. p-10 - 2008 ^]Y¡ 21 - ÙY¼½

13. ‘.GÍ.G¥.«. p-9 - 2008 HW¥ 28 - ÙY¼½

14. ‘.GÍ.G¥.«. p-11 - 2008 AeÚPÖTŸ 22 - ÙY¼½

15. ‘.GÍ.G¥.«. p-12 - 2009 HW¥ 20 - ÙY¼½

16. ‘.GÍ.G¥.«. p-14 - 2009 ÙNP•TŸ 23 - ÙY¼½

17. ‘.GÍ.G¥.«. p-15 - 2010 ^ØÛX 12 - ÙY¼½

18. ‘.GÍ.G¥.«. p-16 - 2011 HW¥ 20 - ÙY¼½

19. ‘.GÍ.G¥.«. p-17- 2011 ^ØÛX 15 -ÙY¼½

Monday, October 10, 2011

துருவங்கள் ஒரே மாதிரியானவையா?




நம்மில் பலர், தென்துருவமான அண்டார்டிக்கும், வடதுருவமான ஆர்ட்டிக்கும் ஒன்று போல இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா?

தென்துருவம், அண்டார்டிகா என்ற நிலப்பகுதியால் ஆனது. வடதுருவப் பகுதியோ ஆர்ட்டிக் பெருங்கடலால் ஆன நீர்ப்பகுதி. இப்பெருங்கடலை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் முனைப் பகுதிகள் சூழ்ந்திருக்கின்றன. தென்துருவம் நிலம். வடதுருவம் நீர்.

வடதுருவப் பகுதியில் மனிதர்கள், விலங்குகள், சில தாவரங்கள் அப்பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வாழும் நிலை இருக்கிறது. தென்துருவப் பகுதியிலோ, நிலப் பகுதி விலங்குகள் எதுவுமே கிடையாது. அங்கேயே வாழும் மனிதர்களும் இல்லை. செடி, கொடிகள் என்றால் சிலவகைப் புற்கள், பாசிகள் மட்டும்தான்.

ஆனால் இப்பகுதியில் பெங்குவின் பறவைகள் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காரணம் அங்கு அவற்றுக்கு நிலத்தில் காணப்படும் எதிரிகள் கிடையாது.

தட்பவெப்பநிலை? தென்துருவத்தில் கடுங்கோடையிலும் வெப்பம் மிகக் குறைந்து குளிர் வாட்டி எடுக்கும். மழைக் காலத்திலோ கடும் பனிப்புயல் வீசிக்கொண்டேயிருக்கும்.

வடதுருவத்திலோ, கடற்பகுதியில் இருந்து காற்றலைகள் எழும்பி தட்பவெப்பத்தைச் சற்று மிதப்படுத்துகின்றன. தென்துருவத்தில் கடுங்கோடையிலும் தட்பவெப்பம் 0 டிகிரி அல்லது அதற்கும் கீழேதான். எப்போதாவது அபூர்வமாய் 30 முதல் 40 டிகிரி வரை ஏறுவதுண்டு. மழைக் காலத்தில் கேட்கவே வேண்டாம். வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரிக்கு கீழேதான்.

பாங்க் ஸ்டேட்மென்ட் என்றல் என்ன



வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்டை’ கேட்கிறார்கள். பாங்க் ஸ்டேட்மென்டில் என்ன இருக்கு? ஏன் அது கோரப்படுகிறது?

பின்வரும் விஷயங்களை அறிய உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்ட்’ உதவுகிறது:

1. நீங்கள் ஒரு சுயதொழில்முனைவோராக இருந்தால், உங்களின் பணப் பரிமாற்றத்தை அறிய உதவுகிறது. உங்களின் தொழில் செயல்பாடுகளின் வருமான அளவு என்ன என்பதை இதைக் கொண்டு தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

2. எந்த ஒரு நபரின் சேமிக்கும், செலவழிக்கும் முறையை அறியவும், சேமிப்புக் கணக்கில் சராசரியாகப் பராமரிக்கப்படும் நிலுவைத் தொகையை மேலோட்டமாகக் கவனித்தாலே போதும்.

3. நீங்கள் பிறருக்குக் கொடுத்த காசோலை உங்கள் வங்கியால் திருப்பி அனுப்பப்படும்போது, ஒரு சிறுதொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். அது உங்களின் `பாங்க் ஸ்டேட்மென்ட்’ மூலம் தெளிவாகத் தெரியும். பலமுறை `செக் ரிட்டர்ன்’ ஆகியிருப்பது தெரிந்தால், கடன் வழங்க யோசிப்பார்கள்.

4. நீங்கள் டெபாசிட் செய்த காசோலை, அதை வழங்கியவரின் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டாலும் உங்கள் `பாங்க் ஸ்டேட்மென்டில்’ தெரியும். அப்படி ஓராண்டுக்கு எத்தனை `செக் பவுன்ஸ்’களை ஏற்பது என்றும் வங்கிகள் வரையறை வைத்திருக்கின்றன.

5. ஏற்கனவே நீங்கள் வேறு வங்கிகள் அல்லது நிதிநிறுவனங்களுக்குச் செலுத்திவரும் மாதாந்திரத் தவணைகள் இந்த ஸ்டேட்மென்டில் தெரியும். புதிய கடனுக்கு, அவை குறித்த முழு விவரத்தையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

6. நீங்கள் செய்யும் முதலீடுகளும் பாங்க் ஸ்டேட்மென்ட் வழியாகப் பார்வைக்கு வரும். அது, புதிய கடனுக்கான அடிப்படைத் தொகையை (டவுன் பேமண்ட்) செலுத்தும் உங்களின் திறனையும், உங்களின் சேமிப்புப் பழக்கத்தையும் காட்டும்.

`மொபைல் பாங்கிங்’ பற்றித் தெரியுமா?


இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. `இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ்’ எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்
துள்ளது.

`மொபைல் பாங்கிங்’ வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம், ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.

உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.


தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.

`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல் பாங்கிங்’ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, September 23, 2011

காகிதமாகப் பயன்பட்ட பொருட்கள்!


தாவது ஒன்றில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. பண்டைய இந்தியாவில், வாழைப்பழத் தோல் முதல் பட்டைகள் முதல் பலவற்றில் மனிதர்கள் எழுதினர். அதற்கு மூலிகைச் சாறைப் பயன்படுத்தியதால் பல நாட்கள் அழியாமல் இருந்தன.

அதேநேரத்தில் உலகின் மற்ற நாடுகளிலும் எழுதுவதற்கு வேறு பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. புராதன எகிப்தியர்கள் பேப்பர் போன்ற ஒரு பொருளை விதைகள் மூலம் தயாரித்தனர்.

ஐரோப்பியர்கள் எழுதுவதற்கு மிருகங்களின் தோலைப் பயன்படுத்தினர். உடையாமல் மடித்துவைக்க முடியும் என்பதால் அதற்கு அதிக `மவுசு’ இருந்தது.

பல நாடுகளிலும் பல மிருகங்களின் தோல்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டன. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் மனிதத் தோலில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளில் மக்கள் எழுதினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாய்லுன் என்ற சீனர் மூங்கில் நாரைப் பயன்படுத்திக் காகிதத்தைத் தயாரித்தார். அதுதான் தற்போதைய பேப்பரின் முன்னோடி.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

எப்படி மிதக்கிறது கப்பல்?



ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.


அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

நன்றி-http://senthilvayal.wordpress.com/