Showing posts with label பொதுஅறிவு. Show all posts
Showing posts with label பொதுஅறிவு. Show all posts

Tuesday, December 6, 2011

காந்தத்தின் மூலம் ஒருவரை உண்மை பேச வைக்கலாம்!




காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் கறக்க முடியும் என்கிறார்கள், விஞ்ஞானிகள். இதன்மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல்வதை தடுக்க முடியும் என்கிறார்கள்.

நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள `டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார்டெக்ஸ்’ என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள். இப்பகுதியின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்திவாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

Wednesday, November 23, 2011

வாஷிங் மெஷின்






இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது, `வாஷிங் மெஷின்’ எனப்படும் துணி துவைக்கும் எந்திரம். இது எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?

வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டிய துணி, பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.

இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு, எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை `செட்’ செய்து வைத்துவிட வேண்டும்.

இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி, பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணியின் தரத்தைப் பொறுத்து சுழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.

வாஷிங் மெஷினின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சிக்னலை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர்மட்டத்தில் உள்ள காற்றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது. பிறகு மைக்ரோ சுவிட்சு மூலம் தடுக்கப்பட்டு, மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க், சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும், பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க, குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.

சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய, காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மாக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும்போது கதவு மூடும்.

வேலை முடிந்ததும் ஆட்டோமேட்டிக்காக கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்றவை சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்கின்றன. அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.

நமது உடம்பு ஓர் அதிசயம்!




எது எதுவோ அதிசயம் என்று பேசுகிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் பிறக்கும்போது நமது உடலில் 270 எலும்புகள் அமைந்திருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றில் 64 எலும்புகள் காணாமல் போய்விடுகின்றன. மனிதன் முதுமைப் பருவமடைந்து இறக்கும்போது 206 எலும்புகளே
எஞ்சியிருக்கின்றன. குறிப்பிட்ட எலும்புகள் எப்படிக் காணாமல் போகின்றன? அவை மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடுகின்றன.

நமது உடம்பில் தேவைக்கேற்ப மின்சாரமும் உள்ளது. இந்த மின்சாரத்தைக் கொண்டு 25 வாட் மின்சார விளக்கை எரியவிடலாம். அல்லது நான்கு கெட்டில்கள் நிறையத் தண்ணீரைக் கொதிக்க விடலாம்.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 52 டன் எடையுள்ள உணவை உண்கிறான். 19 ஆயிரம் காலன் திரவங்களை அருந்துகிறான்.

நன்றி - senthilvayal.wordpress

Thursday, October 13, 2011

ஒலி மாசுபடுதல்


ஒரு கண்ணோட்டம் :

இந்த குறிப்பிட்ட ஒலி மாசுபாடானது, தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அதிக பயன்பாட்டால் ஏற்படும் மிகையான சத்தமாகும். நாம் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் சப்தங்களை எழுப்புகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

டெசிபல் முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் – 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். அதாவது

திண்ணத்தின் அளவு – 10 log10 (1/10) (dB)

உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.

ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவின் உதாரணங்கள் பின்வருமாறு:

கேட்பதின் ஆரம்ப நிலை 0 dB மோட்டார் சைக்கிள் (30அடி) 88 dB
சலசலவென ஒலி 20 dB உணவு அரைக்கும் கருவி (3அடி) 90 dB
சிறிய முணுமுணுப்பு (3அடி) 30 dB பாதாளத் தொடர் 94 dB
இரைச்சலற்ற வீடு 40 dB டீசல் வண்டி (30அடி) 100 dB
இரைச்சலற்ற தெரு 50 dB அறுவடை இயந்திரம் (3அடி) 107 dB
சாதாரண உரையாடல் 60 dB காற்றழுத்த முறையில் இயங்கும் கடாவு ஆணி (3அடி) 115 dB
காரின் உள்ளே 70 dB சங்கிலி ரம்பம் (3அடி) 117 dB
சப்தத்துடன் பாட்டு (3அடி) 75 dB அதிக சத்தத்துடன் கூடிய நடனம் 120 dB
மோட்டார் வண்டி (25அடி) 80 dB ஜெட் விமானம் (100அடி) 130 dB

மற்ற ஒலி அளவீடுகள் பின்வருமாறு :

  • சமூக மக்கள் ஒலியின் சமமான / நிகரான நிலை
  • கலவையான ஒலியின் விகிதம்
  • சமமான ஆற்றல் அளவு
  • ஒலி மற்றும் அதன் எண்ணிக்கையின் அட்டவணை
  • ஒலி கதிர்வீச்சின் முன்கணிப்பு
  • ஒலி அலகு
  • ஒலி நிலை
  • ஒலி மாசுபாடு நிலை
  • ஒலி விகிதம்
  • உணர்ந்து கொள்ளும் ஒலியின் நிலை
  • போக்குவரத்து ஒலியின் அட்டவணை
  • சப்தத்தின் அளவு (இரைச்சலின் அளவு)
  • சப்தத்தின் அளவு மீட்டர்
  • சப்த அழுத்த அளவு
  • உலக ஒலி செல்லும் திட்டம்

ஆதாரங்கள் மற்றும் முறைகள் :

ஒலி மாசுவிற்கு கீழ்கண்ட பிரிவுகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.

  • சாலை போக்குவரத்து இரைச்சல்
  • விமான இரைச்சல்
  • இரயில் இரைச்சல்
  • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி
  • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு
  • தொழிற்சாலை இரைச்சல்

ஆதாரம்: http://library.thinkquest.org/co111040/types/types.php.

ஒலி மாசுபாட்டின் விளைவு :

  • தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ் பேர்க் பகுதியானது, இடஅமைப்பு மற்றும் அதிகமாகிவரும் கட்டிடம் போன்றவற்றின் இரைச்சலினால் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் காலை நிலையையும் அதாவது குளிர் காலத்தில் தட்பவெப்பநிலையானது நேர்தலைகீழாக மாறுகிறது (வால்ஸ்லி, 1997).
  • வாழ்வியல் / உடலியல் சார்ந்த விளைவு: அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.
  • உளவியல் சார்ந்த விளைவு: ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொருத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.
  • இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்
  • தொடர்பு (தகவல் தொடர்பு): ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.
  • சோர்வு மற்றும் தலைவலி: ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.
  • தொழில்ரீதியான இரைச்சல்: தொழில் சம்பந்தப்பட்ட இரைச்சலினால் சோர்வு, தலைவலி, உற்பத்தியில் இழப்பு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றது. இதன் விளைவானது பாதிக்கப்படும் மனிதனின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொருத்து அமைகிறது.
  • போக்குவரத்து: மோட்டார் வண்டிகள், பேருந்துகள், இரயில் வண்டி மற்றும் விமானம் போன்றவற்றின் இரைச்சல் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது. அதிக நகர மக்கள் இருக்கும் இடங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இது கட்டுப்படுத்த முடியாத அதிக இரைச்சல் சப்தத்துடன் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். இரயில் வண்டி இயக்கம் அதிகமுள்ள சுற்றுப்புற குடியிருப்புகளில் ஒலியின் அளவானது 80-100 டெசிபல் மற்றும் மூன்று அடுக்கு குடியிருப்பின் திறந்த வெளியில் 90 டெசிபலாகும் பதிவாகிறது.
  • சமூக இரைச்சல்: veitch – ன் படி அதிக இரைச்சலினால் தலைவலி, எரிச்சல், குழப்பம் போன்றவை ஒலி மாசுபட்டால் ஏற்படுகிறது. இந்த நிலையானது கடந்த 20 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. சமூக இரைச்சலுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆய்வுகள் ஆதாரமாகும்.
வார்ட் & சுட்வெல்ட், 1973 மனவழுத்தம், நிலையற்ற தன்மை மற்றும் அதிவேகமான பேச்சு
டேமன், 1977 சுற்றுவட்டப்பகுதியில் சுமூக வாழ்க்கை நிலை பாதித்தல்
ஆப்பிள்யார்டு & லின்டெல், 1972 அக்கம் பக்கத்து வீடுகளில் சமூக உறவு குறைவு
கொஹென், எவன்ட், கிரான்ட்ஸ் & ஸ்டெகோல்ஸ், 1980 பள்ளி சம்பந்தமான செயல் திறன் குறைதல்
கொஹென் மற்றும் சிலர் வீட்ச் 1996 உயர் இரத்த அழுத்தம்

18-19 வயதுடையவர்களில் 60 சதவிகித மக்களின் கேட்கும் திறன் குறைதல்

அய்ரிஸ் & ஹீக்ஸ், 1986 உரத்த இசையால், மனிதனின் ஒருமுகப்படுத்திய தீவிரத்தின் தன்மையில் பாதிப்பு
தைய்கன், 1988 உறக்கம் புறக்கணிப்பு

ஒலி மாசுக்கட்டுப்பாடு :

பாதுகாப்பு

  • அலுவலகங்களில் இரைச்சல் ஏற்படுத்தும் கதவுகள், மதில், மேல் முகப்பு போன்றவற்றின் தொந்தரவை தடுப்பதற்கான வழியை கையாளுதல்
  • திரையரங்கு மற்றும் சினிமா போன்றவற்றில் ஏற்படும் எதிரொலியை தடுக்க கடத்தாப் பொருட்களின் பயன்பாடு
  • தொழிற்சாலையில் வேலை செய்யும் வேலையாட்களை பாதுகாக்க காதுகளில் பொருத்தப்படும் ஒரு கருவியின் பயன்பாடு
  • நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகர குடியிருப்புகளில் கட்டமைப்பானது ஒலித்தடையை கொண்டு அமைப்பதால் போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலை குறைக்கலாம்

தாவர வளர்ப்பு

  • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது

பகுதிகளாக பிரிப்பு

  • குடியிருக்க தகுதியான பகுதிகளாக நகர பகுதிகளை பிரித்து மறுகட்டமைப்பு செய்வது
  • அருகிலிருக்கும் கட்டங்களை பொருத்து தொழிற்சாலை ஒழுங்கான மேம்பாட்டு கூட்டடைப்புடன் பிரித்தல்
நன்றி - http://senthilvayal.wordpress.com

ரத்ததானம்



ரத்தமும், தசையும், எலும்பும் சேர்ந்ததுதான் உடல். ரத்த ஓட்டம்தான் உடலியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்தஓட்டம் தடைபடுவதால் தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பக்கவாதமும், தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பட்டால் புண்களும் வந்துவிடும். ரத்த ஓட்டம் இல்லாமல் எந்த ஜீவராசிகளும் கிடையாது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எந்த வியாதியும் கிடையாது.

***

ரத்தம் உடல் முழுவதும் ஓடுகிறது என்பதே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி. அதன்பிறகு தான் ரத்தத்தின் வழியாக மருந்துகளை செலுத்தினால் உடலின் எந்த பாகத்திற்கான வியாதியும் குணமடையும் என்பதே அறியப்பட்டது. ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் அணுக்களையும், திரவ பிளாஸ்மாவையும் கொண்டது. வெள்ளையணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் காரணம். இது ஒரு புரதப்பொருளாகும். இதுதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பெற்று திசுக்களுக்கு வழங்குகிறது.

***

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் `பம்ப்` செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதயம் ஒரு நிமிஷத்துக்கு 5 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்து எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. அவ்வளவு வேகத்தில் மருந்து ரத்தத்தின் வழியே கடத்தப்படுவதால்தான் மாத்திரை சாப்பிட்டவுடன் நோயின் தாக்கம் உடனடியாக குறைந்ததுபோல உணர முடிகிறது.

***

ரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜன் ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு நுரையீரலுக்கு எடுத்து வரப்பட்டு மூக்கு வழியே வெளியேற்றப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிஜன் எனும் புரதத்தின் தன்மைக்கேற்ப ரத்தங்களை வகைப்படுத்துகிறார்கள். அதன்படி `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` என 4 குரூப் ரத்தம் உள்ளன. இது தவிர ஏ1, ஏ2 என்ற உப `குரூப்`களும் ரத்தத்தில் உண்டு. `ஓ` பிரிவு ரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கலாம். அதனால்தான் அவர்களை “யுனிவர்சல் டோனர்` என்று அழைப்பதுண்டு.

***

ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பல வியாதிகள் வந்துவிடும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை வியாதி ஏற்படும். இதனால் ரத்தம் இளஞ்சிவப்பாக மாறிவிடும். பசி குறையும், சோர்வு ஏற்படும், மூச்சிறைக்கும். நோய் முற்றிவிட்டால் நாக்கு வெளிறி விடும். நகங்கள் அடிக்கடி உடையும். ரத்த சிவப்பணுக்களை உடலில் செலுத்தி இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பார்கள். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம். கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். அசைவ உணவிலுள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் கிரகிக்கப்படுகிறது.

***

ரத்தசோகை ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதிக ரத்தத்தை இழக்கிறார்கள். கர்ப்பமாய் இருக்கும்போது கருவிலுள்ள சிசுவுக்கு ரத்தத்தின் வழியே உணவு கடத்தப்படுகிறது. பிரசவ நேரத்திலும் பெண்கள் ரத்தம் இழக்கிறார்கள். எனவே பெண்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு உடலை நல்ல தகுதியுடன் வைத்திருந்தால் மட்டுமே ரத்த சோகையை தவிர்க்க முடியும். பாதிப்பு உடையவர்களுக்கு சத்து மாத்திரைகள், மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவசியமற்ற நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளை விழுங்கி வருவது பயன் தராது. அதேநேரம் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

***

நம் நாட்டில் ஏறக் குறைய 50 சதவீதம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ரத்தசோகை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் எளிதில் களைப்படைவதால் உழைப்பு, உற்பத்தி எல்லாமே பாதிக்கப்படும். இது நாட்டிற்கு பெரிய நஷ்டம். இதைத் தடுக்க அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதைவிட இரும்புச்சத்து நிறைந்த உப்பை சமையலில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இரும்புச்சத்துள்ள உப்பு சேர்ப்பது மருந்து மாத்திரைகளை விட நல்லது. பக்க விளைவற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது சாதா உப்பிற்குப் பதில் இரும்புச்சத்து நிறைந்த உப்பு உபயோகிக்கப் பழகுங்கள்.

***

ரத்த பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க இன்னொரு வியாதி தாலசீமியா. இதுவும் ரத்த இழப்பால் ஏற்படும் வியாதி தான். இதற்கு அவ்வப்போது போதுமான ரத்தம் வழங்கிக் கொண்டிருந்தால்தான் பாதிக்கப்பட்டவர் பிழைக்க முடியும். வாழ்நாள் முழுவதும் மாதம் ஒரு முறை ரத்ததானம் பெற்று வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதேபோல பெரிய அறுவைச் சிகிச்சைகள் முதல், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வரை பலதரப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைக்க ரத்தம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் போதிய ரத்தம் கிடைக்காததால் ஏராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள்.

***

மருத்துவ சிகிச்சைக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி யூனிட்டுக்கு மேல் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் 20 சதவீத ரத்தம் அவசர சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தானமாக கிடைக்கும் ரத்தம் குறைவாகத்தான் இருக்கிறது. உடற்தகுதி உடையவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் கொடுத்தாலே ரத்த தேவை பூர்த்தியாகி விடும் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. 18 முதல் 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். எய்ட்ஸ், சிறுநீரக நோய், வலிப்பு நோய் உள்ளவர்கள் தவிர உடல் எடை 45 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் சதவீதமும், ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு இருப்பதும் அவசியம்.

***

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். ரத்ததானம் செய்வதால் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்பது கட்டுக்கதை. ரத்ததானம் செய்தால் புதிய ரத்தம் ஊறத் தொடங்கும் என்பது தான் உண்மை. இதனால் நமது உற்சாகமும், உடல்நலமும் கூடும். நண்பர்கள், உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது மட்டும் அவசர அவசரமாக ரத்தத்தை தேடி அலையும் நிலை மாற, தகுதி உடையவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம்.

C£yz¥ TP• ‘zeh• LÖ–WÖ!

NÖRÖWQ LÖ–WÖeL[Ö¥ S¥X ÙY¸oN• C£‹RÖ¥RÖÁ “ÛLTP• G|eL ˜z•. ÙY¸oN–Á½ C£yz¥ TP• ‘zTR¼h AR¼ÙLÁ¿ E·[ «ÚNc LÖ–WÖÛY†RÖÁ TVÁT|†R ÚY|•. A‰ `ALopY“ LÖ–WÖ' (Infrared camera) G]T|f\‰.

J£ ÙTÖ£¸Á —‰ ÙYªÚY¿ A[«¥ T|• J¸ÛV•, ŒZÛX• NÖRÖWQ LÖ–WÖ TPUÖehf\‰.

h•–£yz¥ NÖRÖWQ LÖ–WÖÛY ÙLց| TP• G|eL ˜zVÖ‰. B]Ö¥ C£yz¥ ÙTÖ£·L· ALopY“e L‡Ÿ Yz«¥ ÙYT†ÛR ÙY¸›|fÁ\]. ALopY“e LÖ–WÖ AÛR TPUÖehf\‰. C£yz¥ E·[ J£ ÙTÖ£¸¥ C£‹‰ ÙY¸T|• ÙYTNe‡† ‰„ehLÛ[e fWfeL ÚY|• GÁTR¼LÖL R¼ÚTÖ‰·[ `CW° LÖ–WÖ'eL¸Á ˜efV Th‡LÛ[ h¸Ÿ ŒÛX›¥ ÛY†‡£eL ÚYz·[‰. ÙYTNe‡† ‰„ehL· CeLÖ–WÖ«]Ö¥ fWfeLTy| –ÁNÖWUÖL UÖ¼\T|fÁ\].

CjfXÖ‹ÛRo ÚNŸ‹R `‘Ù[Íp' GÁ\ Œ¿Y]• E£YÖef›£eh• `CW° LÖ–WÖ', ÚY¿«R ÙRÖ³¥îyT†‡Á AzTÛP›¥ ÙNV¥T|f\‰.

C‹R LÖ–WÖ«¥ CP•ÙT¼¿·[ ÙXÁÍ rUÖŸ 10 B›W• V ÙN¥L[Ö¥ B]‰. B]Ö¥ C‰ ÙYT†RÖ¥ H¼T|f\ UÖ¿R¥LÛ[†RÖÁ L|Q£•. G]ÚY h¸Ÿ«eL ÚYzV AYpV–¥ÛX.

ÙYT A[«¥ AÛW zf¡ ÙN¥pVÍ UÖ¿R¥ H¼TyPÖ¨• CeLÖ–WÖ«]Ö¥ L|QW ˜z•. CRÁ ™X• G|eh• TPjL·, R¼ÚTÖ‰ C£yz¥ TPÙU|eL TVÁT|• LÖ–WÖeL[Ö¥ G|eLT|• TPjLÛ[ «P† ÙR¸YÖL C£TRÖLe i\T| f\‰.

PÖePŸ Í{TÁ ÚTÖŸyP£• AYW‰ hµ«]£• 15 B| LÖX• TÖ|Ty| C“‡V LÖ–WÖÛY E£YÖef·[]Ÿ. C“‡V ALopY“e LÖ–WÖ, TÖ‰L֐“† ‰Û\›¥ ÙT¡‰• TVÁT|• GÁ¿ L£RT|f\‰.

பிரெஞ்சு Fries

`‘ÙWtr ‘ÛWÍ'!


ÙT¥ÈV SÖy|eLÖWŸLºeh ‘ÙWtr ‘ÛWÍ (French fries) —‰ AˆRe LÖR¥ E|. A‰ AYŸLºÛPV ÚRpV EQ°. 1800-¥ C£‹‰ G¥XÖ EQ°LÚ[Ö|• AYŸL· ‘ÛWÛb A‡L A[«¥ E| Y£f\ÖŸL·. B]Ö¥ C‹R EQÛY† RÖjL·RÖÁ L|‘z†RRÖLe i¿f\ÖŸL·, ‘ÙWtreLÖWŸL·.

G‹R EQYÖL C£‹RÖ¨• `‘ÙWtr T„Y‰' (to french) GÁ\Ö¥ –L ÙU¥¦VRÖL ÙYy|Y‰ GÁ¿ ÙTÖ£·. ‘ÙWtr ÙRÖ³¥îyT†‰eh rUÖŸ 50 B|Lºeh ˜ÁÚT C‹R EQÛY ÙT¥ÈV SÖyz]Ÿ L|‘z†‰«yPRÖLe i\T|f\‰. ÙT¥ÈV SÖyPYŸL¸¥ 40 NR®R†‡]Ÿ, ‘Wtr ÙUÖ³ ÚTrTYŸL· GÁ\ EÛUÛV• ŒÛ]«¥ ÙLÖ·[ ÚY|•.

`ÙUeÛLÁ “yÍ' GÁ\ L]PÖ SÖy| L•ÙT –L A‡L A[«¥ ‘ÙWtr ‘ÛWÛb RVÖ¡ef\‰. EXf¥ 6 LPjL¸¥, ÙUeÛLÁ L•ÙTÂeh ÙNÖ‹RUÖ], E£Û[efZjÛL TRT|†‰• 30 ÙRÖ³¼NÖÛXL· E·[].

Friday, September 23, 2011

காகிதமாகப் பயன்பட்ட பொருட்கள்!


ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. பண்டைய இந்தியாவில், வாழைப்பழத் தோல் முதல் பட்டைகள் முதல் பலவற்றில் மனிதர்கள் எழுதினர். அதற்கு மூலிகைச் சாறைப் பயன்படுத்தியதால் பல நாட்கள் அழியாமல் இருந்தன.

அதேநேரத்தில் உலகின் மற்ற நாடுகளிலும் எழுதுவதற்கு வேறு பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. புராதன எகிப்தியர்கள் பேப்பர் போன்ற ஒரு பொருளை விதைகள் மூலம் தயாரித்தனர்.

ஐரோப்பியர்கள் எழுதுவதற்கு மிருகங்களின் தோலைப் பயன்படுத்தினர். உடையாமல் மடித்துவைக்க முடியும் என்பதால் அதற்கு அதிக `மவுசு’ இருந்தது.

பல நாடுகளிலும் பல மிருகங்களின் தோல்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டன. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் மனிதத் தோலில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளில் மக்கள் எழுதினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாய்லுன் என்ற சீனர் மூங்கில் நாரைப் பயன்படுத்திக் காகிதத்தைத் தயாரித்தார். அதுதான் தற்போதைய பேப்பரின் முன்னோடி.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

எப்படி மிதக்கிறது கப்பல்?



ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.


அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்!


பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. நீரின் கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட். ஆனால் மிகுந்த அழுத்தத்தினால் கொதிநிலையை அடையும்முன்பே மிகச் சூடடைந்து விடுகிறது.

பிறகு கொதிநிலையை அடைந்த உடனே நீராவியாகி விரிவடையத் தொடங்குகிறது. அவ்வாறு விரிவடையும்போது நீரை மேலே தூக்குகிறது. இதனால் நீர்ப் பரப்பில் அழுத்தம் குறைய, அப்பரப்பில் உள்ள தண்ணீர் கொதிநிலையை அடைந்து மேலும் நீராவி உண்டாகிறது.

இம்மாதிரி சேரும் நீராவியின் விசையால் தண்ணீர் மேலே தூக்கப்பட்டு தரைப் பரப்பில் இருந்து 15 முதல் 20 மீட்டர் உயரம் வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. பிறகு நீரூற்றுப் பாதையில் மேலும் குளிர்ந்த நீர் வந்து சேர, அது கொதிநிலை அடைந்து, நீராவி மேலும் நீரை வெளியே தள்ளுகிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது.

அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் உள்ள கொதிநீரூற்று, 65 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட நேரத்துக்குக் கொதிநீரை வெளிப்படுத்துகிறது. இந்த ஊற்று நீரில் தாதுப் பொருட்கள் கரைந்திருக்கின்றன.

எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதிநீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய் ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீரூற்றுகள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, யெல்லாஸ்டோன் பார்க் ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. `கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீரூற்று தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும்.

வெந்நீர் ஊற்றானது கொதிநீரூற்றைப் போல சீறி அடிக்காது. இதன் வெப்பநிலை ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்து விடும்.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

மூர் மார்க்கெட்


அந்தக் கால மெட்ராசில் புத்தகப் பிரியர்களின் புதையல் சுரங்கமாய் திகழ்ந்தது மூர் மார்க்கெட். புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான கலைப் பொருட்கள் முதல் பல் பொடி வரை இங்கு கிடைக்காததே இல்லை என்பார்கள். `அப்பா, அம்மாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும் இடம்’ என்று மூர் மார்க்கெட்டைப் பற்றி அன்றைய மெட்ராஸ்வாசிகள் பெருமை அடித்துக் கொள்வார்கள்.

சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவப்பு நிறக் கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு. அந்தக் காலத்தில் சென்னை பிராட்வேயில் ஒரு மெயின் மார்க்கெட் இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள் தேங்கி சுகாதார குறைவாகக் காணப்பட்டது.

அப்போது முனிசிபாலிடி தலைவராக இருந்த லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர், சென்னை நகரத்தின் மேம்பாட்டிலும், சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் பிராட்வேயில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற மூர் திட்டமிட்டார். எனவே சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் குஜ்லி பஜார் இருந்த இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட, 1898ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜார்ஜ் மூர் அடிக்கல் நாட்டினார். 1900 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக்கால் மூர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது.

மெட்ராசில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்து போவோரும், தவறாமல் கால் பதிக்கும் இடமாக மூர் மார்க்கெட் திகழ்ந்தது. இந்தோ சாரசானிக் பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் பார்க்கும்போதே பரவசத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருந்தது. நுழைவுவாயில்களில் கருங்கல்களால் ஆன வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோவில் கலசங்களின் வடிவில் கல் கலசங்களும் காட்சியளித்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் மாடிச் சுவர்களில் இந்த கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் (இன்றைய சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம்) உள்ளே, மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

மூர் மார்க்கெட்டில் பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் என புத்தகப் பிரியர்களின் சொர்க்க லோகமாகவே இந்த மார்க்கெட் திகழ்ந்தது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகள் கூட இங்கு கிடைக்கும்.

மூர் மார்க்கெட்டில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி ரெக்கார்டுகள் வரை இங்கு வாங்கலாம். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் என அனைத்து இசைகளையும் வசப்படுத்தி வைத்திருந்தது இந்த கலை மார்க்கெட்.

ஆங்கிலோ-இந்தியர்கள் மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் இங்கே அலைந்து கொண்டிருப்பார்கள். இங்கு நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் சொற்பக் காசை மட்டும் கொடுத்து வேறு இசைத் தட்டை பேரம் பேசி எடுத்துச் செல்லலாம்.

மூர் மார்க்கெட்டில் பொருட்களை பேரம் பேசி வாங்குவதே ஒரு தனிக்கலை. ஆயிரங்களில் தொடங்கி அணாக்களில் முடியும் அதிர்ச்சி தரும் பேரங்கள் எல்லாம் இங்கு சர்வ சாதாரணம். மார்க்கெட் வாசலிலேயே இசைத் தட்டுகளுக்கான தரகர்கள் காத்திருப்பார்கள். என் கடைக்கு வா, உன் கடைக்கு வா.. என கையைப் பிடித்து இழுப்பார்கள்.

மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் உண்டு. நிரந்தர கடைகளில் பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் அரிதான வெளிநாட்டு உள்நாட்டு நூல்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.

மற்றொரு வகை விற்பனையாளர் `கேர் ஆஃப் பிளாட்பாரம்’ தினுசு. இவர் மூர் மார்க்கெட் வராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார். இவரிடம் பெரும்பாலும் பேப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளும் இருக்கும். விற்காமல் தேங்கிப் போகும் நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு,கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து, `இதெல்லாம் பத்து ரூபாய், இதெல்லாம் ஐந்து ரூபாய், அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய், எது எடுத்தாலும் எட்டணா’ என்று எழுதிய அட்டைகளைக் குத்தி வைப்பார்கள்.

புத்தகக் கடைகள் மட்டுமின்றி ரெடிமேடு துணிக்கடைகள், பொம்மைக் கடைகள், என அனைத்து வகையான கடைகளும் இங்கிருக்கும். வண்ண மீன்கள், கிளிகள், முயல்கள் போன்ற உயிரினங்களும், அவற்றை வளர்ப்பதற்கான தொட்டி, கூண்டு என சகலமும் கிடைக்கும். கடைசி பகுதிக்கு சென்றால் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள் இருக்கும். சுருங்கச் சொன்னால் அந்தக் கால மெட்ராசின் ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் தான் மூர் மார்க்கெட்.

சென்ட்ரல் ரெயில் நிலைய விரிவாக்கத்திற்காக மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான் 1985 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் மூர் மார்க்கெட் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் தீயின் நாக்குகள் அந்த பிரம்மாண்ட மார்க்கெட்டை அப்படியே சுருட்டி வாயில் போட்டுக் கொண்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின. கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் மூர் மார்க்கெட்டின் உள் பகுதியில் வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. இப்படி 85 ஆண்டுகாலம் மிகவும் பரபரப்பாக இயங்கி, தங்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட மூர் மார்க்கெட் திடீரென தீயில் மாயமானதை நம்ப முடியாமல் மெட்ராஸ்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று அப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், கடைசி வரை தீ விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

பின்னர் அதற்கு பதிலாக புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டது. அது தான் இப்போதைய புதிய மூர் மார்க்கெட்.

நன்றி-தினத்தந்தி

ஜியோமெட்ரி’யின் தந்தை!


`ஜியோமெட்ரி’ என்ற கணித முறை வந்தபிறகுதான் கணிதத் துறையில் பல குழப்பங்களும், சிக்கல்களும் தீர்ந்தன. முக்கியமாக, பலவித கோணங்களில் அளந்து கணக்கிடுவதற்கு ஜியோமெட்ரி முறை மிகவும் பேருதவியாக இருக்கிறது.

கிரேக்க மொழியில் `ஜியோமெட்ரி’ என்பதற்கு நிலத்தை அளத்தல் என்று பொருள். எகிப்து நாட்டில் பல்வேறு கோணங்களில் பரவிக் கிடந்த விளைநிலங்களை அளந்து ஒழுங்குபடுத்துவது பெரிய பிரச்சினையாக இருந்தது. `ஜியோமெட்ரி’ முறை தோன்றிய பிறகு அந்தப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் அகன்றுவிட்டன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜியோமெட்ரி முறையைக் கண்டறிந்து உலகத்துக்கு அறிமுகப்படுத்திய அறிஞர் பெயர் `யூக்லிட்’ ஆகும். ஆனால் அந்தக் கிரேக்க அறிஞரின் வாழ்க்கையைப் பற்றிய சரியான வரலாறு கிடைக்கவில்லை. அவர் எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் என்ற தகவல்கள் கூடத் தெரியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் அவர் வாழ்ந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறது.

யூக்லிட் எழுதிய `மூல தத்துவங்கள்’ என்ற நூல், கிரேக்க மொழியில் இருந்து உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூல் 1570-ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், இன்றளவும் பெருஞ்செல்வாக்குப் பெற்றதாகத் திகழ்கிறது என்பதில் இருந்தே இதன் சிறப்புப் புரிகிறது அல்லவா? அந்த நூல்தான் `ஜியோமெட்ரி’ கணிதத்தின் அடிப்படையாகும்.

கிரேக்க நாட்டில் அலெக்சாண்ட்ரியா நகரத்தில் யூக்லிட் பிறந்தார் என்று கருதப்படுகிறது. அந்நகரில், எகிப்து ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற ஒரு பள்ளியில் கணிதவியலைப் போதித்து வந்தார் யூக்லிட்.

யூக்லிட் எழுதிய மூல தத்துவங்கள் நூல், உலகத்தில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக விற்பனையுடையதாக இருந்தது.

இன்றும் கூட, ஜியோமெட்ரி கணித முறை அடிப்படையில்தான் கடலில் கப்பல்களைச் செலுத்துகிறார்கள். ஆகாயத்தில் விமானம் தடம் மாறிச் செல்லாமல் நேர்வழியில் செல்லவும் இந்த கணித முறையே உதவுகிறது.

நன்றி-http://senthilvayal.wordpress.com/

எழும்பூர் ரெயில் நிலையம்

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்’ ஆக்கிவிட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.

முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.

வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக் காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

நன்றி-தினத்தந்தி

Friday, July 29, 2011

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?!



தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.

இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

http://senthilvayal.wordpress.com/

வைட்டமின் என்றால் என்ன?



மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.

உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.

பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.

அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.

இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர். இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.

ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.

வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)

எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.

எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

`டை’ தோன்றிய விதம்!



ரோமாபுரிப் படை வீரர்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு சிறு துணியை அணிந்தார்கள்.

அது, குளிர் காலத்தில் இதமாக இருக்கும். வெயில் காலத்தில் வியர்வையை உறிஞ்சும்.

காலப்போக்கில் மற்ற படை வீரர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர். பிரெஞ்சுப் புரட்சியின்போது அவரவர் சார்ந்த கட்சியைக் குறிக்கும் விதத்தில் வெவ்வேறு நிறங்களில் `டை’ அணிந்துகொண்டனர்.

குரோஷிய ராணுவத்திடம் இருந்து டையின் அமைப்புகளையும், `க்ரேவட்’ (Cravat) என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இது நாகரிக உடையின் ஆடையாளம் ஆனது. அலுப்பூட்டும் உடைகள் இடையே, வண்ணத்தை அள்ளித் தெளிப்பதாக டைகள் வடிவமைக்கப்பட்டன.

http://senthilvayal.wordpress.com

காதை உறுத்தும் இரைச்சல்


நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா?

மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.

சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் ரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல்.

தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் `புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை, 120 டெசிபல்கள்.

http://senthilvayal.wordpress.com

Monday, July 4, 2011

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்




உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன.
“பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள், சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று, ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார்.
பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது, இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது, பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:
மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட, ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான், பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால், எந்த அளவு சக்தி கிடைக்குமோ, அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன.
இவ்வாறு நவீன்டிராசீரம் கூறி யுள்ளார்.
பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.


http://senthilvayal.wordpress.com

ஆம்புலன்ஸ்




1809-ம் ஆண்டு நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் பிரெஞ்சுக்காரர்கள். நடக்க முடிந்தவர்கள், ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்ல முடிந்தவர்களை போர்க்களத்திற்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து முதலுதவி அளித்தனர். பிரெஞ்சு மொழியில் `நடத்தல்’ என்பதற்கான சொல் ஆம்புலேர் ((Ambulare). அதற்கு இணை யான ஆங்கிலச்சொல் (Amble) என்பதாகும்.

1942-ம் ஆண்டுகளில் `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் ஹாஸ்பிடல் என்ற சொல் வழங்கி வந்தது. `உதவி வேண்டுவோர் நடந்தோ அல்லது சுமக்கபட்டோ சென்றடையும் இடம்’ என்பதே ஆம்புலன்ஸ் என்பதன் நேரடியான மொழிபெயரப்பாகும்.

19-ம் நுற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்கள் குதிரைகளால் இழுக்கபட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கபட்டன. தமிழில் இதை `அவசர ஊர்தி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இதன் முலம் பாதிக்கபட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றபடுகின்றன.

http://senthilvayal.wordpress.com

போக்குவரத்து விளக்குகள்!




பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விபத்துகளையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப்பட்டது. அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு’ அது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எச்சரித்து, செல்ல அனுமதிப்பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியாளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ணத்தையும், `செல்லலாம்’ என்று தெரிவிப்பதற்கு பச்சை வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். முதன்முதலாக அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டன. சராசரியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு வார காலத்தை போக்குவரத்து விளக்குகளுக்காகக் காத்திருப்பதில் செலவிடுகிறார்.

http://senthilvayal.wordpress.com