Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, December 6, 2011

கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!

`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை’ என்பது கிராமத்துப் பழமொழி. இதற்கு மாறாக சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு பலரது வாழ்க்கை நிலை உள்ளது.

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும்… கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டி ருப்பார்கள்.

சிக்னமாக வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்?

* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்களால் வீட்டில் உள்ள துணிகளைத் துவைத்து விட முடியும் என்றால், வாஷிங்மெஷின் தேவையில்லைதான். பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்களே அதனால் நாமும் வாங்கி விடுவோம் என்ற வீண் பகட்டுக்காக ஒருபோதும் வாங்காதீர்கள். அதுபோல கையினால் துவைத்து விடக்கூடிய ஒன்றிரெண்டு துணிகளுக்காக வாஷிங் மிஷினை பயன் படுத்தாதீர்கள். மின்சார செலவு எக்கச்சக்கமாகிவிடும். உங்கள் உடல் உழைப்பும் குறைந்து போகும்.

* கூடுமானவரை ஒன்றிரெண்டு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் `யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை வாங்கப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, முகச்சவரம் செய்யக் கூடிய ரேசர், எழுத உதவும் பால் பாயிண்ட் பேனா வகைகள். இவை விலை குறைவு. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஏன்?

* நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கு படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் ஒரே நேரத்தில் எல்லாப் புத்தகங்ளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

* உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப் பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

* உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வண்ணக் காகிதங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு யாருக்காவது நீங்கள் பரிசு கொடுக்க நேரும்போது பரிசுப்பொருள் மீது அந்த வண்ணக்காகிதத்தை சுற்றி கொடுக்கலாம்.

* கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

* ரீ-சார்ஜபிள் பேட்டரியோடு, அதை ரீ-சார்ஜ் செய்யும் கருவியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பேட்டரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

* மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

* உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

* மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.

* நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி சார்ஜர், லைட் போன்றவற்றை வழங்குங்கள். அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி-தினத்தந்தி

ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி



உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன்என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். ஏன்?

இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள். கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள்.

இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகிவிட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை. டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது. ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்!

சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக் கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும். பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது. அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.

ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம். அதனால் உடலுக்குள் எண்ணை அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..

* உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

* மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

* முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.

* தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.

* அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.

* இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.

மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலு டன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது. மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக் கான அடையாளங்கள். திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.

வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.

இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும்.

முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.

விளக்கம்: டாக்டர் டி. காமராஜ்,

(பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை.

நன்றி-தினத்தந்தி

Wednesday, November 23, 2011

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!

வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்” என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம்.

கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது.

மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.

பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

உற்சாக ரசாயனம்

உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

மனசே ரிலாக்ஸ்

தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியே வழி

கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

Friday, October 14, 2011

வெட்டிவேர்




பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.



வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.

மருத்துவ பயன்கள்


வேரின் பொடி குளிர்ச்சி தருகிறது. காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது. வெப்பம் தணிக்க பசையாக பூசலாம். இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.

உற்சாகம் தரும்

வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சி உண்டாகும்.

கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.

குளுமை பரவும்

இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.

வயிறு உபாதைகள் நீங்கும்

கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சேர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

வேரிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெயினை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.


இது அனைத்துவகை மண்ணிலும் வளரும்.வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.

6) பயன் தரும் பாகம் -: வேர் மட்டும்.

7) மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது. இதிலிருந்து எடுக்கப் படும்.தைலமும் நறு மணம் கொண்டது. இதனைமணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெய்யை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இதுகாய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.



வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல்எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சிய்ம் உண்டாகும்.
கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.



வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும். வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும்.



கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.


இது அனைத்துவகை மண்ணிலும் வளரும்.வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.

6) பயன் தரும் பாகம் -: வேர் மட்டும்.

7) மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது. இதிலிருந்து எடுக்கப் படும்.தைலமும் நறு மணம் கொண்டது. இதனைமணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெய்யை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இதுகாய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.



வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல்எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சிய்ம் உண்டாகும்.
கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.



வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும். வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும்.



கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

அழகு பலன்களை அள்ளித் தரும் வெட்டி வேர்

பருக்கள் நீங்க....

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - ஒரு டீஸ்பூன்
கொட்டை நீக்கிய கடுக்காய் - 1

இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

தழும்புகள் நீங்க....

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

ஸ்பெஷல் பேக் இது...

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பேக் இது...

வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சருமம் மிருதுவாக:-

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப்பயறு - 100 கிராம்
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்

இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

கூந்தல் மணக்க....

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்

இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

Thursday, October 13, 2011

ஒலி மாசுபடுதல்


ஒரு கண்ணோட்டம் :

இந்த குறிப்பிட்ட ஒலி மாசுபாடானது, தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அதிக பயன்பாட்டால் ஏற்படும் மிகையான சத்தமாகும். நாம் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் சப்தங்களை எழுப்புகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

டெசிபல் முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் – 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். அதாவது

திண்ணத்தின் அளவு – 10 log10 (1/10) (dB)

உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.

ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவின் உதாரணங்கள் பின்வருமாறு:

கேட்பதின் ஆரம்ப நிலை 0 dB மோட்டார் சைக்கிள் (30அடி) 88 dB
சலசலவென ஒலி 20 dB உணவு அரைக்கும் கருவி (3அடி) 90 dB
சிறிய முணுமுணுப்பு (3அடி) 30 dB பாதாளத் தொடர் 94 dB
இரைச்சலற்ற வீடு 40 dB டீசல் வண்டி (30அடி) 100 dB
இரைச்சலற்ற தெரு 50 dB அறுவடை இயந்திரம் (3அடி) 107 dB
சாதாரண உரையாடல் 60 dB காற்றழுத்த முறையில் இயங்கும் கடாவு ஆணி (3அடி) 115 dB
காரின் உள்ளே 70 dB சங்கிலி ரம்பம் (3அடி) 117 dB
சப்தத்துடன் பாட்டு (3அடி) 75 dB அதிக சத்தத்துடன் கூடிய நடனம் 120 dB
மோட்டார் வண்டி (25அடி) 80 dB ஜெட் விமானம் (100அடி) 130 dB

மற்ற ஒலி அளவீடுகள் பின்வருமாறு :

  • சமூக மக்கள் ஒலியின் சமமான / நிகரான நிலை
  • கலவையான ஒலியின் விகிதம்
  • சமமான ஆற்றல் அளவு
  • ஒலி மற்றும் அதன் எண்ணிக்கையின் அட்டவணை
  • ஒலி கதிர்வீச்சின் முன்கணிப்பு
  • ஒலி அலகு
  • ஒலி நிலை
  • ஒலி மாசுபாடு நிலை
  • ஒலி விகிதம்
  • உணர்ந்து கொள்ளும் ஒலியின் நிலை
  • போக்குவரத்து ஒலியின் அட்டவணை
  • சப்தத்தின் அளவு (இரைச்சலின் அளவு)
  • சப்தத்தின் அளவு மீட்டர்
  • சப்த அழுத்த அளவு
  • உலக ஒலி செல்லும் திட்டம்

ஆதாரங்கள் மற்றும் முறைகள் :

ஒலி மாசுவிற்கு கீழ்கண்ட பிரிவுகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.

  • சாலை போக்குவரத்து இரைச்சல்
  • விமான இரைச்சல்
  • இரயில் இரைச்சல்
  • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி
  • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு
  • தொழிற்சாலை இரைச்சல்

ஆதாரம்: http://library.thinkquest.org/co111040/types/types.php.

ஒலி மாசுபாட்டின் விளைவு :

  • தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ் பேர்க் பகுதியானது, இடஅமைப்பு மற்றும் அதிகமாகிவரும் கட்டிடம் போன்றவற்றின் இரைச்சலினால் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் காலை நிலையையும் அதாவது குளிர் காலத்தில் தட்பவெப்பநிலையானது நேர்தலைகீழாக மாறுகிறது (வால்ஸ்லி, 1997).
  • வாழ்வியல் / உடலியல் சார்ந்த விளைவு: அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.
  • உளவியல் சார்ந்த விளைவு: ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொருத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.
  • இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்
  • தொடர்பு (தகவல் தொடர்பு): ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.
  • சோர்வு மற்றும் தலைவலி: ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.
  • தொழில்ரீதியான இரைச்சல்: தொழில் சம்பந்தப்பட்ட இரைச்சலினால் சோர்வு, தலைவலி, உற்பத்தியில் இழப்பு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றது. இதன் விளைவானது பாதிக்கப்படும் மனிதனின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொருத்து அமைகிறது.
  • போக்குவரத்து: மோட்டார் வண்டிகள், பேருந்துகள், இரயில் வண்டி மற்றும் விமானம் போன்றவற்றின் இரைச்சல் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது. அதிக நகர மக்கள் இருக்கும் இடங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இது கட்டுப்படுத்த முடியாத அதிக இரைச்சல் சப்தத்துடன் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். இரயில் வண்டி இயக்கம் அதிகமுள்ள சுற்றுப்புற குடியிருப்புகளில் ஒலியின் அளவானது 80-100 டெசிபல் மற்றும் மூன்று அடுக்கு குடியிருப்பின் திறந்த வெளியில் 90 டெசிபலாகும் பதிவாகிறது.
  • சமூக இரைச்சல்: veitch – ன் படி அதிக இரைச்சலினால் தலைவலி, எரிச்சல், குழப்பம் போன்றவை ஒலி மாசுபட்டால் ஏற்படுகிறது. இந்த நிலையானது கடந்த 20 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. சமூக இரைச்சலுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆய்வுகள் ஆதாரமாகும்.
வார்ட் & சுட்வெல்ட், 1973 மனவழுத்தம், நிலையற்ற தன்மை மற்றும் அதிவேகமான பேச்சு
டேமன், 1977 சுற்றுவட்டப்பகுதியில் சுமூக வாழ்க்கை நிலை பாதித்தல்
ஆப்பிள்யார்டு & லின்டெல், 1972 அக்கம் பக்கத்து வீடுகளில் சமூக உறவு குறைவு
கொஹென், எவன்ட், கிரான்ட்ஸ் & ஸ்டெகோல்ஸ், 1980 பள்ளி சம்பந்தமான செயல் திறன் குறைதல்
கொஹென் மற்றும் சிலர் வீட்ச் 1996 உயர் இரத்த அழுத்தம்

18-19 வயதுடையவர்களில் 60 சதவிகித மக்களின் கேட்கும் திறன் குறைதல்

அய்ரிஸ் & ஹீக்ஸ், 1986 உரத்த இசையால், மனிதனின் ஒருமுகப்படுத்திய தீவிரத்தின் தன்மையில் பாதிப்பு
தைய்கன், 1988 உறக்கம் புறக்கணிப்பு

ஒலி மாசுக்கட்டுப்பாடு :

பாதுகாப்பு

  • அலுவலகங்களில் இரைச்சல் ஏற்படுத்தும் கதவுகள், மதில், மேல் முகப்பு போன்றவற்றின் தொந்தரவை தடுப்பதற்கான வழியை கையாளுதல்
  • திரையரங்கு மற்றும் சினிமா போன்றவற்றில் ஏற்படும் எதிரொலியை தடுக்க கடத்தாப் பொருட்களின் பயன்பாடு
  • தொழிற்சாலையில் வேலை செய்யும் வேலையாட்களை பாதுகாக்க காதுகளில் பொருத்தப்படும் ஒரு கருவியின் பயன்பாடு
  • நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகர குடியிருப்புகளில் கட்டமைப்பானது ஒலித்தடையை கொண்டு அமைப்பதால் போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலை குறைக்கலாம்

தாவர வளர்ப்பு

  • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது

பகுதிகளாக பிரிப்பு

  • குடியிருக்க தகுதியான பகுதிகளாக நகர பகுதிகளை பிரித்து மறுகட்டமைப்பு செய்வது
  • அருகிலிருக்கும் கட்டங்களை பொருத்து தொழிற்சாலை ஒழுங்கான மேம்பாட்டு கூட்டடைப்புடன் பிரித்தல்
நன்றி - http://senthilvayal.wordpress.com

Monday, October 10, 2011

திருவண்ணாமலை கிரிவலம்


நினைத்தாலே முக்தி தரும்' என்ற பெருமையுடன் திருவண்ணாமலை ஒரு மிகச் சிறந்த ஆன்மீக திருத்தலமாக விளங்குகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. சமீபகாலத்தில் இந்த யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உயர்ந்து உள்ளது. முன்பு மலைகளில் வனங்கள், குகைகள் இருந்தன. அதில் பல சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே அடக்கமாயினர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி விட, மலையைச் சுற்றி வந்து மகான்களின் ஆசிகளைப் பெற்றனர். கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர்.

ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் நம் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

Thiruvannamalai

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

திருவண்ணாமலையின் சிறப்பு

இங்குள்ள மலையில் அனேக சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் வாசம் செய்துள்ளனர். அவர்களுள் வேதாந்த மகரிஷி ரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மற்றும் யோகிராம் சுரத்குமார் ஆகியோர் 19 & 20ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் வாழ்ந்து மறைந்தவர்களாவர். இன்றும் இங்கு அனேக சித்தர்கள் உருவகமாகவும் அருவகமாகவும் வாழ்ந்து வருவதாக சொல்கின்றனர்.

தல புராணம்

ஒருமுறை இவ்வுலக ஜீவராசிகளை படைக்கும் தொழிலை மேற்கொண்டவராகிய பிரம்மனுக்கு மும்மூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) தானே உயர்ந்தவர் என்கிற கர்வம் தோன்றியது. நானே அனைத்து ஜீவராசிகளையும் படைப்பவன். நான் இல்லையென்றால் விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வேலையில்லை. ஆகையால் நானே உயர்ந்தவன் என்று கூற, அதை ஏற்க மறுக்கிறார் விஷ்ணு. அப்போது அங்கே ஒளிப்பிழம்பாய் ஜீவஜோதியாய் அந்த சர்வேஸ்வரனே காட்சி தருகிறார். இதைக் கண்ட விஷ்ணுவும், பிரம்மாவும் அந்த ஜோதியின் ஆதியையும் (ஆரம்பம்) அந்தத்தையும் (முடிவு) காண்பவர்களே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு போட்டியை ஆரம்பிக்கின்றனர்.

ஜோதியின் அந்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் மேல்நோக்கி செல்கிறார், அதேபோல் ஆதியை காண்பதற்கு வராக உருவம் கொண்டு பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார் விஷ்ணு. இவர்களது செயலைக் கண்ட சர்வேஸ்வரர் தன் அடியையும் (கால்பாதம்) உச்சியையும் (தலைமுடி) இவர்கள் காணாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் கீழும் வளர்ந்து கொண்டே செல்கிறார்.

பல ஆண்டுகள் ஆகியும் ஆதியையும் அந்தத்தையும் இருவராலும் காண முடியவில்லை. அப்போது அந்த சர்வேஸ்வரனின் தலையில் இருந்து தாழம்பூ பல ஆண்டுகள் பயணித்து கீழே வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த பிரம்மன் இந்த ஜோதி வடிவத்தில் இருப்பவர் சிவனே என்பதைப் புரிந்து கொள்கிறார். பிரம்மன் தான் மேற்கொள்ளும் பயணம் பற்றி தாழம்பூவிடம் கேட்க, நீங்கள் எத்தனை யுகங்கள் முயற்சி செய்து மேலே சென்றாலும் அந்த சர்வேஸ்வரனின் முடியை காண முடியாது என்றது தாழம்பூ. ஆகவே பிரம்மன் ஒரு முடிவெடுத்து தான் சிவனின் முடியைக் கண்டதாக சாட்சியம் சொல்லவேண்டும் என்றும் அதற்காக உனக்கு அடுத்த பிறவியை நல்விதமாக படைக்கிறேன் என்றும் தாழம்பூவிடம் கூறினார். முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென ஒத்துக்கொண்டது தாழம்பூ.

Lord shivaபிரம்மன் தன் பயணத்தை முடித்துக் கொண்டவுடன் சிவனும் தான் வளர்வதை நிறுத்துகிறார். அப்போது விஷ்ணு சிவனின் அடியைக் கண்டு தொட்டு வணங்க, சிவன் விஷ்ணுவைத் தூக்கி ‘நானும்(ஈசன்), நீயும்(திருமால்) ஹரிஹரனே(ஒன்றே)' என்றவாறு விஷ்ணுவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பிரம்மன் தான் சர்வேஸ்வரனின் முடியைக் கண்டதாகவும் அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்று சொல்ல, தாழம்பூவும், ‘ஆம்' என்று சாட்சி சொல்லிற்று. ‘நான்' என்ற அகங்காரம் கொண்டு என்னுடைய முடியைக் காணாமல் கண்டேன் என்று உரைத்ததால் உனக்கு (பிரம்மாவுக்கு) இந்த பூலோகத்தில் கோவில், பூஜைகள் இருக்காது என்று கூறிவிட்டார் சிவன். அதற்கு பொய் சாட்சியம் சொன்னதற்காக தாழம்பூவை யாரும் பூஜைக்காக பயன்படுத்தமாட்டார்கள் எனவும், தாழம்பூவில் பூ நாகம் என்ற விஷப்பாம்பு குடிகொள்ளும் என்றும் தாழம்பூவிற்கு சாபமிட்டார் சிவன்.

எனவேதான், பிரம்மாவிற்கு என்று இப்புவியில் கோவில்கள் இல்லாமல் போயிற்று. மேலும் பொய் சாட்சி சொன்ன தாழம்பூவையும் இப்புவியில் யாரும் பூஜைக்கு பயன்படுத்துவதில்லை. அந்த சிவன் ஜீவஜோதியாய் காட்சி தந்த மலையே திருவண்ணாமலை ஆயிற்று.

கிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்

இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களே.

அருள் தரும் அமாவாசை

இறைவனாகிய சிவன் தேவர்களுக்காக விஷம் உட்கொண்ட நாள் அமாவாசையாகும். தேவர்கள் என்றும் இளமையுடனும், அறிவாற்றலுடனும், திடகாத்திரமான உடலுடனும் வாழ்வதற்கு இறைவன் அளித்த வரமே திருபாற்கடலில் உள்ள அமுதமாகும். அந்த அமுதத்தை எடுக்க வேண்டி தேவர்கள் மலைகளையும் ஆதிசேசன் பாம்பையும் பயன்படுத்தினர். அப்போது ஆதிசேசனின் விஷத்தால் கடலில் உள்ள உயிரினங்கள் அழிந்ததோடு அமுதத்தில் விஷமும் கலந்துவிட்டது. தேவர்களின் வேண்டுதலுக்கிணங்க அந்த சர்வேஸ்வரனே திருவோடேந்தி விஷத்தை பருகுகிறார். அதனால் அவர் மேனி நீலநிறமாக மாறுகிறது. அந்த நேரத்தில் சர்வேஸ்வரனைக் காண மூவுலகிலும் உள்ள தேவர்களும், இப்பூவுலகில் இருந்த அனைத்து சித்தர்களும், யோகிகளும் ஒன்று கூடிய நாளே அமாவாசை. ஆகவே அமாவாசை தினத்தில் கிரிவலம் வருவதால் சித்தர்கள், யோகிகள், மூவுலக தேவர்கள் மற்றும் அந்த சர்வேஸ்வரனின் அருளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொருள் தரும் பெளர்ணமி

கிரிவலம் வருவதற்கு மற்றொரு சிறந்த நாள் பெளர்ணமி ஆகும். இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு இராஜகோபுர வாயிலில் இருந்துதான் பெரும்பான்மையானோர் கிரிவலப் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

கிரிவலப் பயணம்

கிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன.

பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும்.

அடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன.

அடுத்த அரை கிலோமீட்டரில் சாலையின் வலது பக்கத்தில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் பரந்து விரிந்ததாக இருக்கிறது. ஆசிரமத்திலிருக்கும் ஒரு ஆலமரத்தில் திருமணம் நடைபெறுவதற்காக வேண்டிக்கொண்டு தாலிக்கொடிகளும், நாணயங்கள் அடங்கிய துணிகளையும் கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இலவச அன்னதான மண்டபமும் உள்ளே அமைத்திருக்கின்றனர்.

வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன.

மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.

கடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது.

அதைத் தொடந்து வலதுபுறத்தில் ஆதிபராசக்தி சக்தி பீடம் இருக்கிறது. அடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது.

அடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது. அடுத்து வலது புறத்தில் நித்தியானந்தரின் தியான பீடம் இருக்கிறது. இதுவே அவரின் ஆசிரமுமாக செயல்படுகிறது. நுழைவாயிலில் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிதண்ணீர் குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். உள்ளே சென்றால் நித்தியானந்தரின் தியான சத்சங்க வீடியோ காட்சிகளை பெரிய திரையில் வெட்ட வெளியில் ஒளிபரப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.

அடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன.

அடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன.

அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம்.

அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.
கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.

கோவிலின் மாதிரி வடிவம்

Kovil model

கோவிலின் உள்புறத் தோற்றம்:

Kovil inside

கிரிவலம் வரும்போது கடைபிடிக்க வேண்டியவை :

1.அமாவாசை அன்று ஆண்கள் காவி வேட்டியும், துண்டும் அணிந்து செல்லலாம். பெண்கள் செவ்வாடை அணிந்து செல்லலாம்.

2.பெளர்ணமி அன்று ஆண்கள் பச்சை வேட்டி அல்லது வெண்ணிற ஆடை அணிந்து செல்லலாம். பெண்கள் பச்சை ஆடை அணிந்து செல்வது மிகுந்த பலனைத் தரும்.

3.கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துச் செல்வது உத்தமம். அவ்வாறு எடுத்து வரும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலோ அல்லது வியாபாரம் செய்யும் இடத்திலோ வைப்பது மிகுந்த பலன் தரும். எதிர் மறை சக்திகளை அறவே நீக்கும் சக்தி கொண்டதாகக் கூறப்படுகிறது.

4.கிரிவலம் வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஊதுபத்தியும், கற்பூரமும் அவசியம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி நறுமணம் தீய எண்ணங்களைத் தடுக்கும் சக்தி கொண்டது.

5.முக்கியமாக, அமாவாசை-பெளர்ணமி திதி எப்பொழுது ஆரம்பமாகிறது என்று சரியாக பார்த்து செல்ல வேண்டும். திதி முடியும் தருவாயில் அவசர அவசரமாகச் செல்ல வேண்டாம். மேலும் திதி இரவு முழுவதும் இருந்தால் அந்த இரவில் வலம் வருவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

6.கிரிவலத்தின் போது காலணிகள் இல்லாமல் செல்ல வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் மட்டும் வாகனத்தில் வலம் வரலாம்.

7.கிரிவலம் வரும்போது வீண் அரட்டை அடிக்காமல் அமைதியாக பஞ்சாட்சர மந்திரத்தை மனதில் தியானித்துக் கொண்டு செல்ல வேண்டும்.

8.கிரிவலம் முடிந்ததும் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு சென்றால் அதன் முழு பலனையும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம்.

9.பரம்பரையில் வந்த நல்ல குருநாதர்களிடம் சிவதீட்சை பெற்றுக் கொண்டு கிரிவலம் வந்தால் ‘பிறவியில்லா பெருவாழ்வு’ என்ற பேரானந்த நிலை கிடைக்கப் பெறலாம்.

அமைவிடம், செல்லும் வழி

திருவண்ணாமலை கோவில் விழுப்புரத்திற்கும் காட்பாடிக்கும் இடையில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடியிலிருந்து 90 கிலோ மீட்டரிலும் மற்றும் சென்னையிலிருந்து 185 கிலோ மீட்டரிலும் உள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி அடிக்கடி உள்ளது. ஆனால் ரயில் தடம் இந்தப் பகுதியில் இல்லை. ஆகவே, தென் தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் வருபவர்கள் விழுப்புரத்தில் இறங்கி பேருந்தில் செல்லலாம். மேலும், சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, திண்டிவனம், மதுராந்தகம், வேலூர் மற்றும் போலுரில் இருந்தும் பேருந்து வசதி தாராளமாக உள்ளது. பெளர்ணமி நாளில் மட்டும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு தங்குவதாக இருந்தால் கோவிலுக்குச் சொந்தமான விடுதிகளில் வசதிக்கேற்ப 50 ரூபாயிலிருந்து 200 ரூபாய் அளவு வரை தனி ரூம் பிடித்து தங்கிக் கொள்ளலாம். கோவிலுக்கு அருகிலும், சுற்றிலும் தனியார் விடுதிகளும் நிறைய உள்ளன.

இம்மலையில் பல ஜீவ ஆத்மாக்கள் அடங்கியுள்ளன. அவர்களை வலம் வருவது கோரிக்கைகள் நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும், நல்ல பலன்களை அடைவதற்கும் ஒரு வழியாகும். ஜீவ காருண்ய மனதுடன் வலம் வந்தால் தனி நபர் சுபிட்சம் மட்டும் அல்லாது உலக சுபிட்சம் ஏற்படவும் வழி பிறக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


நன்றி - nilacharal

திருண்ணாமலை திருக்கோயில்




அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்




மூலவர்:அருணாச்சலேசுவரர், அண்ணாமலையார்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம்: மகிழமரம்
தீர்த்தம்:பிரம்மதீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை :காரண, காமீகம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருண்ணாமலை
ஊர்:திருவண்ணாமலை
மாவட்டம்: திருவண்ணாமலை
மாநிலம்: தமிழ்நாடு




திருவிழா
:


கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம் *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சந்நிதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. *தினசரி 6 கால பூஜை *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா) *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார். *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்வண்ணமே இருக்கும். *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்
.

தல சிறப்பு:

*லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். *நான் என்ற அகந்தை அழிந்த தலம் *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் *அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். *9 கோபுரம் 7 பிரகாரங்களுடன் 25 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய தலம் *தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். *தமிழகத்தின் திருப்பதி என்று போற்றப்படுமளவுக்கு லட்சோபலட்சம் பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபடும் அதி அற்புத சக்தி வாய்ந்த சிவ தலம். *6 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. சேர சோழ பாண்டிய வைசாள மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்யப்பட்ட மிகப்பழமையான திருக்கோயில் இது. *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம் கிரிவல சிறப்பு : கார்த்திகை மாதம் கிருத்திகை நாளன்றுதான் பார்வதிக்கு சிவன் இடப்பாகம் அளித்தார் என்பதால் அன்றைய தினம் சுற்றுவது சிறப்பு முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது. சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது. இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம். ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும் திங்கள் இந்திர பதவி கிடைக்கும் செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம். புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம் வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும். அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.


திறக்கும் நேரம்:

காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்

அண்ணாமலை பெயர்க் காரணம் :

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

மலை : கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். 1.இந்திர லிங்கம் 2.அக்னி லிங்கம் 3. எமலிங்கம் 4. நிருதி லிங்கம் 5. வருண லிங்கம் 6. வாயுலிங்கம் 7.குபேர லிங்கம் 8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம். இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும்., வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட வந்து இந்த கிரிவலம் செய்கின்றனர்.


பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.

குறிப்பாக மனை அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.


நேர்த்திக்கடன்:

அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள் தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

ஒருநாள் மட்டும் தரிசனம்:

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா
இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.

அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
பெருமாளும் ஜோதி வடிவில்!

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி
இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள "வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

செந்துர விநாயகர்:
ஆஞ்சநேயருக்கு செந்துõரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்துõரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்துõரம் சாத்தும் வைபவம் நடக்கும்.
இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

நந்திக்கு பெருமை
மாட்டுப்பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.

முதல் வணக்கம் முருகனுக்கே!

கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு துõணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார்' (கம்பம் துõண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

ஆணவம் அடக்கும் பைரவர்:
இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நான்கு முகத்துடன் லிங்கம்:
பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்:
மகான் ரமணருக்கு மரணம்
பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர் களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்

அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். "கிளி கோபுரம்' என்றே இதற்கு பெயர்.

அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை "அருணகிரி யோகேசர்' என்கிறார்கள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம். இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும்.இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
விஞ்ஞானம் அடிப்படையில்:
நாட்களில் நிலவின் ஒளி மலை மீதும், மலையிலுள்ள மூலி‌கை செடிகள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது. அந்த நாட்களில் மலையை சுற்றி வந்தால் மலையிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்மீது பட்டு உடலும் உள்ளமும் தூய்மையடைகிறது. மலையைச் சுற்றும் போது கைகளை வீசிக் கொண்டு நடக்காமல் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.

Friday, September 23, 2011

எழும்பூர் ரெயில் நிலையம்

ன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்’ ஆக்கிவிட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.

முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.

வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக் காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

நன்றி-தினத்தந்தி

தாய்பாலின் அதிசயங்கள்.

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.