Showing posts with label சினி செய்திகள். Show all posts
Showing posts with label சினி செய்திகள். Show all posts

Friday, June 3, 2011

ஹெல்த் டிப்ஸ்


குறுமிளகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறுமிளகு நமது உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உண்டாக்குகிறது. குறுமிளகையும் உப்பையும் பொரித்து சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்துவிடும்.

தினமும் இரண்டு அகத்தி இலையை விழுங்கி வந்தால் வயிற்றில் உண்டாகும் புண்களை உடனே குணப்படுத்தும்.

மாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு வலுப்பெறும். குரல் வளம் நன்றாக இருக்கும். இதனுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.

-தேனி முருகேசன்

கார உணவு சாப்பிடவேண்டும்

உணவைப் பொதுவாக இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை கார உணவு, அமில உணவு. உடல் வளர்ச்சிக்கு கார உணவு 80 சதம் தேவை. அமில உணவு 20 சதம் தேவை.

துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு ஆகிய சுவைகளில் அமிலம் அதிகம். உப்பு, கசப்பு, காரசுவை உணவுகளில் காரம் அதிகமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் கார உணவே அதிகமாக இடம் பெறவேண்டும். அமில உணவுகள் அதிகரித்தால் அந்த அளவுக்கு உடலில் நோயும் அதிகமாகும். அதற்காக அதிகமாகவும் காரம் சேர்க்கக்கூடாது.

- தேனிமுருகேசன்

குமுதம்

Tuesday, March 1, 2011

பின்னோக்கிச் செல்லும் பில்லா!




பில்லா 2-வை திரையில் கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்து கே.பாலாஜி தயாரித்த பில்லா திரைப்படம், 2007ம் ஆண்டு அஜீத் நடிப்பில் அதே பெயரில் வெளியானது.

இப்போது மும்பையை சேர்ந்த ஐ.என்.எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சுரேஷ் பாலாஜி - ஜார்ஜ் பயஸ்- ஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'பில்லா -2' என்ற பெயரில் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா படத்துக்கு பின் அஜீத் - யுவன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

புதிய கதையம்சத்தோடு உருவாகும் இப்படத்தில் பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கிறது என அஜீத்த்தும் யுவனும் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இப்படத்தை இயக்க இருக்கிறார்.

மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.

இப்படத்தின் கதைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டாம். இதுவரை சீரிஸாக வந்தப் படங்களின் கதை, முந்தைய பார்ட் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கும்.

ஆனால், பில்லா 2 அப்படியில்லாமல், 'பில்லா 1'வின் கதை பின்னோக்கிச் செல்லுமாம். அதாவது, 'டேவிட் எப்படி பில்லா'வாக மாறினான் என்பதே பில்லா 2-வின் மையமாம்!

Monday, February 28, 2011

நடுநிசி நாய்கள்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்

கெளதம் மேனன் இயக்கி வெளிவந்த திரைப்படம் நடுநிசி நாய்கள். இப்படத்தில் புதுமுகம் வீரா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் வளர்ப்பு தாயிடம் மகன் தப்பாக நடிப்பது போல் இருக்கும் காட்சி இந்து கலாசாரத்தை கேவலப்படுத்துவது போல் இருப்பதாக கூறி, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 27) இந்து மக்கள் கட்சி தலைவர் குமார் தலைமையில் 15 பேர் தரமணி பஸ் நிலையத்தில் இருந்து கானகத்தில் உள்ள இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வீட்டிற்கு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது கிண்டி உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர்கள் மன்சூர் அலி, அங்குசாமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்ததால் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கவுதம் வாசுதேவ்மேனன் நிருபர்களிடம் கூறுகையில் " யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த காட்சி அமைக்கப்படவில்லை என்றும் கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி ஒரு காட்சியை படத்தில் வைத்தேன். நடுநிசி நாய்கள் படத்தின் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனை அறியாமல் நடக்கும் நிகழ்வுகளைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன் " என தெரிவித்தார்.

மங்காத்தா

* 'மங்காத்தா'விற்கு பிறகு அஜீத் நடிக்கப்போகும் படம் 'பில்லா 2'. ரீமேக் பில்லா-1ஐ இயக்கிய விஷ்ணுவர்த்தனே இதையும் இயக்குகிறார். சாதாரண இளைஞனான டேவிட்,எப்படி பில்லாவாக சமூகத்தால் மாற்றப்படுகிறான் என்பதே பில்லா-2வின் கருவாம். பில்லா-1ல் நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.நமீதா நடித்த கேரக்டருக்கு இன்னும் யார் என்பது முடிவாக வில்லையாம்.

Tuesday, February 15, 2011

அவன் இவன் தாமதம்! விஷால் ஒப்புதல்!!




ஒரே படத்துக்கு மூன்றாண்டுகள் கூட எடுத்துக் கொள்ளும் டைரக்டர் பாலா, தனது அவன் இவன் படத்தை ஓரே ஆண்டுக்குள் எடுத்து முடித்து விட்டார் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அவன் இவன் குழுவில், ஒரு சிலர் விஷால் மனசு வைத்திருந்தால் இன்னும் சீக்கிரமே படத்தை முடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். தாமதத்திற்கு ஏன் விஷால் காரணமானார்? படத்தி்ல் விஷால் ஒன்றரை கண் உடையவராக நடித்துள்ளார். அவர் வரும் குள‌ோஸ்-அப் காட்சிகளை படமாக்கவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டனவாம்.


இதுபற்றி விஷால் கூறுகையில், உண்மையிலேயே அவன் இவன் தாமதத்துக்கு காரணம் நான்தான். அவன் இவன் படத்தில் எனக்கு ஒன்றரை கண்! அப்படி நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு நடிச்சு பார்த்தால்தான் தெரியும். இப்படி யாராவது வேறு லாங்குவேஜ் படங்களில் நடிச்சிருக்காங்களான்னு தேடினேன். உலக மொழிகள் எதிலேயும் யாருமே அப்படி நடிக்கல. அந்த விதத்தில் எனக்கு பெருமைதான். இந்த மாதிரி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண்ணு மங்கலாகிடும். அதனால்தான் இந்த படமே லேட்டாச்சு, என்றார்.

நன்றி - தினகரன்