Showing posts with label நளபாகம். Show all posts
Showing posts with label நளபாகம். Show all posts

Tuesday, February 8, 2011

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா


இந்த அல்வாவின் சுவை மிக நன்றாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிதுதான்!

தேவையான பொருள்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ (குக்கரில் வேகவைத்து தோல் நீக்கவும்)
பொடித்த வெல்லம் - 2 கப்
ஆரஞ்சு ரெட் பவுடர் - 1 சிட்டிகை
நெய் - 3 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை:

* வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசித்துக் கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், கிழங்கு விழுது சேர்த்துக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது 5 ஸ்பூன் நெய்விட்டு, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Thursday, February 3, 2011

கேரட் அல்வா






சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதுமான கேரட் அல்வா செய்வது எப்படி? இதோ எளிய செய்முறை.

தேவையான பொருள்கள்:

கேரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
காய்ச்சிய பால் - முக்கால் கப்
உப்பு - 1/4 சிட்டிகை
முந்திரி - 6 பருப்புகள்
திராட்சை - 6
உருக்கிய நெய் - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு ரெட்பவுடர் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

* கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேகவைக்கவும்.

* பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

* ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கனமான உருளியில் பால், சர்க்கரை, கேரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை அளவாக ஊற்றிக் கிளறுங்கள்.

* அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

அவ்வளவுதான்... கமகம கேரட் அல்வா தயார்!

பேரீச்சம்பழ அல்வா








ரொம்பவே சத்துள்ள அல்வா இந்த பேரீச்சம்பழ அல்வா. சாப்பிட சுவையானதும் உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.

தேவையான பொருள்கள்:

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்)
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/4 கப்
திராட்சை, முந்திரி - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 4 கப்

செய்முறை:

* அடிப்பிடிக்காத கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, பேரீச்சம்பழ விழுது சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

* அடுப்பை நிதானமாக எரிய விடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கிவிடுங்கள்.

* நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி அளவான துண்டுகளாக கட் செய்யவும்.

Monday, January 31, 2011

தேங்காய் அல்வா








அசத்தலான மணத்துடனும் நல்ல சுவையாகவும் இருக்கும் தேங்காய் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6

செய்முறை:

* தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

* கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

* பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

பால் அல்வா








உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும், மிகுந்த சுவைமிக்க பால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் - 5 கப்
அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

Tuesday, February 16, 2010

காஞ்சிபுரம் இட்டலி


தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
  1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

  3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

  4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

  5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

  6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

  7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

  8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

  9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி