
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Tuesday, November 2, 2010
Monday, November 1, 2010
Monday, May 24, 2010
சத்தத்தினால் கொண்ட - டூயட்

சத்தத்தினால் - உண்ட
பித்தத்தினால் - காதல்
யுத்ததினால் - எனது
ரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி -இரு
கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும் - கெண்டை
கால் பார்த்ததும் -உன்னை
பெண் பார்த்ததும்- தள்ளிப்
பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம் -முற்றும்
சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால் - என்னை
நிந்திப்பதால்-நெஞ்சை தண்டிப்பதால்-தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன் - நீ
தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல் - இல்லை
நில் என்று கொல் - என்னை வாவென்று சொல்
இல்லை போவென்று கொல்
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்
-- வைரமுத்து
உன்னோடு நான் இருந்த - இருவர்

படம் - இருவர்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நயம் பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவ அது பகல அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தால்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
-- வைரமுத்து
Subscribe to:
Posts (Atom)
